- Home
- Cinema
- தனுஷின் இட்லி கடைக்கு பயந்து இந்த வாரம் தியேட்டர் மற்றும் ஓடிடியில் ஒரு டஜன் படங்கள் ரிலீஸ்..!
தனுஷின் இட்லி கடைக்கு பயந்து இந்த வாரம் தியேட்டர் மற்றும் ஓடிடியில் ஒரு டஜன் படங்கள் ரிலீஸ்..!
தனுஷின் இட்லி கடை திரைப்படம் அக்டோபர் 1-ந் தேதி ரிலீஸ் ஆவதால், அதற்கு பயந்து இந்த வாரம் தியேட்டரில் மட்டும் 12 படங்கள் ரிலீஸ் ஆகின்றன. அதன் பட்டியலை பார்க்கலாம்.

Theatre Release Movies
தியேட்டர் ரிலீஸ் படங்கள்
செப்டம்பர் 25 மற்றும் 26ந் தேதி தியேட்டரில் மொத்தம் 12 படங்கள் ரிலீஸ் ஆகின்றன. அதன்படி ரம்யா பாண்டியன் மற்றும் ஷிவதா நடித்த கயிலன், ஸ்ரீலீலாவின் டப்பிங் படமான கிஸ் மீ இடியட், அருண் பாண்டியன் மற்றும் நட்டி நட்ராஜ் நடிப்பில் உருவாகி இருக்கும் ரைட், ரிஷி ரித்விக் நடிப்பில் உருவான குற்றம் தவிர், ஷகீலா, மதுமிதா, மிலா நடிப்பில் தயாராகி இருக்கும் சரீரம், புதுமுகங்கள் நடித்த டோர் நம்பர் 420, ஆதி மற்றும் ஆறுமுகம் இயக்கத்தில் ஹரிஷ் மற்றும் மேக்னா நடித்த பனை, ராஜசோழன் இயக்கியுள்ள ஐஏஎஸ் கண்ணம்மா, ஷான் நிகம் நடிப்பில் சாய் அபயங்கர் இசையமைத்துள்ள பல்டி ஆகிய படங்கள் 26ந் தேதி ரிலீஸ் ஆகின்றன.
இதுதவிர எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில் விஜய், ஜோதிகா நடித்த பிளாக்பஸ்டர் ஹிட் படமான குஷி வருகிற செப்டம்பர் 25-ந் தேதி திரையரங்குகளில் ரீ-ரிலீஸ் ஆக உள்ளது. இதனுடம் தெலுங்கு நடிகர் பவர் ஸ்டார் மற்றும் நடிகை பிரியங்கா மோகன் நடித்த ஓஜி திரைப்படமும் செப்டம்பர் 25-ல் ரிலீஸ் ஆகிறது. இதுதவிர தமிழில் எம்.சுந்தர் இயக்கத்தில் உருவாகி உள்ள அந்த 7 நாட்கள் திரைப்படமும் வருகிற செப்டம்பர் 25-ந் தேதி திரைகாண உள்ளது.
நெட்பிளிக்ஸ் ஓடிடி ரிலீஸ் படங்கள்
பிரெஞ்சு லவ்வர்
பாரிஸை மையமாகக் கொண்ட இந்த ரொமான்டிக் டிராமா, ஒரு நடிகர் மற்றும் பணியாளரின் எதிர்பாராத காதல் கதையை காட்டுகிறது. செப்டம்பர் 26ந் தேதி நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீம் ஆக உள்ளது.
மான்டிஸ்
தென் கொரிய ஆக்ஷன் த்ரில்லர். இம் சி-வான், பார்க் கியு-யங் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். செப்டம்பர் 26ந் தேதி முதல் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீம் ஆகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
ஓடும் குதிரை சாடும் குதிரை
பகத் பாசில் மற்றும் கல்யாணி பிரியதர்ஷன் நடிப்பில் வெளிவந்த மலையாள திரைப்படமான ஓடும் குதிரை சாடும் குதிரை திரைப்படம் செப்டம்பர் 26ந் தேதி நெட்பிளிக்ஸில் வெளியாகிறது.
ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி ரிலீஸ் படங்கள்
ஹிருதயபூர்வம்
மோகன்லால் நடித்த இந்த ஃபீல் குட் என்டர்டெய்னர், திரையரங்குகளில் ரூ.75 கோடிக்கு மேல் வசூலித்து வெற்றி பெற்றது. இப்போது செப்டம்பர் 26 முதல் ஜியோஹாட்ஸ்டார் ஓடிடியில் வருகிறது.
சுந்தரகாண்டம்
40 வயது நபரின் வாழ்க்கையில் காதல் நுழைந்த பிறகு ஏற்படும் திருப்பங்களை இந்த தெலுங்கு ரொமான்டிக் காமெடி காட்டுகிறது. செப்டம்பர் 23ந் தேதி முதல் ஜியோஹாட்ஸ்டாரில் ஸ்ட்ரீம் ஆகிறது.
அமேசான் பிரைம் ஓடிடி ரிலீஸ் படங்கள்
ஹோட்டல் காஸ்டீரா
ஹோட்டலில் பணிபுரியும் டேனியலின் வாழ்க்கை எதிர்பாராத விதமாக மாறுகிறது. இந்த த்ரில்லர் பிரைம் வீடியோவில் செப்டம்பர் 24ம் தேதி வெளியாகிறது.
கொக்கைன் குவார்ட்டர் பேக்
ஓவன் ஹான்சனின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட இந்த ஆவணப்படம் செப்டம்பர் 25ம் தேதி முதல் அமேசான் பிரைம் வீடியோவில் ஸ்ட்ரீம் ஆகிறது.
சர்கீத்
ஒரே நாளில் நடக்கும் எதிர்பாராத நிகழ்வுகளைச் சுற்றிய இந்த டிராமா செப்டம்பர் 26ந் தேதி முதல் மனோரமா மேக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

