தொட்டதெல்லாம் ஹிட்; கோலிவுட்டில் ஹாட்ரிக் வெற்றியை ருசித்த டூரிஸ்ட் பேமிலி தயாரிப்பாளர்
டூரிஸ்ட் பேமிலி படத்தின் தயாரிப்பாளர் யுவராஜ் கணேசன் இதுவரை தமிழில் தயாரித்த மூன்று படங்களும் பிளாக்பஸ்டர் ஹிட் ஆகி உள்ளன.

Hat-trick for Tourist Family Movie Producer : திரைப்படங்களை தயாரிப்பது மிகவும் சவாலான விஷயமாக இருந்து வருகிறது. தற்போதைய காலகட்டத்தில் ஒரு படம் ஒரு வாரம் தாக்குப்பிடித்து ஓடுவதே கடினமாக உள்ளது. அந்த அளவுக்கு வார வாரம் ரிலீஸ் ஆகக் கூடிய புதுப்படங்களின் எண்ணிக்கையும் அதிகரித்த வண்ணம் உள்ளது. இருப்பினும் படம் நன்றாக இருந்தால் அதனை மக்கள் கொண்டாடத் தவறியதில்லை. அந்த வகையில் சமீபகாலமாக தொடர்ச்சியாக தரமான படங்களை கொடுத்து தமிழ் சினிமாவையே திரும்பிப் பார்க்க வைத்துள்ள தயாரிப்பு நிறுவனம் தான் மில்லியன் டாலர் ஸ்டூடியோஸ் நிறுவனம்.
குட் நைட், லவ்வர், டூரிஸ்ட் பேமிலி பட போஸ்டர்
ஹாட்ரிக் ஹிட்
குட் நைட் படம் மூலம் தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்தது மில்லியன் டாலர் ஸ்டூடியோஸ் நிறுவனம். தயாரிப்பாளர் யுவராஜ் கணேசன் தான் இதை நிர்வகித்து வருகிறார். இவர் தன்னுடைய தம்பி விநாயக்கிற்காக தொடங்கியது தான் இந்த தயாரிப்பு நிறுவனம். அவர் இயக்கிய குட் நைட் படத்தை தயாரித்து வெற்றிகண்ட யுவராஜ், அடுத்தடுத்து லவ்வர், டூரிஸ்ட் பேமிலி என இரண்டு தரமான படங்களை கொடுத்து தமிழ் சினிமாவில் தனி முத்திரை படைத்திருக்கிறார்.
டூரிஸ்ட் பேமிலி
தில்லுக்கு துட்டு
இதில் ஆச்சர்யம் என்னவென்றால் குட் நைட் தவிர மற்ற இரண்டு படங்களுமே பெரிய படங்களோடு போட்டி போட்டு ரிலீஸ் ஆகின. குறிப்பாக லவ்வர் திரைப்படம் 2024-ம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் லால் சலாம் படத்துக்கு போட்டியாக ரிலீஸ் ஆனது. ஆனால் அப்படம் லால் சலாமை விட அதிகம் வசூலித்து மாஸ் காட்டியது. அதேபோல் தற்போது சசிகுமார் நடித்துள்ள டூரிஸ்ட் பேமிலி திரைப்படத்தையும் சூர்யாவின் ரெட்ரோ படத்துக்கு போட்டியாக ரிலீஸ் செய்துள்ளனர்.
ஒன்ஸ் மோர்
அடுத்த படங்கள் என்னென்ன?
தில்லுக்கு துட்டு தயாரிப்பாளர் என பெயரெடுத்துள்ளார் யுவராஜ். தொடர்ச்சியாக ஹாட்ரிக் வெற்றியை ருசித்துள்ள இவர் அடுத்து இரண்டு படங்களை தயாரித்து வருகிறார். அதில் ஒன்று அர்ஜுன் தாஸ், அதிதி ஷங்கர் கூட்டணியில் உருவாகி இருக்கும் ஒன்ஸ் மோர் திரைப்படம். இப்படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. அதேபோல் மில்லியன் டாலர் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி வரும் மற்றொரு திரைப்படம் ஹேப்பி எண்டிங். இப்படத்தில் ஆர்.ஜே.பாலாஜி நாயகனாக நடிக்கிறார். இப்படமும் விரைவில் திரைக்கு வர உள்ளது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

