அஞ்சானை அரெஸ்ட் பண்ண உத்தரவா? கைது நடவடிக்கை பற்றி உண்மையை போட்டுடைத்த லிங்குசாமி
தமிழில் ரன், சண்டைக்கோழி, பையா போன்ற பிளாக்பஸ்டர் ஹிட் படங்களை கொடுத்துள்ள இயக்குநர் லிங்குசாமியை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டதாக செய்தி பரவிய நிலையில், அதுபற்றி அவரே விளக்கம் அளித்துள்ளார்.

Director Lingusamy Controversy
தமிழ் திரையுலகில் பல்வேறு பிளாக்பஸ்டர் ஹிட் படங்களை கொடுத்தவர் லிங்குசாமி. ஆனந்தம் படம் மூலம் தன்னுடைய திரைப்பயணத்தை தொடங்கிய லிங்குசாமி, அடுத்தடுத்து ரன், சண்டக்கோழி என மூன்று பிளாக்பஸ்டர் ஹிட் படங்களை கொடுத்து தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநராக உருவெடுத்தார். பையா படத்துக்கு பின்னர் ஃபார்ம் அவுட் ஆன லிங்குசாமி தொடர்ச்சியாக பிளாப் படங்களை கொடுத்து அவுட் டேட்டட் இயக்குநர் என பெயரெடுத்தார். அண்மையில் இவர் இயக்கிய அஞ்சான் படம் ரீ-ரிலீஸ் ஆகி தோல்வியை சந்தித்தது.
லிங்குசாமிக்கு சிறைதண்டனையா?
இந்த நிலையில், காசோலை மோசடி வழக்கில் இயக்குநர் லிங்குசாமி மற்றும் அவரது சகோதரர் சுபாஷ் சந்திர போஸ் ஆகியோருக்கு சென்னை அல்லிக்குளம் நீதிமன்றம் ஓராண்டு சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டதாக செய்தி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. பேஸ்மேன் பைனான்ஸ் நிறுவனத்திடம் பெற்ற கடனுக்காக வழங்கப்பட்ட காசோலை பணமின்றி திரும்பியதால் தொடரப்பட்ட வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாகவும் செய்தி வெளியானது. இதையடுத்து இயக்குநர் லிங்குசாமியே இதுகுறித்து அறிக்கை வெளியிட்டு விளக்கம் அளித்துள்ளார்.
இயக்குநர் லிங்குசாமி விளக்கம்
இதுகுறித்து இயக்குநர் லிங்குசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “என் மீதும், என் நிறுவனத்தின் மீதும் Paceman Finance நிறுவனம் காசோலை வழக்கு மாற்றுமுறை ஆவணச் சட்டம் 138 -ன் கீழ் தாக்கல் செய்தனர். அவ்வழக்கில் இன்று பதினொன்பது பெருநகர குற்றவியல் நீதிமன்றம் எங்களுக்கு எதிராக தீர்ப்பு வழங்கியுள்ளனர். மேலும், நாங்கள் மேல்முறையீடு செய்வதற்கு 30 நாள் கால அவகாசம் வழங்கியுள்ளனர். நாங்கள் இதை சட்டப்படி மேல்முறையீடு செய்து எங்கள் மீதும் எங்களின் நிறுவனத்தின் மீதும் போடப்பட்ட பொய்வழக்கை சட்டப்படி மேல்முறையீடு செய்ய இருக்கிறோம்.
கைது உத்தரவு பொய்
எங்கள் மீது கைது உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக பொய்யான செய்தியை கூறி வருகிறார்கள். அப்படியான செய்தியை பத்திரிக்கை நண்பர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் யாரும் பரப்ப வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். எங்கள் மீது பரப்பப்படும் வதந்திகள் பொய்யானவை என்று கூறிக்கொள்கிறோம்” என குறிப்பிட்டுள்ளார். இதன்மூலம் தன்னை கைது செய்ய உத்தரவிட்டதாக பரவி வரும் செய்தி உண்மையில்லை என முற்றுப்புள்ளி வைத்துள்ளார் லிங்குசாமி.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

