சிம்ரனுக்காக வைக்கப்பட்ட தளபதி விஜய்யின் யூத் மூவி பாடல் – ரசிகர்கள் கொண்டாட்டம்!
Tourist Family Simran Dance For Youth Songs : டூரிஸ்ட் ஃபேமிலி படம் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் அந்தப் படம் இடம் பெற்ற பாடல் ஒன்று அவருக்காகவே வைக்கப்பட்டுள்ளது. அதைப் பற்றி பார்க்கலாம்.

ஒன்ஸ் மோர் படத்தின் மூலமாக அறிமுகமான சிம்ரன்
Tourist Family Simran Dance For Youth Songs : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்தவர் நடிகை சிம்ரன். ஒன்ஸ் மோர் படம் மூலமாக தமிழ் சினிமாவில் படம் மூலமாக அறிமுகமானார். தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். ஒன்ஸ் மோர் படத்திற்கு பிறகு விஐபி, நேருக்கு நேர், பூச்சூடவா, கொண்டாட்டம், அவள் வருவாளா, நட்புக்காக, கண்ணெதிரே தோன்றினாள், துள்ளாத மனமும் துள்ளும், வாலி, ஜோடி, கண்ணுபட போகுதய்யா, பிரியமானவளே என்று ஏராளமான படங்களை வரிசையாக ஹிட் கொடுத்தார்.
எல்லா படங்களையும் ஹிட் கொடுத்தவர் சிம்ரன்
சினிமாவில் தான் நடித்த எல்லா படங்களையும் வரிசையாக ஹிட் கொடுத்த பெருமை சிம்ரனை சேரும். கடைசியாக 2009 ஆம் ஆண்டு திரைக்கு வந்த ஐந்தாம் படை படத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு 5 ஆண்டுகளுக்கு பிறகு ஆஹா கல்யாணம் படத்தில் நடித்தார். சீமராஜா, பேட்ட, அந்தகன் ஆகிய படங்களில் நடித்திருந்த சிம்ரன் கடந்த ஏப்ரல் மாதம் திரைக்கு வந்த குட் பேட் அக்லீ படத்தில் அஜித்துடன் இணைந்து நடித்து ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றார். இந்தப் படம் ஹிட் கொடுத்த நிலையில் இந்தப் படத்திற்கு பிறகு திரைக்கு வந்த டூரிஸ்ட் ஃபேமிலி படத்தில் சசிகுமார் உடன் இணைந்து நடித்திருந்தார்.
சிம்ரன் நடித்த டூரிஸ்ட் ஃபேமிலி
இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில் சசிகுமார், சிம்ரன், யோகி பாபு, எம் எஸ் பாஸ்கர், ரமேஷ் திலக், பகவதி பெருமாள், ஸ்ரீஜா ரவி, ஹார்ட்பீட் புகழ் யோகலட்சுமி இளங்கோ குமரவேல் என்று ஏராளமான நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். இந்தப் படம் கடந்த 1ஆம் தேதி வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இலங்கையிலிருந்து தப்பித்து அகதிகளாக சென்னை வந்து அன்றாட வாழ்க்கை வாழ்ந்து வரும் ஒரு நடுத்தர் குடும்பத்தை சேர்ந்தவர்களின் வாழ்க்கையை இந்தப் படம் பிரதிபலிக்கிறது.
டூரிஸ்ட் ஃபேமிலி பாக்ஸ் ஆபிஸ் வசூல்
காமெடி கலந்த ஒரு ஜானரில் இந்தப் படத்தை இயக்குநர் கொடுத்திருந்தார். மே 1ஆம் தேதி திரைக்கு வந்த இந்தப் படம் முதல் நாளில் இந்தியளவில் இந்தப் படம் ரூ.2 கோடி வசூல் குவித்திருந்த நிலையில் 2ஆவது நாளில் ரூ.1.7 கோடி வசூல் குவித்துள்ளது. 3ஆவது நாளில் ரூ.2.5 கோடி வசூல் குவித்த நிலையில் 4ஆவது நாளான நேற்று இந்தப் படம் ரூ.3.5 கோடி வசூல் குவித்திருப்பதாக கூறப்படுகிறது.
Actress Simran
மொத்தமாக டூரிஸ்ட் ஃபேமிலி 4 நாட்களில் ரூ.9.7 கோடி வரையில் வசூல் குவித்திருக்கிறது. இந்த நிலையில் இந்தப் படத்தில் கண்டினுட்டி இல்லாமல் சிம்ரனுக்காக ஒரு பாடல் வைக்க வேண்டுமே என்பதற்காகவே யூத் படத்தில் இடம பெற்ற அட ஆழ்த்தோட்ட பூபதி நானடா என்ற பாடல் இடம் பெற்றுள்ளது. சிம்ரன் மற்றும் விஜய்யின் டான்ஸ் கெமிஸ்டரி சினிமாவில் இன்றும் பேசப்பட்டு வருகிறது. அதிலேயும் இந்தப் பாடல் பட்டிதொட்டியெங்கும் ஃபேமஸ். அப்பட்டிப்பட்ட இந்த பாடலுக்கு சிம்ரனை டான்ஸ் ஆட வைத்திருக்கிறார் இயக்குநர்.
சிம்ரனுக்காகவே வைக்கப்பட்ட சூப்பர் ஹிட் பாடல்
மொத்தமாக டூரிஸ்ட் ஃபேமிலி 4 நாட்களில் ரூ.9.7 கோடி வரையில் வசூல் குவித்திருக்கிறது. இந்த நிலையில் இந்தப் படத்தில் கண்டினுட்டி இல்லாமல் சிம்ரனுக்காக ஒரு பாடல் வைக்க வேண்டுமே என்பதற்காகவே யூத் படத்தில் இடம பெற்ற அட ஆள்த்தோட்ட பூபதி நானடா என்ற பாடல் இடம் பெற்றுள்ளது. சிம்ரன் மற்றும் விஜய்யின் டான்ஸ் கெமிஸ்டரி சினிமாவில் இன்றும் பேசப்பட்டு வருகிறது. அதிலேயும் இந்தப் பாடல் பட்டிதொட்டியெங்கும் ஃபேமஸ். அப்பட்டிப்பட்ட இந்த பாடலுக்கு சிம்ரனை டான்ஸ் ஆட வைத்திருக்கிறார் இயக்குநர்.
யூத் படத்தில் இடம் பெற்ற ஆள்த்தோட்ட பூபதி
யூத் படத்தில் எப்படி டான்ஸ் ஸ்டெப் போட்டு டான்ஸ் ஆடியிருந்தாரோ அதே போன்று இந்தப் படத்தில் சேலையில் டான்ஸ் ஸ்டெப் போட்டு ரசிகர்களை வியக்க வைத்திருக்கிறார். சமீபகாலமாக பழைய படங்களின் பாடல்கள் புதிய படங்களில் இடம் பெற்று வருவது வாடிக்கையாக இருந்து வருகிறது. அதுமட்டுமின்றி படத்தில் இடம் பெறும் புதிய பாடல்களுக்கு கிடைக்கும் வரவேற்பை விட பழைய பாடல்களுக்கு அந்தளவு வரவேற்பு கிடைத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

