தைராய்டு பிரச்சனையால் ஏற்படும் தொப்பையை குறைக்க இந்த ஒரு மூலிகை பானத்தை குடியுங்கள். விரைவில் தொப்பை குறையும்.
தைராய்டு சுரப்பி என்பது நம்முடைய உடலின் ஒட்டுமொத்த வளர்ச்சியை மாற்றத்தை ஒழுங்குபடுத்த உதவும் ஒரு ஹார்மோன் ஆகும். அதாவது உடலின் வெப்பநிலை, இதயத்துடிப்பு, எடை போன்றுவற்றை நிரூபிப்பதற்கு இது உதவுகிறது. இந்த தைராய்டு சுரப்பியானது குறைவாக சுரந்தால் அதீத பசி, பதட்டம், திடீரென உடல் எடை அதிகரிப்பு போன்றவற்றை ஏற்படுத்தும். குறிப்பாக வயிற்று சுற்றி கொழுப்புகள் குவிய தொடங்கும். இதை குறைப்பது சவாலான விஷயம். ஆனால் இங்கு கொடுக்கப்பட்டுள்ள மூலிகை பானத்தை குடித்து வந்தால் சிறந்த தீர்வு கிடைக்கும். அது என்ன? அதை தயாரிப்பது எப்படி? என்று இங்கு பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
கொத்தமல்லி விதைகள் - 1 ஸ்பூன் இலவங்கப்பட்டை தூள் - 1 சிட்டிகை ஜாதிக்காய் தூள் - 1 சிட்டிகை இஞ்சி தூள் - 1 சிட்டிகை சீரகத்தூள் - 1 சிட்டிகை எலுமிச்சை சாறு - அரை ஸ்பூன் மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
செய்முறை :
ஒரு பாத்திரத்தில் மேலே சொல்லப்பட்டுள்ள எலுமிச்சை சாறு தவிர அனைத்து பொருட்களையும் போட்டு ஒரு 2 கிளாஸ் தண்ணீர் ஊற்றி பாதியாக வரும் வரை கொதிக்க வைக்கவும். தண்ணீர் ஆரியதும் அதில் எலுமிச்சை சாறு சேர்த்து குடிக்க வேண்டும். தொடர்ந்து குடித்து வந்தால் சில நாட்களில் தொப்பை குறையந்துவிடும்.
மசாலா பொருட்களின் நன்மைகள் :
சீரகம் :
சீரகத்தில் நிறைந்திருக்கும் இரும்புச்சத்து இது தைராய்டு ஹார்மோன் உற்பத்திக்கு நேரடியாக உதவி செய்கிறது மற்றும் வளர்ச்சிதை மாற்றத்தை துரிதப்படுத்தி, கொழுப்பை எரிக்கும் செயல்முறையை வேகப்படுத்துகிறது.
ஜாதிக்காய் :
ஜாதிக்காய் சக்தி வாய்ந்த அலர்ஜி எதிர்ப்பு முகவராகும். இது தைராய்டு பிரச்சனைகள் ஏற்படும் வீக்கத்தை குறைக்கவும் ஹார்மோன் சமநிலையை ஒழுங்குபடுத்தவும் உதவுகிறது.
இலவங்கப்பட்டை :
இன்சுலின் உணர்திறனை மேம்படுத்த இது முக்கிய பங்கு வகிக்கிறது. வீக்கத்தை குறைக்கவும், தைராய்டு சுரப்பியை தூண்டவும், ஹார்மோன் அளவை குறைக்கவும் இது உதவும்.
கொத்தமல்லி விதைகள் :
தைராய்டு பிரச்சனை உள்ளவர்களுக்கு கொத்தமல்லி விதை சிறந்த தீர்வாக இருக்கும். ஏனெனில் இது வீக்கத்தை குறைக்கவும், செரிமானத்தை மேம்படுத்தவும், மெதுவான வளர்ச்சிதை மாற்றத்துடன் தொடர்புடைய மலச்சிக்கல் போன்ற செரிமான பிரச்சனைகளை சமாளிக்கவும் இது பெரிதும் உதவுகிறது.
மஞ்சள் தூள் :
மஞ்சள் தூளில் இருக்கும் குர்குமின் என்ற கலவை ஒட்டுமொத்த உடல் வீக்கத்தை குறைக்க பெரிதும் உதவுகிறது. மேலும் தைராய்டு ஹார்மோன் செயல்பாட்டால் ஏற்பட்ட வீக்கத்தையும் குறைக்கும்.
எலுமிச்சை சாறு :
எலுமிச்சையில் வைட்டமின் சி நிறைந்துள்ளன. இது தவிர இதில் ஆக்சிஜனைகளும் உள்ளன. இவை உடலில் இருந்து நச்சுக்களை நீக்கி செரிமான மண்டலம் மற்றும் வளர்ச்சியை மாற்றம் சிறப்பாக செயல்பட உதவுகிறது.


