இது ஜன நாயகன் சாங் இல்ல தவெக சாங்; புயலாக வந்திறங்கிய ‘ஒரு பேரே வரலாறு’ அதிரடி அப்டேட்
Jana Nayagan song a TVK party anthem Oru Pere Varalaaru : தவெக கட்சியின் தலைவர் தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ஜனநாயகன் பாடல் ப்ரோமோ வெளியாகி Social Mediaவில் அனல் பறக்கச் செய்துள்ளது.

Jana Nayagan Movie, Jana Nayagan Second Single
2026 ல் பொங்கல் பண்டிகை முன்னிட்டு ஜனவரி ஒன்பதாம் தேதி அன்று ஜன நாயகன் திரைப்படம் வெளியாக உள்ளது. தற்போது அந்த படத்திற்காக ரசிகர் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பும் ஆர்வமும் இருக்கும் நிலையில் இரண்டாவது பாடலாக ஒரு பேரே வரலாறு என்னும் பாடல் ப்ரோமோ தற்போது வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அலற விட்டுள்ளது. தேர்தலுக்கான பாடலாகி வெளியாக இருக்கிறது. இந்த பொங்கலுக்கு நம்ம தான் தளபதி பொங்கல் என்றும் விஜயின் வெறித்தனமான ரசிகர்கள் அனைவரும் அந்த வீடியோவை தனது கமெண்ட்ஸ்கள் மூலம் அதிர விடுகின்றனர்.
பாடல் ரிலீஸ், Jana Nayagan Promo, Tamil Nadu History Political Song
டிசம்பர் 18ஆம் தேதி அன்று மாலை 6:30 மணி அளவில் இந்த இந்தப் பாடல் ரிலீஸ் ஆக உள்ளது. இந்தப் பாடல் தவெகவின் தேர்தலுக்கான பாடலாக வெளியாகிறது. ரசிகர்கள் நாளை என்னவெல்லாம் நடக்கப் போகின்றது என்பதை எதிர்நோக்கி இருக்கின்றனர். இந்த படம் முழுவதும் அரசியல் கதையை மையமாகக் கொண்டு எடுத்தப்படுவதாக பட குழுவினரால் தெரிவிக்கப்பட்டுள்ளது. விஜய்யின் கடைசி படம் என்பதால் இந்த படத்திற்குப் பிறகு இவர் தவெக கட்சியின் தமிழ்நாட்டில் நிலை நிறுத்தி செங்கோல் பிடித்து அமர்வார் என்று கூறப்படுகிறது.
விஜயகாந்தின் பாதையில் விஜய்:
இதற்கு முன்னதாக விஜயகாந்த் சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கும் போதுதான் கட்சி ஆரம்பித்தார். அப்போதும் கூட விஜயகாந்த் சினிமாவில் தனது அரசியல் பயணத்திற்கான பாடல்களை வெளியிட்டிருந்தார். தனது சின்னத்தையும் படங்களில் பயன்படுத்தியிருந்தார். அதே போன்று தான் இப்போது விஜய்யும் தனது அரசியல் பயணத்திற்காக ஜன நாயகன் படத்தை பயன்படுத்திக் கொண்டுள்ளார் என்று தெரிகிறது. அதோடு பாடல்களையும், பாடல் வரிகளையும் தேர்தல் பிரச்சார வரிகளாக மாற்றி இன்றைய இளம் தலைமுறையினர் மனதில் தவெகவை முத்திரை பதிக்கிறார். இன்றைய பாடல் வரிகள் நாளைய அரசியல் பிரச்சாரத்தின் சரவெடியாக வெடிக்கும் என்று தெரிகிறது.…
ரசிகர்களின் கமெண்ட்ஸ்கள்: ஆல் ஏரியாவிலும் ஐயா கில்லி டா:
தளபதி விஜயின் பாடல் ப்ரோமோவை கேட்ட ரசிகர் விஜய்தான் எல்லா ஏரிலையும் கிள்ளியாக இருப்பார் என்று உணர்ச்சிபூர்வமாக பதிவிட்டுள்ளார்.
தளபதி:
தளபதி என்று கேட்டவுடன் உடம்பெல்லாம் சிலிக்கிறது இந்த பாடல் உடம்பை சிலுக்க வைக்கிறது என்று உணர்வுபூர்வமாக ரசிகர் கமெண்ட் செய்துள்ளார்.
யோவ் அனி என்ன மாதிரியான வேலைபாடுயா:
யோ அனிருத் என்ன மாதிரியான வேலைப்பாடுயா இது என்று ஒரு நெட்டிசன் தனது கமெண்ட்ஸின் மூலம் உணர்ச்சியை அள்ளித் தெளித்துள்ளனர்.
நாளைக்கு செம சம்பவம் இருக்கு:
நாளை மாலை 6:30 மணிக்கு ஜனநாயகன் இரண்டாவது பாடல் வெளியாக உள்ள நிலையில் செம சமாவா இருக்கு ஐ அம் வெயிட்டிங்! என்று கூறியுள்ளார்.
3.06 மணி நேரம் புயலாய் வருகிறது:
ஜனநாயகன் திரைப்படம் 3.06 மணி நேரம் திரையிடப்படுவதாக படக்குழுவினால் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால் நெட்டிசன் ஒருவர் 3.06 மணி நேரம், விஜய் ஒரு புயலாய் வருகிறார் என்று தவெகவின் சம்பவம் இருக்கு என்றும் கூறியுள்ளார். ஜன நாயகன் திரைப்படத்திற்கு இரண்டாவது பாடல் ப்ரோமோ வெளியாகி உள்ளதில் தளபதியின் தீவிர ரசிகர்கள் தங்களது கமெண்ட்ஸ்களின் மூலம் அலற விட்டு வருகின்றனர். பாடல் புரோமோவிற்கே இப்படியென்றால் இன்னும் பாடல் மட்டும் வெளியாகிவிட்டால் சொல்லவா வேணும்; ஆனால், என்ன நாளை நாளை 6: 30 மணி வரை காத்திருக்க வேண்டும்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.