'சல்மான் கான் காரில் வெடிகுண்டு வைப்போம்' வாட்ஸ் அப்பில் வந்த பகீர் மிரட்டல்
பாலிவுட் நடிகர் சல்மான் கானுக்கு மீண்டும் கொலை மிரட்டல் வந்துள்ளது. மும்பை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Death Threat For Salman Khan : பாலிவுட் நடிகர் சல்மான் கானுக்கு மீண்டும் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மும்பை வொர்லியில் உள்ள போக்குவரத்து துறைக்கு அனுப்பிய வாட்ஸ்அப் மெசேஜில் இந்த கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. சல்மான் கானின் கார் வெடிகுண்டு வைத்து தகர்க்கப்படும் என்றும் சல்மானை கொலை செய்வோம் என்றும் அந்த மெசேஜில் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. மும்பை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Salman khan
சல்மான் கானுக்கு மிரட்டல் விடுக்கப்படுவது ஏன்?
கடந்த சில ஆண்டுகளாக சல்மான் கானுக்கு குண்டர் தலைவர் லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலிடம் இருந்து நேரடியாகவும் மறைமுகமாகவும் பல மிரட்டல்கள் வந்துள்ளன. 1998ஆம் ஆண்டு மான் வேட்டை வழக்கில் சல்மான் கானை குறிவைத்து இந்த கும்பல் தாக்குதல் நடத்தப்போவதாக அடிக்கடி மிரட்டல் விடுத்து வருகிறது. பிஷ்னோய் சமூகத்திற்கு கருப்பு மான் மதரீதியாக முக்கியத்துவம் வாய்ந்தது. அதை வேட்டையாடியதால் சல்மான் கானை அந்த சமூகத்தினர் டார்கெட் செய்து வருகிறார்கள்.
இதையும் படியுங்கள்... பெரிய மனுஷன் பண்ற வேலையா இது! காரில் ஏறிய ராஷ்மிகாவை தரதரவென இழுத்த சல்மான் கான்
Salman khan death threat
சல்மான் கான் வீட்டில் துப்பாக்கிச் சூடு
கடந்த ஆண்டு சல்மானின் வீட்டின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இது முடிந்து ஒரு வருடம் நிறைவடையும் நிலையில் தற்போது அதே ஏப்ரல் 14ந் தேதி புதிய மிரட்டல் வந்துள்ளது. கடந்த ஆண்டு இதே நாளில் தான் சல்மான் கானும் அவரது குடும்பத்தினரும் வசிக்கும் கேலக்ஸி அபார்ட்மெண்ட் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. அதிகாலையில் தூங்கிக் கொண்டிருந்தபோது பட்டாசு வெடிப்பது போன்ற சத்தம் கேட்டதாக சல்மான் கூறினார். தன்னையும் தனது குடும்பத்தையும் கொலை செய்ய அவர்கள் முயற்சிப்பதாக சல்மான் கூறினார்.
Bollywood Actor Salman Khan
6 பேர் கைது
பின்னர் சல்மான் கானுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது. இந்த துப்பாக்கி சூடு சம்பவத்துக்கு பின் குண்டர் தலைவர் லாரன்ஸ் பிஷ்னோயின் சகோதரர் அன்மோல் பிஷ்னோய் ஃபேஸ்புக் பதிவில் தாக்குதலுக்குப் பொறுப்பேற்றார். மகாராஷ்டிரா ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கட்டுப்பாட்டுச் சட்ட வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் சல்மானின் வீட்டின் வெளியே நடந்த துப்பாக்கிச் சூடு வழக்கில் போலீசார் 1,735 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். விக்கி குமார் குப்தா, சாகர் குமார் பால், சோனு குமார் பிஷ்னோய், அனுஜ் குமார் தாபன், முகமது ரஃபீக் சவுத்ரி, ஹர்பால் சிங் ஆகியோர் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டனர். கைதுக்குப் பிறகு போலீஸ் காவலில் அனுஜ் குமார் தற்கொலை செய்து கொண்டார். மற்ற ஐந்து பேரும் தற்போது நீதிமன்ற காவலில் உள்ளனர்.
இதையும் படியுங்கள்... ஐஸ்வர்யா திருமணத்தில் சல்மான் சந்தோஷப்பட்டாரா?
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.