MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • டப்பிங் ஆர்டிஸ்ட் டூ டாப் ஹீரோ... சியான் விக்ரம் சிகரம் தொட்ட கதை தெரியுமா?

டப்பிங் ஆர்டிஸ்ட் டூ டாப் ஹீரோ... சியான் விக்ரம் சிகரம் தொட்ட கதை தெரியுமா?

நடிகர் விக்ரம் இன்று தனது 60வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவர் சினிமாவில் பட்ட கஷ்டங்கள், அதிலிருந்து பீனிக்ஸ் பறவை போல் மீண்டு வந்தது பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

2 Min read
Author : Ganesh A
Published : Apr 17 2026, 01:00 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Chiyaan Vikram success story
Image Credit : our own

Chiyaan Vikram success story

தமிழ் சினிமாவில் எத்தனையோ நடிகர்கள் பல சாதனைகளைப் புரிந்திருக்கிறார்கள். அவர்கள் ஒவ்வொருவருக்கும் ஏதேனும் ஒரு தனித்தன்மை இருக்கும். ஆனால் ஒரு சிலருக்கு மட்டும் இந்தத் தனித்தன்மையைத் தாண்டி ஒரு கலைஞனாக சில அரிதான குணங்கள், பண்புகள் இருக்கும். அப்படி அரிதான குணங்களைக் கொண்ட அசத்தல் நாயகன்தான் விக்ரம். 'என் காதல் கண்மணி' என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக தமிழ்த் திரையுலகுக்கு அறிமுகமானார் விக்ரம்.

25
விக்ரம் ஆரம்ப கால போராட்டம்
Image Credit : Instagram

விக்ரம் ஆரம்ப கால போராட்டம்

அதன் பிறகு முன்னணி இயக்குநரான எஸ்.பி.முத்துராமனின் ‘காவல் கீதம்’ படத்தில் நடித்தார். அடுத்ததாகப் புகழ்பெற்ற ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் இயக்குநராக அறிமுகமான ‘மீரா’ படத்தில் நடித்தார். அடுத்தடுத்து பெரிய இயக்குநர்களின் படங்களில் நடித்தாலும், எந்த படங்களும் விக்ரமுக்கு வெற்றியை பெற்றுத்தரவில்லை. தோல்வி நாயகன் என்ற பெயர் மட்டுமே கிடைத்தது. தொடர்ந்து மலையாளம், தெலுங்கு படங்களில் துணை நடிகராகவும் பணிபுரிந்தார். சில எதிர்மறை வேடத்திலும் கூட நடித்தார்.

Related Articles

Related image1
'சியான் 63' படத்தில் விக்ரமுக்கு ஜோடி போடும்... விஜய் பட ஹீரோயின்! அட இவங்களா?
Related image2
ராஜமெளலியின் வாரணாசி படத்தில் விக்ரம் ரிஜெக்ட் பண்ணிய ரோல்... அலேக்காக தட்டிதூக்கிய மாஸ் ஹீரோ..!
35
விக்ரம் வெற்றி கதை
Image Credit : Instagram

விக்ரம் வெற்றி கதை

இருப்பினும் திரைத்துறையில் தனக்கான அங்கீகாரம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் எதையும் பொருட்படுத்தாமல் 'புதிய மன்னர்கள், 'ஹவுஸ்ஃபுல், 'உல்லாசம் எனத் தமிழிலும் அவ்வப்போது சில படங்களிலும் நடித்தார். அந்தப் படங்களில் அவரது நடிப்பு பாராட்டப்பட்டதே தவிர ஒரு நட்சத்திர நடிகராக அவரை உயர்த்தவில்லை. ஒரு நீண்ட காத்திருப்பு எப்போதும் வீண்போகாது என்பார்கள். அப்படி 1990-கள் முழுக்க 10 ஆண்டுகள் போராடிய விக்ரமுக்கு பாலாவின் சேது திருப்புமுனையாக அமைந்தது. 1999 டிசம்பரில் வெளியான ‘சேது’ விக்ரமுக்கான முதல் பிரேக்காக அமைந்தது.

45
டப்பிங் கலைஞர் விக்ரம்
Image Credit : Instagram

டப்பிங் கலைஞர் விக்ரம்

பாலா இயக்குநராக அறிமுகமானதும் இந்தப் படம் தான். விக்ரமின் அசாத்திய நடிப்பு அவரை கடைக்கோடி மக்கள் வரை கொண்டு சேர்த்தது. விக்ரம் இத்தனை ஆண்டுகளில் பல வெற்றிகளையும் தோல்விகளையும் இந்த துறையில் சந்தித்திருந்தாலும் விக்ரமை ஒரு நடிகராகத்தான் பலருக்கும் தெரியும். ஆனால், 1990-களில் விக்ரம் நடிகராக மட்டுமல்லாமல் டப்பிங் கலைஞராகவும் பணியாற்றி இருக்கிறார். அப்போதைய இளம் நடிகர்கள் பலருக்கும் விக்ரம் பின்னணி குரல் கொடுத்துள்ளார். அஜித்தின் அறிமுக படமான அமராவதியில் அவருக்குக் பின்னணி குரல் கொடுத்தவரே விக்ரம்தான்.

55
இத்தனை பேருக்கு டப்பிங் பேசி உள்ளாரா?
Image Credit : Instagram

இத்தனை பேருக்கு டப்பிங் பேசி உள்ளாரா?

அஜித் மட்டுமல்லாமல் காதலன் படத்தில் பிரபுதேவா, காதல் தேசத்தில் அப்பாஸ், புதிய யுகத்தில் வினீத் ஆகியோருக்கும் குரல் கொடுத்திருக்கிறார் விக்ரம். இவற்றையெல்லாம் விட ஆஸ்கர் விருதுகளை அள்ளிச் சுருட்டிய ரிச்சர்ட் அட்டபரோவின் ‘காந்தி’ திரைப்படத்தின் தமிழ் மொழிமாற்ற வடிவத்தில் காந்தியாக நடித்த பென் கிங்ஸ்லிக்கு குரல் கொடுத்தவரும் நம்ம விக்ரம்தான். ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியதோடு பொதுவான சினிமா ரசிகர்கள் அனைவரது மனதிலும் ஒரு கெளரவமான இடத்தைப் பெற்றிருக்கும் விக்ரம் இனிவரும் காலத்திலும் கொண்டாடப்பட வேண்டிய நாயகன் என்பதில் சந்தேகமில்லை. நடிகர் விக்ரம் அவர்களின் 60 ஆவது பிறந்தநாள் இன்று. அவருக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
நடிகர் விக்ரம்

Latest Videos
Recommended Stories
Recommended image1
தந்தையுடன் தொடர்பு.! மகனோடு கல்யாணத்துக்கு ரெடியான சில்க் ஸ்மிதா.! நடிகை சொன்ன அதிர்ச்சி தகவல்!
Recommended image2
Music: வார்த்தைகளால் அழ வைத்த டி.ராஜேந்தர்! சூப்பர் டூப்பர் ஹிட்டான சோக ராகம் எது தெரியுமா?!
Recommended image3
Hit Songs: மனோரமா பாடிய டப்பாங்குத்து பாடல்கள்.! சென்னை தமிழில் பாட்டுப்பாடி மனசை மயக்கிய ராட்சசி!
Related Stories
Recommended image1
'சியான் 63' படத்தில் விக்ரமுக்கு ஜோடி போடும்... விஜய் பட ஹீரோயின்! அட இவங்களா?
Recommended image2
ராஜமெளலியின் வாரணாசி படத்தில் விக்ரம் ரிஜெக்ட் பண்ணிய ரோல்... அலேக்காக தட்டிதூக்கிய மாஸ் ஹீரோ..!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved