காந்தாரா ஹீரோ ரிஷப் ஷெட்டியின் உண்மையான பெயர் என்ன தெரியுமா?
காந்தாரா படத்தின் மூலம் பான் இந்தியா ஹீரோவாக மாறியுள்ள நடிகர் ரிஷப் ஷெட்டியின் உண்மையான பெயர் பற்றிய விவரங்கள் வெளியாகி உள்ளது.

ரிஷப் ஷெட்டியின் உண்மையான பெயர்
கன்னடத்தில் வெளியான காந்தாரா படத்தின் மூலம் பான் இந்தியா ஸ்டாராக மாறினார் நடிகர் ரிஷப் ஷெட்டி. சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில், தனது உண்மையான பெயர் வேறு என்றும், ஜோதிடரான தந்தைதான் அதிர்ஷ்டத்திற்காக பெயரை மாற்றினார் என்றும் கூறினார்.
ரிஷப் ஷெட்டி வாழ்க்கை வரலாறு
42 வயதான ரிஷப் ஷெட்டி, சினிமாவுக்கு முன் தண்ணீர் கேன் விற்பது, ஹோட்டலில் சர்வராக பணியாற்றுவது என பல வேலைகளை செய்துள்ளார். 2012ல் 'துக்ளக்' படத்தில் வில்லனாக அறிமுகமானார் ரிஷப் ஷெட்டி.
காந்தாரா திரைப்படம்
திரையுலகில் நுழைந்த பிறகு ரிஷப் ஷெட்டி திரும்பிப் பார்க்கவில்லை என்றே கூறும் அளவுக்கு, 'ரிக்கி', 'பெல் பாட்டம்', 'காந்தாரா' என அடுத்தடுத்த படங்களில் நடித்து இந்திய சினிமாவில் மிக முக்கியமான ஆளாக மாறினார். 'கிரிக் பார்ட்டி', 'காந்தாரா' போன்ற படங்களை இயக்கியுள்ளார் ரிஷப் ஷெட்டி என்பது குறிப்பிடத்தக்கது.
ரிஷப் ஷெட்டி பெயர் மாற்றம்
ரிஷப் ஷெட்டியின் உண்மையான பெயர் பிரசாந்த். தந்தையின் அறிவுரைப்படி, திரையுலகில் நல்ல வாய்ப்புகளுக்காக தனது பெயரை ரிஷப் என மாற்றிக்கொண்டதாக காந்தாரா நாயகன் ரிஷப் ஷெட்டி கூறினார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

