Winter Tips : குளிர்காலத்தில் சளி அடிக்கடி வருதா? இந்த உணவுகளை உடனே ஒதுக்கிவிடுங்க
குளிர்காலத்தில் சளி, இருமல் இருக்கும் சமயத்தில் என்னென்ன உணவுகளை சாப்பிடக்கூடாது என்பது குறித்து இங்கு காணலாம்.

தற்போது ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. மாலை நேரத்தில் குளிரின் தாக்கம் அதிகமாகவே இருக்கிறது. குளிர் இதமான சூழலாக இருந்தாலும் இந்த சீசனில் வைரஸ் மற்றும் தொற்றுகள் காரணமாக உடலில் நோய் எதிர்ப்பு சக்திகள் குறைந்துவிடும். இதனால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை என அனைவரும் சளி, இருமல், காய்ச்சல் போன்ற பிரச்சனைகளை சந்திப்பர். இதை அசால்டாக விட்டால் நுரையீரலில் சளி தங்கி, மூச்சு விடுவதற்கு சிரமத்தை ஏற்படுத்தும். இத்தகைய சூழ்நிலையில் குளிர்காலத்தில் சளி, இருமல் இருக்கும் போது சில உணவுகள் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். அவை என்னென்ன என்று இங்கு காணலாம்.
குளிர்காலத்தில் சளி, இருமல் இருக்கும் போது சாப்பிடக்கூடாத உணவுகள் :
குளிர்காலத்தில் சளி, இருமல் இருக்கும் போது குளிர்ச்சியான உணவுகளை சாப்பிட வேண்டாம். மீதி சாப்பிட்டால் சளி, இருமல் மற்றும் தொண்டை வலி மேலும் அதிகரிக்கும். எனவே இந்த சீசனில் குளிர்ச்சியான உணவுக்கு பதிலாக சூடான சூப், சூடான கஞ்சி, மூலிகை தேநீர் போன்றவற்றை குடிக்கலாம்.
அதுபோல இந்த குளிர்ச்சியான சீசனில் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறையும் என்பதால் வைட்டமின் சி நிறைந்த உணவுகளை சாப்பிடுங்கள் என்பார்கள். அன்னாச்சி பழத்தில் வைட்டமின் சி, ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், தாதுக்கள், நார்ச்சத்துக்கள், மாங்கனீசு போன்ற ஊட்டச்சத்துக்கள் இருந்தாலும் குளிர்காலத்தில் சளி, இருமல் பிரச்சனை உள்ளவர்கள் அன்னாச்சி பழத்தை சாப்பிட்டால் ஒவ்வாமையை அதிகரிக்கும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
அடுத்தபடியாக குளிர் காலத்தில் காபி குடிப்பதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் காபியில் இருக்கும் காஃபின் தொண்டை தசைகளை உலர்த்தி உடல் சோர்வை ஏற்படும். அதுபோல டீயையும் குடிக்க நிறுத்திவிடுங்கள்.
பலர் குளிர்க்காலத்தில் ஜஸ்கிரீம் சாப்பிட விரும்புவார்கள். ஆனால், அதை சாப்பிட்டால் சளி, இருமல் பிரச்சினை தீவிரமாகும்.

