MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • ரசிகர்களுக்கு இந்த வாரம் 'வேற லெவல்' ட்ரீட்! திரையரங்குகளில் ரீரிலீஸாகும் பிளாக்பஸ்டர் இதுதான்!

ரசிகர்களுக்கு இந்த வாரம் 'வேற லெவல்' ட்ரீட்! திரையரங்குகளில் ரீரிலீஸாகும் பிளாக்பஸ்டர் இதுதான்!

விஜய் சேதுபதியின் கல்ட் கிளாசிக் படமான 'சூது கவ்வும்' மீண்டும் திரைக்கு வருகிறது. நலன் குமாரசாமி இயக்கத்தில் வெளியான இந்த பிளாக் காமெடி திரைப்படம், குறைந்த டிக்கெட் விலையுடன் பிப்ரவரி 20 அன்று வெளியாகி ரசிகர்களுக்கு விருந்தளிக்க உள்ளது.

2 Min read
Author : Vedarethinam Ramalingam
Published : Feb 16 2026, 04:56 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
வாங்க போவோம் தியேட்டருக்கு
Image Credit : X/Screengrab

வாங்க போவோம் தியேட்டருக்கு

தமிழ் திரையுலகில் தற்போது பழைய பிளாக்பஸ்டர் படங்களை மீண்டும் திரையரங்குகளில் வெளியிடும் 'ரீ-ரிலீஸ்' கலாச்சாரம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. 90ஸ் கிட்ஸ் மற்றும் 2கே கிட்ஸ் என இருதரப்பினரையும் கவரும் வகையில் வெளியாகும் இந்தப் படங்கள், புதிய படங்களுக்கு சவால் விடும் வகையில் வசூலை வாரிக்குவித்து வருகின்றன.

சமீபத்தில் வெளியான விஜய்யின் கில்லி, அஜித்தின் மங்காத்தா, ரஜினியின் படையப்பா மற்றும் சிம்புவின் சச்சின் போன்ற படங்கள் திரையரங்குகளை அதிரவைத்தன. குறிப்பாக, ரீ-ரிலீஸில் அதிக வசூல் செய்த படமாக கில்லி வரலாற்றுச் சாதனை படைத்தது. கடந்த வாரம் வெளியான சூர்யாவின் மௌனம் பேசியதே திரைப்படம் இதுவரை சுமார் 40 லட்சம் ரூபாய் வசூலித்து மாஸ் காட்டி வருகிறது.

24
மீண்டும் களம் இறங்கும் 'தாஸ் அண்ட் கோ'!
Image Credit : Twitter

மீண்டும் களம் இறங்கும் 'தாஸ் அண்ட் கோ'!

இந்த வாரம் ரசிகர்களுக்கு ஒரு 'வேற லெவல்' ட்ரீட் கொடுக்கத் தயாராகிவிட்டது தமிழ் சினிமா. 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி நடிப்பில், நலன் குமாரசாமி இயக்கத்தில் கடந்த 2013-ம் ஆண்டு வெளியாகி 'கல்ட் கிளாசிக்' அந்தஸ்தைப் பெற்ற 'சூது கவ்வும்' திரைப்படம் வரும் பிப்ரவரி 20-ஆம் தேதி மீண்டும் திரையரங்குகளில் வெளியாகிறது.

Related Articles

Related image1
Music: 'சின்னத்தாய்' பாடலில் ஒளிந்திருக்கும் ராஜாவின் மேஜிக்! தனிமையின் ராகத்தை தாளமிட்ட இசைஞானி.!
Related image2
Ilaiyaraja Music: பாடறியேன் படிப்பறியேன்.! சங்கீதம் தெரியாதவர்களும் ரசித்த சிந்து பைரவி! பொளந்து கட்டிய இளையராஜாவை திகைத்து பார்த்த திரையுலகம்!
34
ஏன் இந்த படம் வேற லெவல்?
Image Credit : Google

ஏன் இந்த படம் வேற லெவல்?

