இரத்த தானம் செய்த ரசிகர்களுக்கு விருந்து; பாராட்டி புகழ்ந்து பேசிய நடிகர் கார்த்தி!
Karthi Meet His Fans Hosts Feast : இரத்த தானம் செய்த தனது ரசிகர்களை ஊக்கப்படுத்தும் விதமாக நடிகர் கார்த்தி அவர்களுக்கு விருந்து கொடுத்துள்ளார்.

கார்த்தியின் மார்ஷல் படம்
Karthi Meet His Fans Hosts Feast : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் கார்த்தி. பருத்திவீரன் படம் மூலமாக ஹீரோவாக எண்ட்ரி கொடுத்த கார்த்தி இன்று ஹிட் தி தேர்டு கேஸ் வரையில் பல படங்களில் நடித்து ஹிட்டும் கொடுத்துள்ளார். தற்போது கார்த்தி நடிப்பில் சர்தார் 2 மற்றும் வா வாத்தியார் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்த 2 படங்களும் விரைவில் வெளியாக இருக்கிறது.
மார்ஷல் படப்பிடிப்பு
தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம் என்று அனைத்து மொழிகளிலும் ரசிகர்கள் பட்டாளங்களை கொண்டுள்ளார். இவர்கள் வெறும் ரசிகர்கள் மட்டுமில்லாமல் மாவட்டம் தோறும் பொது மக்களுக்கு பல நல்ல காரியங்களை செய்பவர்களாகவும் இருக்கிறார்கள். அந்த வகையில் கடந்த மே 25 ஆம் தேதி கார்த்தி தனது 48ஆவது பிறந்தநாளை கொண்டாடினார். அப்போது, அவரது பிறந்தநாளை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள ரசிகர்கள் அரசு மருத்துவமனைகளில் இரத்ததானம் செய்தனர்.
கார்த்தி நடித்த ஹிட் மூவிஸ்
சென்னையில் உள்ள ரசிகர்கள் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் இரத்த தானம் செய்தார்கள். இவ்வாறு இரத்த தானம் செய்தவர்களில் 250 ரசிகர்களை கார்த்தி நேரில் அழைத்து சந்தித்து பேசியுள்ளார். இந்த நிலையில் தான் சென்னை தியாகராய நகரில் இரத்த தானம் செய்தவர்களுக்கு நடிகர் கார்த்தி சான்றிதழ் வழங்கி, விருந்தளித்தார். மேலும், இரத்த தானம் செய்ததற்கு நன்றி தெரிவித்த நடிகர் கார்த்தி அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.
கார்த்தியின்29ஆவது படம்
அப்போது பேசிய கார்த்தி, பிறந்தநாளில் நான் ஊரில் இல்லை, அதனால் உங்களை யாரையும் என்னால் சந்திக்க முடியவில்லை. ஆனால், இத்தனை பேர் ரத்ததானம் கொடுத்திருப்பதை எண்ணும் போது சந்தோஷமாக இருக்கிறது. என் நண்பர் வைத்திருக்கும் வாட்ஸ்அப் க்ரூப்பில் இரத்தம் கிடைக்கவில்லை என்று சொல்லி கொண்டே இருப்பார்கள்.
சர்தார் 2 படம்
அதை கேட்கும் போது ஆச்சரியமாக இருக்கிறது. இன்றும் இரத்தம் கிடைப்பது பிரச்சினையாக இருக்கும் நிலையில், நீங்கள் அனைவரும் இரத்தம் கொடுத்து இருப்பது பல அம்மாக்கள், குழந்தைகள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கு சந்தோஷப்படுத்தி இருக்கிறது.
சர்தார் 2, கார்த்தி நடித்து ஹிட் கொடுத்த படங்கள்
இதற்கு உங்கள் அனைவருக்கும் மனதில் இருந்து நன்றி தெரிவித்து கொள்கிறேன். இரத்த தானம் கிடைத்த பிறகு அவங்க உயிருக்கு பயம் இல்லை என்ற நிலையில் முகத்தில் தெரியும் சிரிப்பு விலை மதிப்பற்றது. உங்களை பார்க்கும் போது மறுபடியும் தோன்றுவது, உடன் பிறந்த அண்ணனோ, தம்பியோ இல்லை ஆனால் நீங்கள் என் மீது காட்டும் அன்பிற்கு காலம் முழுக்க நன்றி சொன்னாலும் போதாது.
ரசிகர்களை சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொண்ட கார்த்தி
காலத்திற்கும் உழைத்து கொண்டு இருக்க வேண்டும். நீங்கள் பெருமை கொள்ளும் அளவுக்கு விஷயங்களை செய்து கொண்டிருக்க வேண்டும் என ஆண்டவனை வேண்டிக்கொள்கிறேன். இந்த அன்பு கிடைக்க நான் கொடுத்து வைத்திருக்க வேண்டும். உங்கள் ஒவ்வொருத்தருக்கும் Love You என்று தான் சொல்ல வேண்டும்.
பிறந்தநாளுக்கு இரத்த தானம் செய்த ரசிகர்களை சந்தித்த கார்த்தி
கார்த்தி நடிப்பில் இப்போது மார்ஷல் படம் படமாக்கப்பட்டு வருகிறது. இயக்குநர் தமிழ் இயக்கத்தில் டிரீம் வாரியர் நிறுவனம் தயாரிப்பில் இந்தப் படம் உருவாகி வருகிறது. இந்தப் படத்தில் கார்த்திக்கிற்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கிறார். மேலும், பிரபு, சத்யராஜ் ஆகியோர் பலரும் நடித்து வருகின்றனர். 1960 மற்றும் 70ஆம் ஆண்டுகளில் நடக்கும் ராமேஸ்வரம் தொடர்பான கதைகளை மையப்படுத்தி இந்தப்படம் படமாக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.