ரஜினி உதவி இயக்குநராக வேலை பார்த்த படம் எது தெரிமா? அதுவும் இந்த இயக்குநரிடமா..?
பாபா, வள்ளி போன்ற சில படங்களில் கதை, திரைக்கதை எழுதி இருந்தாலும் முழு இயக்குநராக அவர் எந்தப் படத்தையும் எடுத்ததில்லை

படமே இயக்காத ரஜினி
பஸ் கண்டக்டராக தன் வாழ்க்கையைத் தொடங்கி, பின்னர் அடையாறு ஃபிலிம் இன்ஸ்டியூட்டில் நடிப்பு பயிற்சி பெற்று, 1975-ல் அபூர்வ ராகங்கள் படத்தின் மூலம் நடிகராக அவதாரமெடுத்தவர் ரஜினி காந்த். அதன் பிறகு தொடர்ந்து நடிகராகவே ஹீரோ, வில்லன், சப்போர்ட்டிங் ரோல்களில் நடித்டு சூப்பர் ஸ்டாராக 170 படங்களை கடந்து விட்டார் ரஜினி. அவர் பாபா, வள்ளி போன்ற சில படங்களில் கதை, திரைக்கதை எழுதி இருந்தாலும் முழு இயக்குநராக அவர் எந்தப் படத்தையும் எடுத்ததில்லை
ரஜினி தனது சொந்த குரலில் பாடிய ஒரேயொரு பாடல், மன்னன் படத்தில், “அடிக்குது குளிரு...’’ பாடல் மட்டும் தான். இந்நிலையில் அவர் ஒரே ஒரு படத்தில் இரண்டு நாட்கள் மட்டுமே உதவி இயக்குநராக பணிபுரிந்துள்ளார் என்பது தான் ஆச்சரியத் தகவல்.
மைசூரில் ஷுட்டிங்
1988-ம் ஆண்டு வெளிவந்த படம் குரு சிஷ்யன். இதில் ரஜினி, பிரபு, கவுதமி, சீதா, சோ.ராமசாமி உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இந்தப் படத்தை ரஜியின் ஆஸ்தான இயக்குநர் எஸ்.பி.முத்துராமன் டைரக்ட் செய்து இருந்தார். மீனா பஞ்சு அருணாசலம் தயாரித்து, இளையராஜா இசையமைத்து இருந்தார்.
பாண்டியன், ராதாரவி, ரவிச்சந்திரன், செந்தாமரை, வினுசக்ரவர்த்தி, மனோரமாவும் நடித்து இருந்தனர். குரு சிஷ்யன் படத்திற்கு ரஜினிகாந்த் 25 நாட்கள் கால்ஷீட் கொடுத்திருந்தார். படத்தின் பாடல் காட்சிகள் மைசூரில் உள்ள பிருந்தாவன் கார்டனில் படமாக்கப்பட்டு வந்தது. அங்கு ரஜினி, கவுதமி ஆடிய பாடல் காட்சி படமாக்கப்பட்ட பிறகு இரண்டாவது நாயகனான பிரபு -சீதா ஆடிப் பாடிய பாடல் காட்சி படமாக்கப்பட்டது.
2 நாட்களை வீணாக்காத ரஜினி
இந்த பாடல் ஷூட் செய்தபோது வேறு வழியே இல்லாமல் ரஜினி தனக்கு ஒதுக்கப்பட்ட அறையிலேயே காத்திருந்தார். இதை கவனித்த எஸ்.பி.முத்துராமன் "ஏன் காத்திருக்கிறீர்கள். வேண்டுமானால் சென்னைக்கு போய் விட்டு வாங்களேன். நான் அதற்குள் இந்தப் பாடலை முடித்து விடுகிறேன்" என்று சொல்ல, அதற்கு ரஜினி "நான் இந்தப் படத்திற்கு 25 நாட்கள் தான் கால்ஷீட் கொடுத்து இருக்கிறேன். நீங்கள் என்னுடைய இரண்டு நாட்களை வீணாக்க வேண்டாம். யோசித்து முடிவெடுங்கள்" என்று கூறியுள்ளார்.
ரூம்ல சும்மா இருக்க முடியல
அதற்கு எஸ்.பி.முத்துராமனோ "பரவாயில்ல... நான் சொன்ன தேதிக்குள் படத்தை முடித்து விடுவேன். நீங்கள் போய்ட்டு வாங்க" எனச் சொல்லி இருக்கிறார். மறுநாள் சீதா, பிரபு ஆடிப்பாடிய பாடல் காட்சி படமாக்கப்பட்ட போது நேரே ரஜினிகாந்த் அங்கே சென்றுள்ளார். "நான் சம்பளம் வாங்கிட்டு சும்மா ரூம்ல இருக்க விரும்பல. அதனால, இன்னைக்கும், நாளைக்கும் எனக்கு ஏதாவது ஒரு வேலை கொடுங்க. நான் செய்கிறேன்" என்று ரஜினி கேட்டுக் கொண்டுள்ளார்.
அசிஸ்டெண்ட் டைரக்டராக மாறிய ரஜினி
இதைக் கேட்டு ஆச்சரியமடைந்த இயக்குநர் எஸ்.பி.முத்துராமன் "உங்களுக்கு என்ன வேலை பிடிச்சிருக்கோ அதைச் செய்யலாம்" எனக் கூறி இருக்கிறார். "நான் உங்களுக்கு அசிஸ்டெண்ட் டைரக்ட்ரா வேலை செய்கிறேன்' எனக் கூறிவிட்டு ரஜினி காந்த் அந்த இரண்டு நாட்களும் பிரபு -சீதா ஆடி நடித்த பாடல் காட்சிக்கு உதவி இயக்குனராக பணியாற்றியுள்ளார். அந்தப் பாடல்தான் 'வா வா வஞ்சி இளமானே...'
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.
