சிவகார்த்திகேயனிடம் மண்ணை கவ்விய தனுஷ்.. இட்லி கடை முதல் நாள் வசூல் இவ்வளவு தானா?
தனுஷ் இயக்கி நடித்த இட்லி கடை (Idli Kadai) திரைப்படம் நேற்று வெளியாகி உள்ளது. இந்த நிலையில் முதல் நாள் வசூல் நிலவரம் குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளது.

இட்லி கடை முதல் நாள் வசூல்
தனுஷ் நடித்து, இயக்கி வெளியாகி உள்ள தமிழ் திரைப்படம் ‘இட்லி கடை’, வெளிவரும் முதல் நாளில் நல்ல வரவேற்பைப் பெற்றது. நித்யா மேனன், அருண் விஜய், ஷாலினி பாண்டே, சத்யராஜ், பார்த்திபன், சமுத்திரக்கனி மற்றும் ராஜ்கிரண் போன்றவர்கள் நடித்துள்ளனர்.
தனுஷ் படம் முதல் நாள் வசூல்
இட்லி கடை படத்துக்கு நல்ல விமர்சனங்கள் தொடர்ந்து வருகிறது. கடந்த ஆண்டு தனுஷ் இயக்கி நடித்த ‘ராயன்’ திரைப்படம் அவருக்கு மிகப்பெரிய ஓபனிங்கை கொடுத்தது. இந்த ஆண்டு தனுஷ் நடித்த குபேரா படம் தமிழ்நாட்டில் முதல் நாளில் மிகவும் குறைவாக 4.5 கோடி ரூபாய் வசூல் செய்தது.
இட்லி கடை பாக்ஸ் ஆபிஸ்
இந்த நிலையில் இட்லி கடை படத்தின் முதல் நாள் வசூல் நிலவரம் வெளியாகி உள்ளது. அதன்படி இந்தியாவில் இட்லி கடை படம் முதல் நாளில் ரூ.10.40 கோடி வசூலித்துள்ளது. தமிழ்நாட்டில் மட்டும் 9.75 கோடியாக உள்ளது. தெலுங்கு வெர்சன் 65 லட்சம் வசூலை பெற்றுள்ளது.
தனுஷை முந்திய சிவகார்த்திகேயன்
நடிகர் சிவகார்த்திகேயனின் மதராஸி திரைப்படம் தமிழகத்தில் முதல் நாள் மட்டுமே ரூ.12.8 கோடி வசூல் செய்தது என்று அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டது. சிவகார்த்திகேயனின் படத்தை தனுஷின் இட்லி கடை முதல் நாள் வசூலில் முந்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

