MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • வாய்தவறி வந்த வார்த்தை... த்ரிஷாவிற்காக நயினார் வருத்தம்... அண்ணாமலை விட்ட டோஸ்..!

வாய்தவறி வந்த வார்த்தை... த்ரிஷாவிற்காக நயினார் வருத்தம்... அண்ணாமலை விட்ட டோஸ்..!

த்ரிஷாவை விஜயுடன் ஒப்பிட்டு பேசியதற்கு நயினார் நாகேந்திரனை பாஜகவை சேர்ந்த தலைவர்கள் பலரும் கடிந்து கொண்டதாகக் கூறப்படுகிறது.

2 Min read
Author : Thiraviya raj
| Updated : Feb 16 2026, 03:56 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
த்ரிஷா விஜய் பற்றி சர்ச்சை பேச்சு
Image Credit : Social Media

த்ரிஷா- விஜய் பற்றி சர்ச்சை பேச்சு

சமீபத்தில் தமிழக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், தவெக தலைவர் விஜய்யை விமர்சிக்கும் வகையில் நடிகை த்ரிஷாவின் பெயரை இழுத்து அநாகரிகமாகக் கருத்து தெரிவித்திருந்தார். "விஜய், நடிகை த்ரிஷாவிடம் இருந்து வெளியே வர வேண்டும். வீட்டிலிருந்து வெளியே வர வேண்டும்" போன்ற வார்த்தைகளைப் பயன்படுத்தியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதற்கு த்ரிஷா கடும் கண்டனம் தெரிவித்தார். தனது வழக்கறிஞர் மூலம் வெளியிட்ட அறிக்கையில், ‘‘மாநில அரசியலில் உயர்ந்த நிலை வகிக்கும் ஒருவரின் இழிவான மற்றும் அருவருக்கத்தக்க கருத்தை எதிர்பார்க்கவில்லை. நான் எந்த அரசியல் கட்சி உடனும் தொடர்பில் இல்லை. அரசியல் கட்சியில் சேரும் எண்ணமும் இல்லை. இதற்கு முன்பும் தொடர்ந்து தெரிவித்ததுபோல், அரசியல் விவகாரங்களில் எப்போதும் நடுநிலையான நிலைப்பாட்டையே கடைப்பிடித்து வருகிறேன்.

24
நயினாருக்கு த்ரிஷா நோட்டீஸ்
Image Credit : Asianet News

நயினாருக்கு த்ரிஷா நோட்டீஸ்

என்னுடைய கலைத் திறமையால் மட்டுமே என்னை மதிப்பிட வேண்டும். அரசியல் தொடர்புகள் என்ற குற்றச்சாட்டுகளால் அல்ல. தனிப்பட்ட வாழ்க்கையைப் பொதுவெளியில் விவாதப் பொருளாக்கக் கூடாது என்பது பொதுவான நெறிமுறை. உயர்ந்த பதவியில் இருப்பவர்கள் பொதுவெளியில் பேசும்போது பொறுப்புணர்ச்சியுடனும், சமநிலையுடனும் நடந்து கொள்ள வேண்டும். எனது பெயரை எனக்கு தொடர்பில்லாத விவகாரங்களில் இழுக்க வேண்டாம்’’ என திரிஷா கூறி இருந்தார்.

Related Articles

Related image1
டி20: இந்தியாவிடம் தோற்றது கையாளாகத் தனம்..! நக்வி வாயைக் கிழித்த பாக்., ராணுவ தலைவர்..!
34
வருத்தம் தெரிவித்த நயினார்
Image Credit : Instagram

வருத்தம் தெரிவித்த நயினார்

இந்த விவகாரத்தில் பாமக ராமதாஸ், பாஜகவைச் சேர்ந்த வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்தனர். இதனால் அழுத்தம் அதிகரித்த நிலையில், நயினார் நாகேந்திரன் நெல்லையில் நிருபர்களிடம் பேசியபோது வருத்தம் தெரிவித்துள்ளார். "எனது அரசியல் வாழ்க்கையில் யாரையும் தனிப்பட்ட முறையில் விமர்சித்ததில்லை. அன்று தவறி வந்த ஒரு வார்த்தைதான் யாரேனும் வருத்தப்பட்டிருந்தால், மனப்பூர்வமாக வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன். எனது அரசியல் வாழ்க்கையில் தனிப்பட்ட விமர்சனம் வைத்ததில்லை’’ என்றும் விளக்கினார்.

44
அண்ணாமலை விட்ட டோஸ்
Image Credit : x

அண்ணாமலை விட்ட டோஸ்

முன்னதாக த்ரிஷாவை விஜயுடன் ஒப்பிட்டு பேசியதற்கு நயினார் நாகேந்திரனை பாஜகவை சேர்ந்த தலைவர்கள் பலரும் கடிந்து கொண்டதாகக் கூறப்படுகிறது. நேற்று நயினார் நாகேந்திரனை சந்தித்த அண்ணாமலை,  த்ரிஷா- விஜய் பற்றி பேசியதற்கு ‘‘நீங்கள் மிக உயர்ந்த பொறுப்பில் இருக்கிறீர்கள். த்ரிஷா- விஜய் பற்றி ஒப்பிட்டு பேசி இருக்கக்கூடாது. அந்த விவகாரம் நமது கண்ணியத்தை குறைத்து விட்டது. அதற்காக வருத்தம் தெரிவித்து விடுங்கள்’’ எனக் கூறி இருக்கிறார் அண்ணாமலை. அவரைப்போலவே நயினார் நாகேந்திரனிடம் பலரும் வருத்தம் தெரிவிக்கச் சொல்லி அறிவுறுத்தி இருக்கிறார்கள். தொடர் அழுத்தங்களால் இப்போது நயினார் நாகேந்திரன் வருத்தம் தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

TR
Thiraviya raj
விஜய் (நடிகர்)
திரிஷா

Latest Videos
Recommended Stories
Recommended image1
ரூ.30 கோடியில் ஹெலிகாப்டர் பரிசு... பிரபல நடிகைக்கு சிறையில் இருந்து காதலன் அனுப்பிய காஸ்ட்லி கிஃப்ட்!
Recommended image2
பட்டைய கிளப்பும் குத்து பாடல்கள்! தாத்தா பாட்டிகளை கூட எழுந்து ஆட்டம் போட வைக்கும் டாப் 10 லிஸ்ட் இதுதான்!
Recommended image3
எந்த தொடர்பும் இல்ல... இத்தோட நிறுத்திக்கோங்க! நயினார் நாகேந்திரனுக்கு தரமான பதிலடி கொடுத்த த்ரிஷா
Related Stories
Recommended image1
டி20: இந்தியாவிடம் தோற்றது கையாளாகத் தனம்..! நக்வி வாயைக் கிழித்த பாக்., ராணுவ தலைவர்..!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved