MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • விவாகரத்து வழக்கில் எதிர்பாராத ட்விஸ்ட்.. திடீரென முடிவை மாற்றிய சங்கீதா? விஜய் ஹேப்பி.. உற்சாகத்தில் தொண்டர்கள்!

விவாகரத்து வழக்கில் எதிர்பாராத ட்விஸ்ட்.. திடீரென முடிவை மாற்றிய சங்கீதா? விஜய் ஹேப்பி.. உற்சாகத்தில் தொண்டர்கள்!

Vijay Sangeetha Divorce: விஜய்க்கும் ஒரு நடிகைக்கும் தொடர்பு இருப்பதாகவும், அந்த நடிகையுடன் அவர் வெளிநாடுகளில் சுற்றியதாகவும் கூறி மனைவி சங்கீதா பரபரப்பை ஏற்படுத்தினார். 

2 Min read
Author : vinoth kumar
Published : Apr 19 2026, 10:15 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Image Credit : Asianet News

தமிழக அரசியல் களம் 50 ஆண்டுகளுக்கு பிறகு எப்போதும் இல்லாத வகையில் பெரும் எதிர்பாரப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு முக்கிய காரணம் தவெக தலைவர் விஜய் அரசியல் வருகை தான். இதுவரை திமுக - அதிமுக இடையே போட்டி நிலவி வந்த நிலையில் இப்போட்டியில் தற்போது தவெகவும் இணைந்துள்ளது. சட்டப்பேரவை தேர்தலில் விஜய் யார் ஓட்டை பிரிக்கப்போகிறார் என்ற விவாதம் அனைவரின் மத்தியில் ஓடிக்கொண்டே இருக்கிறது. இந்நிலையில் இவ்வளவு பரபரப்புக்கும் மத்தியில் தவெக தலைவர் விஜய் விவகாரத்து விவகாரம் தமிழக அரசியலில் புயலை கிளப்பியது.

25
Image Credit : x

நடிகரும், தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவருமான விஜய்யிடமிருந்து தனக்கு விவாகரத்து வழங்கக் கோரி அவரது மனைவி சங்கீதா பிப்ரவரி 27ம் தேதி செங்கல்பட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில், விஜய்க்கும் ஒரு நடிகைக்கும் தொடர்பு இருப்பதாகவும், அந்த நடிகையுடன் அவர் வெளிநாடுகளில் சுற்றியதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் விஜய் அந்த நடிகையுடன் தொடர்பில் இருப்பது தனக்கும், தனது குழந்தைகளுக்கும் அவமானமாக இருப்பதாகவும், எவ்வளவோ சொல்லியும் திருமணத்துக்கு மீறிய உறவை விஜய் கைவிடவில்லை. அந்த நடிகை ஒருவர் எங்களது வாழ்க்கையில் குறுக்கே வந்த பிறகுதான் எங்களது குடும்ப வாழ்க்கையில் பல விதமான பிரச்சனைகள் ஏற்பட்டதால், லண்டன் சென்றுவிட்டேன் என தெரிவித்திருந்தார். இதுதொடர்பான வழக்கு ஏப்ரல் 20ம் தேதி விசாரணைக்கு வருகிறது.

Related Articles

Related image1
Akshaya Tritiya 2026: அட்சய திருதியை எப்போது? தங்கம் வாங்க நல்ல நேரம் இதுதான்!
Related image2
அடுத்த 12 நாட்களுக்கு வெயில் மண்டையை பிளக்கும்! இடியுடன் கூடிய கோடை மழை எப்போது? வெளியான முக்கிய அப்டேட்
35
Image Credit : google

அன்றைய தினம் விஜய் - சங்கீதா ஆகியோரை ஆஜராகும்படி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வழக்கு தொடர்பாக இருவரிடமும் விளக்கம் கேட்க நீதிமன்றம் முடிவு செய்து இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. ஆனால் ஏப்ரல் 20ம் தேதி விஜய் நீதிமன்றத்தில் ஆஜராவாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இதற்கான காரணம் சட்டப்பேரவை தேர்தல் நேரம் என்பதால் விஜய் ஆஜராகாமல் வழக்கறிஞரை அனுப்பி வைக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

45
Image Credit : our own

இதற்கிடையே ஏப்ரல் 20ம் தேதி விஜய் மீதான குற்றச்சாட்டு தொடர்பான ஆதாரங்களை மனைவி சங்கீதா பத்திரிகையாளர்களை சந்தித்து வெளியிட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. ஏப்ரல் 23ம் தேதி சட்டமன்ற தேர்தலை வைத்துக்கொண்டு விஜய் மீது சங்கீதா குற்றச்சாட்டை முன்வைத்தால் அது தேர்தலில் எதிரொலித்து பின்னடைவை ஏற்படுத்தும் நிலை உருவாகியுள்ளது.

55
Image Credit : our own

இந்நிலையில் விஜய் தரப்பில் இருந்து சங்கீதாவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாகவும், அப்போது ஏப்ரல் 20ம் தேதி பத்திரிகையாளர்களை சந்திப்பதை தவிர்க்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. இதனையடுத்து சங்கீதா மனம் மாறி பத்திரிகையாளர்கள் சந்திப்பை தவிர்க்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனால் விஜய் மற்றும் தவெக வேட்பாளர்கள், தொண்டர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
டிவி.கே. விஜய்
அரசியல்
தமிழ்நாடு

Latest Videos
Recommended Stories
Recommended image1
நடிகை ராஷி கண்ணா கேரவனில் 50,000 திருட்டு! கைவரிசை காட்டிய ஊழியர் - சிக்கியது எப்படி? முழு விவரம்!
Recommended image2
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 மெகா ஹிட் திருப்பம்; மாமா முத்துவேல் - மருமகன் கதிர் சமாதானம்; கோபத்தில் கொந்தளித்த சக்திவேல்!
Recommended image3
KS Chithra: 'மகளின் மரணத்துக்குப் பிறகு கோயிலுக்கே போகல, யாரையும் பார்க்கல' - மனம் திறந்த சித்ரா
Related Stories
Recommended image1
Akshaya Tritiya 2026: அட்சய திருதியை எப்போது? தங்கம் வாங்க நல்ல நேரம் இதுதான்!
Recommended image2
அடுத்த 12 நாட்களுக்கு வெயில் மண்டையை பிளக்கும்! இடியுடன் கூடிய கோடை மழை எப்போது? வெளியான முக்கிய அப்டேட்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved