2025-ல் 100 கோடிக்கு மேல் வசூலை வாரிசுருட்டியும் அட்டர் பிளாப் ஆன டாப் 5 படங்கள்
2025-ல் பல படங்கள் ரூ.100 கோடிக்கு மேல் வசூல் செய்தன. ஆனால், அவை பாக்ஸ் ஆபிஸில் தோல்வி மற்றும் டிசாஸ்டர் படங்களாக அமைந்தன. அது என்னென்ன படங்கள் என்பதை பார்க்கலாம்.

100 Crore Collected Flop Movies
100 கோடி வசூல் என்பது தற்போது சர்வ சாதாரணமாகிவிட்டது. அப்படி இருக்கையில் 2025-ம் ஆண்டு வெளியான படங்களில் 100 கோடி வசூலித்தும் தோல்வியை சந்தித்த சில திரைப்படங்கள் இருக்கின்றன. அவை எந்தெந்த படங்கள் என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம். இதில் தமிழ் படமும் உள்ளது.
விடாமுயற்சி
நடிகர் அஜித் நடிப்பில் பிரம்மாண்டமாக எடுக்கப்பட்ட திரைப்படம் விடாமுயற்சி. லைகா நிறுவனம் தயாரித்த இப்படத்தை மகிழ் திருமேனி இயக்கி இருந்தார். இதில் அஜித்துடன் திரிஷா நடித்திருந்தார். சுமார் 250 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.137 கோடி மட்டும் வசூலித்து தோல்வி அடைந்தது.
கேம் சேஞ்சர்
இந்த பான் இந்தியன் ஆக்ஷன் படத்தை எஸ். ஷங்கர் இயக்கியிருந்தார். இதில் ராம் சரண், கியாரா அத்வானி, எஸ்.ஜே.சூர்யா ஆகியோர் நடித்திருந்தனர். இப்படம் சுமார் ரூ.450 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டது. இப்படம் பாக்ஸ் ஆபிஸில் வெறும் ரூ.131.2 கோடி மட்டுமே வசூலித்து படுதோல்வியை சந்தித்தது.
வார் 2
YRF ஸ்பை யுனிவர்ஸின் இந்தப் படத்தை அயன் முகர்ஜி இயக்கியிருந்தார். இதில் ஹிருத்திக் ரோஷன், ஜூனியர் என்.டி.ஆர், கியாரா அத்வானி ஆகியோர் நடித்திருந்தனர். ரூ.325 கோடியில் உருவான இப்படம், லைஃப் டைம் வசூலாக வெறும் ரூ.236.55 கோடி மட்டுமே வசூலித்து தோல்வியடைந்தது.
தம்மா
இந்த ஹாரர் காமெடி படத்தை ஆதித்யா சர்போதார் இயக்கியுள்ளார். ஆயுஷ்மான் குரானா, ராஷ்மிகா மந்தனா, நவாசுதீன் சித்திக் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ரூ.140 கோடியில் உருவான இப்படம், பாக்ஸ் ஆபிஸில் ரூ.134.78 கோடி மட்டுமே வசூலித்து அட்டர் பிளாப் ஆனது.
சிக்கந்தர்
சல்மான் கான் நடித்த இந்த ஆக்ஷன் படத்தை ஏ.ஆர். முருகதாஸ் இயக்கியிருந்தார். ராஷ்மிகா மந்தனா, சத்யராஜ் ஆகியோரும் நடித்திருந்தனர். இதன் பட்ஜெட் ரூ.200 கோடி. ஆனால், பாக்ஸ் ஆபிஸில் பெரும் நஷ்டத்தைச் சந்தித்தது. இப்படத்தின் ஒட்டுமொத்த வசூல் ரூ.110.36 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

