என் திருமணக் கனவு அதுதான்: காதலர் சாந்தனுவுடன் வாழ்வு குறித்து மனம் திறந்த ஸ்ருதி ஹாசன்!
Shruti Haasan Wedding Dream Revealed : நடிகை ஸ்ருதிஹாசனுக்கு தனது திருமணம் இப்படித்தான் நடக்க வேண்டும் என்று ஆசை ஏற்பட்டுள்ளது அதைப்பற்றி பார்க்கலாம்.

கமல் ஹாசன் மகள் ஸ்ருதி ஹாசன்
கமலஹாசனின் மூத்த மகள் தான் ஸ்ருதிஹாசன். இவரும் ஒரு நடிகை தான். இவர் தமிழ் தெலுங்கு மலையாளம் என பல மொழிகளில் ஹீரோனியாக நடித்து வருகிறார். ஸ்ருதிஹாசன் நடிகை மட்டுமல்லாமல் ஒரு நல்ல பாடகி. அவர் தனது அப்பாவிற்கு பாடல்களை பாடியுள்ளார் அது மட்டுமல்லாமல் ஹீரோகளுக்கான இன்ட்ரொடக்சன் பாட்டும் அவர் பாடியிருக்கிறார்.
ஸ்ருதி ஹாசன்
இவர் நடித்த படங்கள் ஏழாம் அறிவு, த்ரீ (3), சிங்கம் 3 ஆகிய படங்கள் இவருக்கு தமிழில் கிடைத்தது இவர் நடிப்பு திறமையை பல படங்களில் காட்டியுள்ளார் அது மட்டுமல்லாமல் விஷாலுடன் பூஜை படத்திலும் இவர் ஹீரோயினியாக நடித்துள்ளார்.
ஸ்ருதிஹாசனின் காதல்:
ஸ்ருதிஹாசன் இதுவரை காதல் மட்டுமே செய்து கொண்டிருக்கிறார். கல்யாணம் செய்யவில்லை ஏனென்றால் கல்யாணம் என்றாலே பயம்தான் என்று சில இன்டர்வியூ மற்றும் நேர்காணல் மூலம் இவர் தெரிவித்துள்ளார். இதுவரை இவர் இரண்டு காதல் செய்து பிரேக்கப் பண்ண நிலையில் தற்போது ஒரு காதல் டூயட் பாடி வந்து கொண்டிருக்கிறார் ஆனால் அது கல்யாணம் செய்வாரா என்பது தெரியாது என்று கூறியுள்ளார்.
காதலனை வெளிப்படுத்திய ஸ்ருதி
ஸ்ருதிஹாசன் சாந்தனு ஹசாரிகாவை காதலித்து வந்த நிலையில் instagramயில் தனது போட்டோக்கள் மூலம் தனது காதலனை வெளிப்படுத்தி வந்தார் ஆனால் தற்போது அமைதியாக இருந்து வரும் நிலையில் இந்த காதல் கைகூடுமா என்று தெரியவில்லை. இதுவரையிலும் கல்யாணம் பற்றி பேசாமல் இருந்து வரும் ஸ்ருதிஹாசன் எனக்கு கல்யாணம் இப்படித்தான் நடக்க வேண்டும் என்னும் ஒரு விஷயத்தை ஒரு நேர்காணலில் கூறியுள்ளார்.
திருமணம்:
தாய்மை: கல்யாணம் செய்தால் கண்டிப்பாக தாயாக இருக்க வேண்டும். கல்யாணம் செய்தால் கண்டிப்பாக குடும்பம் என்று வாழ்ந்தாக வேண்டும். நான் கண்டிப்பாக திருமணம் செய்தால் குழந்தை பெற்று எடுப்பேன். குழந்தைகளுக்கு அம்மா, அப்பா இரண்டு பேருமே முக்கியம்தான். கண்டிப்பாக சிங்கிள் மலராக நான் இருக்க மாட்டேன். அதனால்தான் நான் கல்யாணம் நல்ல "பார்ட்னர்" வேண்டும் .
ஸ்ருதிஹாசன் எனக்கு திருமணம் நடந்தால் எளிமையாக ரிஜிஸ்டர் ஆபீஸில் எங்களது திருமணத்தை ரிஜிஸ்டர் செய்து சிம்பிளாக முடித்து விடுவேன் . நேர்காணலில் கூறியுள்ளார் ஸ்ருதிஹாசன். அது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.