- Home
- Cinema
- பிக் பாஸ் சீசன் 9 பாக்க பாக்க தான் புரியும்; போக போக தான் தெரியும் – பிக் பாஸ் தமிழ் சீசன் 9 டீசர் வெளியீடு!
பிக் பாஸ் சீசன் 9 பாக்க பாக்க தான் புரியும்; போக போக தான் தெரியும் – பிக் பாஸ் தமிழ் சீசன் 9 டீசர் வெளியீடு!
Bigg Boss Tamil Season 9 Teaser Released : விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருக்கும் பிக் பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சியின் டீசர் வெளியாகி வைரலாகி வருகிறது.

Bigg Boss Tamil Season 9 Teaser Released : ஒவ்வொரு ஆண்டும் விஜய் டிவியில் பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சி ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. இதுவரையில் பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சிகள் நிறைவுற்ற நிலையில் 9ஆவது சீசனுக்கான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது. ஏற்கனவே பிக் பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சியானது அக்டோபர் முதல் வாரத்தில் ஒளிபரப்பு செய்யப்படும் என்று தகவல் வெளியாகியிருந்த நிலையில் தற்போது பிக் பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சியின் புரோமோ வீடியோவை விஜய் டிவி வெளியிட்டுள்ளது. மேலும், விரைவில் டீசர் என்றும் குறிப்பிட்டிருந்தது. விஜய் டிவி வெளியிட்ட இந்த புரோமோவில் விஜய் சேதுபதி சேரில அமர்ந்து திரும்புவது போன்ற வீடியோ காட்சி இடம் பெற்றுள்ளது.
இந்த நிலையில் தான் தற்போது பிக் பாஸ் தமிழ் சீசன் 9 டீசர் வெளியாகியுள்ளது. அதில், விஜய் சேதுபதி பிக் பாஸ் சீசன் 9 பாக்க பாக்க தான் புரியும்; போக போக தான் தெரியும் என்று டயலாக் பேசுகிறார். இதற்கிடையில் ஒண்ணுமே புரியல என்பதற்கான வீடியோ காட்சிகள் இடம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் தொடர்ந்து 7 சீசன்களை கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய நிலையில் 8ஆவது சீசனை முதல் முறையாக விஜய் சேதுபதி தொகுத்து வழங்கினார். அதனால், அவர் மீது அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டது. மேலும், கமல் ஹாசனைப் போன்று விஜய் சேதுபதியால் இந்த நிகழ்ச்சியை சரிவர கொண்டு செல்ல முடியவில்லை என்றெல்லாம் பேச்சு அடிபட்டது. ஏனென்றால் இந்த சீசனில் தான் முதல் முறையாக விஜய் சேதுபதி பார்க்க ஆரம்பித்தார். அதனால் நிகழ்ச்சியை பற்றி புரிந்து கொள்வதற்கு சற்று காலதாமதம் ஏற்பட்டதாக சொல்லப்பட்டது. அதன் பிறகு நாட்கள் செல்ல செல்ல விமர்சர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்நிகழ்ச்சியை வெற்றிகரமாக தொகுத்து வழங்கினார்.
பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியில் முத்துக்குமரன் டைட்டில் வின்னராக தேர்வு செய்யப்பட்டார். சௌந்தர்யா நஞ்சுண்டன் 2ஆவது இடம் பிடித்தார். இந்த நிகழ்ச்சியானது இறுதிப் போட்டி டிஆர்பி மட்டும் 10.50 ரேட்டிங் பெற்றது. இதே போன்று சீசன் 8 தொடக்க விழா நிகழ்ச்சி டிஆர்பி ரேட்டிங்கில் 9 புள்ளிகள் பெற்றது. இந்த நிலையில் தான் இந்த நிகழ்ச்சியில் விஜய் டிவி பிரபலங்கள் தான் போட்டியாளர்களாக கலந்து கொள்ள இருப்பதாக தகவல் வெளியானது.
பிக் பாஸ் போட்டியாளர் லிஸ்ட்
இந்த நிலையில், பிக் பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக கலந்துகொள்ள உள்ளது யார்.. யார் என்கிற தகவல் கசிந்துள்ளது. அதன்படி குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தற்போது போட்டியாளர்களாக கலந்துகொண்டுள்ள ஷபானா மற்றும் உமைர் ஆகியோர், இந்த ஆண்டு பிக் பாஸ் நிகழ்ச்சியில் களமிறங்க உள்ளார்களாம். இவர்கள் இருவருக்கும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலமே ஏராளமான ரசிகர்கள் உள்ள நிலையில், தற்போது பிக் பாஸில் எண்ட்ரி கொடுத்தால் மிகவும் டஃப் ஆன போட்டியாளர்களாக இவர்கள் இருக்க அதிக வாய்ப்பு உள்ளது.
விஜய் டிவி சீரியல் பிரபலங்கள்
வழக்கமாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் விஜய் டிவி சீரியல் பிரபலங்கள் அதிகளவில் கலந்துகொள்வார்கள். அந்த வகையில் இந்த ஆண்டும் நான்கு விஜய் டிவி சீரியல் நட்சத்திரங்கள் களமிறங்க உள்ளார்களாம். அதன்படி விஜய் டிவியில் ஒளிபரப்பான தென்றல் வந்து என்னை தொடு சீரியலில் நடித்த வினோத் பாபு இந்த ஆண்டு பிக் பாஸில் கலந்துகொள்ள உள்ளாராம். இதுதவிர மிஸ்டர் அண்ட் மிஸ்சஸ் சின்னத்திரை நிகழ்ச்சியின் மூலம் ஃபேமஸ் ஆன சீரியல் நடிகர் புவி அரசுவும் இந்த ஆண்டு பிக்பாஸில் எண்ட்ரி கொடுக்க உள்ளாராம். இதுதவிர பாக்கியலட்சுமி சீரியல் நடிகைகள் நேஹா மேனன் மற்றும் அக்ஷிதா அசோக் ஆகியோர் போட்டியாளராக கலந்துகொள்ள உள்ளார்களாம்.
லீக்கான போட்டியாளர் லிஸ்ட்
இதுதவிர தமிழ் சினிமாவில் காமெடியனாக பல்வேறு படங்களில் கலக்கி வரும் பால சரவணனும் இந்த ஆண்டு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள உள்ளாராம். இதுதவிர இன்ஸ்டா பிரபலமும், புகழ்பெற்ற விஜேவுமான பார்வதியும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர்களுடன் நடன இயக்குனர் சதீஷ் கிருஷ்ணன் மற்றும் நடிகை அம்ருதா ஸ்ரீனிவாசன் ஆகியோரும் கலந்துகொள்ள உள்ளதாக கூறப்படுகிறது.
ஒண்ணுமே புரியலையே..🎶🎵
Bigg Boss Tamil Season 9 - பாக்க பாக்க தான் புரியும்.. போக போக தான் தெரியும்..😀 விரைவில் நம்ம விஜய் டிவில.#BiggBossTamil#BiggBoss#BiggBossTamilSeason9#OnnumePuriyala#BiggBoss9#BB9#BBT#VijayTV#VijayTelevisionpic.twitter.com/f1R113QW6T— Vijay Television (@vijaytelevision) September 5, 2025
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.