கணவரின் தம்பியோடு 14 படங்களில் ரொமான்ஸ் செய்த லேடி சூப்பர்ஸ்டார் - யார் தெரியுமா?
இந்திய திரையுலகில் லேடி சூப்பர்ஸ்டாராக வலம் வந்த நடிகை ஒருவர் தன்னுடைய கணவரின் தம்பியோடு 14 படங்களில் ஜோடி சேர்ந்து நடித்திருக்கிறார்.

ஸ்ரீதேவி - போனி கபூர் ஜோடி
சினிமா பல ஆச்சர்யங்களை உள்ளடக்கியது. இங்கு மகளாக நடித்த நடிகையுடனே ஜோடி சேர்ந்து நடித்த பல ஹீரோக்களை பார்த்திருக்கிறோம். அந்த வகையில் ஒரு விநோத கூட்டணி பற்றி தான் தற்போது பார்க்க உள்ளோம். அதன்படி தன்னுடைய கணவரின் தம்பியோடு 14 படங்களில் ஜோடி சேர்ந்து நடித்த நடிகை பற்றி தான் பார்க்க உள்ளோம். இந்த 14 படங்களில் 10 படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தன. அந்த நடிகைக்கு லேடி சூப்பர்ஸ்டார் அந்தஸ்து கிடைக்கவும் இப்படங்கள் கைகொடுத்திருந்தன. அந்த நடிகை வேறுயாருமில்லை ஸ்ரீதேவி தான்.
லேடி சூப்பர்ஸ்டார் ஸ்ரீதேவி
இவர் தமிழ்நாட்டை சேர்ந்தவராக இருந்தாலும் இவர் தமிழுக்கு நிகராக பாலிவுட்டிலும் அதிக படங்களில் நடித்திருக்கிறார். தமிழில் மூன்று முடிச்சு படம் மூலம் அறிமுகமானார் ஸ்ரீதேவி. அப்போது அவருக்கு வயது வெறும் 13 தான். அதன்பின்னர் இரண்டு ஆண்டுகளிலேயே முன்னணி நாயகியாக உயர்ந்துவிட்டார் ஸ்ரீதேவி. ஸ்ரீதேவியின் கெரியரில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திய படம் 16 வயதினிலே. பாரதிராஜா இயக்கிய இப்படம் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டது. அதில் ஹீரோக்கள் மாறினாலும், ஹீரோயினாக ஸ்ரீதேவியே நடித்தார்.
இதையும் படியுங்கள்... ஒரு நாளைக்கு ரூ.1 லட்சமா? சம்பள விஷயத்தில் கெத்து காட்டும் டாப் சீரியல் ஹீரோயின்ஸ்!
ஸ்ரீதேவி - அனில் கபூர்
தெலுங்கில் ரீமேக் செய்த பின்னர் இந்தி ரீமேக்கில் நடிக்க பாரதிராஜா அழைத்தப்போது வேண்டா வெறுப்பாக தான் மும்பைக்கு பிளைட் ஏறி சென்றிருக்கிறார் ஸ்ரீதேவி. பின்னர் அங்கு கனவு நாயகியாக உருவெடுத்துவிட்டார். தன்னுடைய வாழ்க்கை துணையையும் பாலிவுட்டில் இருந்தே தேர்வு செய்துவிட்டார் ஸ்ரீதேவி. அதன்படி தயாரிப்பாளர் போனி கபூரை காதலித்து அவரை கரம்பிடித்தார் ஸ்ரீதேவி. பாலிவுட்டில் ஸ்ரீதேவி அதிக படங்களில் நடித்த ஹீரோக்களில் அனில் கபூரும் ஒருவர். இவர் வேறுயாருமில்லை, ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூரின் தம்பி தான் இந்த அனில் கபூர்.
போனிகபூர் சகோதரர் அனில் கபூர்
அனில் கபூர் உடன் ஜோடி சேர்ந்து மொத்தம் 14 படங்களில் நடித்திருந்தார் ஸ்ரீதேவி. அதில் 10 படங்கள் பாக்ஸ் ஆபிஸில் மாஸ் ஹிட் அடித்தன. இதில் மற்றுமொரு சுவாரஸ்ய தகவல் என்னவென்றால் அனில் கபூர் - ஸ்ரீதேவி கூட்டணியில் வெளிவந்த பெரும்பாலான படங்களை போனி கபூர் தான் தயாரித்து இருந்தார். இவர்கள் கூட்டணியில் வந்த ஜூடாய் திரைப்படம் கடந்த 1997-ம் ஆண்டு ரிலீஸ் ஆகி பாக்ஸ் ஆபிஸில் ரூ.48 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது.
இதையும் படியுங்கள்... துப்பாக்கியை தூக்கிய சாமுண்டீஸ்வரி; பாட்டி விட்ட சவால்! அதிர்ச்சியில் கார்த்திக் - கார்த்திகை தீபம் அப்டேட்!
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.