- Home
- உடல்நலம்
- Weight Loss Mistakes : டயட்டே இருக்காதீங்க! நீங்க குண்டா இருக்க முதல் காரணம் அதுதான்! நிபுணர் ஷாக்கிங் தகவல்
Weight Loss Mistakes : டயட்டே இருக்காதீங்க! நீங்க குண்டா இருக்க முதல் காரணம் அதுதான்! நிபுணர் ஷாக்கிங் தகவல்
நீங்கள் அறியாமல் செய்யும் 5 தவறுகள் எடை குறையாமல் இருப்பதற்கு காரணமாக இருக்கலாம் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

Weight Loss Mistakes
நீங்கள் அனைத்தையும் முயற்சி செய்தாலும் உடல் எடை குறையாமல் இருக்க முக்கிய காரணம் நீங்கள் செய்யும் சில தவறுகள்தான். உங்களுடைய சில பழக்கங்கள் வளர்சிதை மாற்றம், ஹார்மோன் சமநிலை, ஒட்டுமொத்த ஆற்றல் நிலையை பாதிக்கின்றன. இந்தப் பதிவில் எடை குறையாமல் இருக்கக் காரணமான 5 காரணங்களை காணலாம்.
காலை உணவை தவிர்த்தல்
காலை உணவை தவிர்ப்பதால் எடை குறையாது. மாறாக இது அந்தநாளை உற்சாகம் இழக்கச் செய்யும். சரியான காலை உணவை சாப்பிடுவது அதிகமான கலோரி உட்கொள்ளலைக் குறைக்க உதவும். எடை இழப்பை வேகப்படுத்தும். காலை உணவை தவிர்த்தால் உடல் கொழுப்பை எரிப்பதற்குப் பதிலாக சேமிக்க ஆரம்பிக்கும். அதிகமாக பசி எடுக்கும். அதிகமாக உண்ணும்போது எடை அதிகமாகும். புரதம், நார்ச்சத்து, குறைந்தளவு கார்போஹைட்ரேட் உணவுகளை காலை உண்ணலாம்.
பதப்படுத்தப்பட்ட உணவுகள்
சர்க்கரை இல்லாத உணவு என சொல்லப்படுகிற எல்லா உணவுகளும் எடை இழப்புக்கு ஏற்றவை அல்ல. இந்த வகை உணவுகளில் சில பதப்படுத்தப்பட்டவை. இதில் செயற்கை இனிப்புகள், மறைக்கப்பட்ட சர்க்கரை இருப்பதால் உடலின் இயற்கையான பசி சுழற்சியை மாற்றும். அதிக பசியை ஏற்படுத்தும். இதனால் நிறைய சாப்பிடுவீர்கள். இந்த உணவுகளை தவிர்த்து பழங்கள், காய்கறிகள் ஆரோக்கியமான கொழுப்புகள் இருக்கும் உணவுகளை உண்ணலாம்.
தூக்கம்
எடை குறைக்க நினைத்தால் நன்றாக தூங்க வேண்டும். தூக்கம் உடலின் மீட்சிக்கு உதவும். தசை வளர்ச்சிக்கு அவசியம். தூக்கமின்மை கிரெலின், லெப்டின் ஆகிய பசியைக் கட்டுப்படுத்தும் ஹார்மோன் அளவுகளில் ஏற்றத்தாழ்வுகள் வரும். இதனால் பகலில் அதிக பசி எடுக்கும். சீரான வளர்சிதை மாற்ற செயல்பாட்டிற்கு தினமும் 7 முதல் 8 மணிநேரம் நன்றாக தூங்க வேண்டும்.
கார்டியோ பயிற்சிகள்
இவை இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும். ஓடுதல், சைக்கிள் ஓட்டுதல் அல்லது நீச்சல் ஆகிய பயிற்சிகள் மூலம் கலோரிகளை எரிக்கலாம். வலிமைப் பயிற்சிகளை செய்யாமல் வெறும் கார்டியோ மட்டும் செய்வது எதிர்மறையான விளைவை ஏற்படுத்தக் கூடும். இதனால் தசை இழப்பு ஏற்படும். கொழுப்பை எரிக்கும் வளர்சிதை மாற்றம் தாமதமாகும். அதனாலேயே எடை இழப்பு ஏற்படாது. எடையை குறைக்க விரும்பினால் கார்டியோ, வலிமைப் பயிற்சி ஆகிய இரண்டும் அவசியம்.
கடுமையான டயட்
நீங்கள் வெறித்தனமான உணவுமுறைகள் மூலம் வேகமாக எடை குறைக்கலாம். ஆனால் நீங்கள் டயட்டை கைவிட்டால் இருமடங்கு எடை அதிகமாகும். இவை நிலையானதாகவோ, ஆரோக்கியமானதாகவோ இருக்காது. கடுமையான டயட் வளர்சிதை மாற்றத்தை தாமதமாக்கி எடையை குறையவிடாது. ஊட்டச்சத்து குறைபாட்டை உண்டாக்கிவிடும். கட்டுப்படுத்தப்பட்ட டயட்டை பின்பற்றிய சில நாட்களில் அதிகமாக சாப்பிடும் வாய்ப்புகள் ஏற்படலாம்.
மேலே சொல்லப்பட்ட ஐந்து தவறுகளை தவிர்க்கும் போது உடல் எடை தானாகக் குறைவதை நீங்களே கவனிப்பீர்கள். சரியான உணவு பழக்கமும், போதிய தூக்கமும், மிதமான உடற்பயிற்சியுமே எடையை குறைப்பதில் பெரும் பங்காற்றுகின்றன.