புதுமையான கதை: தமிழ் சினிமாவிற்கு 'பிளாக் காமெடி'  ஜானரை அறிமுகப்படுத்திய படங்களில் இது மிக முக்கியமானது.விஜய் சேதுபதியின் 'தாஸ்' கதாபாத்திரம் மற்றும் அவரது கடத்தல் குழுவினரின் லூட்டிகள் இன்றும் மீம்ஸ் மெட்டீரியலாக வலம் வருகின்றன.

சந்தோஷ் நாராயணன் இசை

இப்படத்தின் பின்னணி இசை மற்றும் பாடல்கள் திரையரங்கில் மீண்டும் ஒரு ஆட்டத்தைப் போட வைக்கும் என்பதில் சந்தேகமில்லை.

சர்ப்ரைஸ் அப்டேட் 

இந்த ரீ-ரிலீஸைக் கொண்டாடும் விதமாக, பல திரையரங்குகளில் டிக்கெட் விலை வெறும் 100 ரூபாய் மட்டுமே என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. இது ரசிகர்களுக்குக் கிடைத்த இரட்டிப்பு சந்தோஷமாகும்.

44
வசூல் வேட்டை தொடருமா?
Image Credit : our own

வசூல் வேட்டை தொடருமா?

ஏற்கனவே சூர்யாவின் மௌனம் பேசியதே வசூலில் கலக்கி வரும் நிலையில், விஜய் சேதுபதியின் சூது கவ்வும் அந்த சாதனையை முறியடிக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. பிப்ரவரி 20 முதல் திரையரங்குகளில் மீண்டும் 'காசு.. பணம்.. துட்டு.. மணி.. மணி..' ஒலிக்கப்போவது உறுதி!

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

VR
Vedarethinam Ramalingam
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 17 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். சன் தொலைக்காட்சி, தந்தி டிவி பணியாற்றியுள்ள இவர், ஏசியாநெட் நியூஸ் தமிழில் இணைந்துள்ளார். வணிகம், முதலீடுகள் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர். எதிர்கால தேவைகளுக்குக்கு முதலீடு அவசியம் என்பதை அடித்தட்டு மக்களும் புரிந்துகொள்ளும் வகையில் எழுதி வருகிறார். இயற்கை விவசாயம் குறித்த படைப்புகளை படைப்பதிலும் கைதேர்ந்தவர்.
இசை
சினிமா காட்சியகம்
திரைப்பட விமர்சனம்

Latest Videos
Recommended Stories
Recommended image1
ரோகிணியை தூக்க ஸ்கெட்ச் போட்ட சத்யா - கௌதம்! மருமகள் சீரியலில் அதிரடி திருப்பம்.. மாட்டிக்கொள்வாரா ரோகிணி? இன்றைய பரபரப்பு எபிசோட்!
Recommended image2
Chellame Chellame: பாக்கியலட்சுமியின் அதிரடி வேட்டை! விஜி-யின் ரகசிய பிளான்.. உண்மையை உடைப்பாரா பாக்கியா?
Recommended image3
With Love: 10 நாளில் 5 மடங்கு லாபம்.. 'வித் லவ்' செய்த மேஜிக்.. அடேங்கப்பா! இத்தனை கோடிகள் வசூலா?
Related Stories
Recommended image1
Music: 'சின்னத்தாய்' பாடலில் ஒளிந்திருக்கும் ராஜாவின் மேஜிக்! தனிமையின் ராகத்தை தாளமிட்ட இசைஞானி.!
Recommended image2
Ilaiyaraja Music: பாடறியேன் படிப்பறியேன்.! சங்கீதம் தெரியாதவர்களும் ரசித்த சிந்து பைரவி! பொளந்து கட்டிய இளையராஜாவை திகைத்து பார்த்த திரையுலகம்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved