- Home
- Cinema
- சிவாஜி இறந்தபோது விஜயகாந்த் செய்த நெகிழ்ச்சி செயல்.! உருகிய பிரபு குடும்பம்.! பலருக்கும் தெரியாத தகவல்
சிவாஜி இறந்தபோது விஜயகாந்த் செய்த நெகிழ்ச்சி செயல்.! உருகிய பிரபு குடும்பம்.! பலருக்கும் தெரியாத தகவல்
Sivaji Ganesan Death: சிவாஜி கணேசன் இறந்த பொழுது கேப்டன் விஜயகாந்த் செய்த நெகிழ்ச்சி செயல் குறித்து தற்போது தகவல் வெளியாகி உள்ளது. கேப்டனுக்கு மிகவும் நெருக்கமான மீசை ராஜேந்திரன் இந்த நிகழ்வு குறித்து பகிர்ந்துள்ளார்.

சிவாஜி இறந்தபோது விஜயாகாந்த் செய்த நெகிழ்ச்சி செயல்
தமிழ் திரையுலகில் முடி சூடா மன்னனாக வலம் வந்தவர் நடிகர் சிவாஜி கணேசன். ஆரம்பத்தில் சிறு மேடை நாடகங்களில் நடிக்கத் தொடங்கி ‘பராசக்தி’ படத்தின் மூலமாக நடிகரானவர் சிவாஜி கணேசன். நடிப்பிற்கு இலக்கணம. வகுத்தவர் இவர் என்று சொன்னால் அது மிகையாகாது. இவர் ஏற்காத கதாபாத்திரங்களை இல்லை என்று சொல்லும் அளவிற்கு அனைத்து கதாபாத்திரங்களிலும் நடித்தார். அவர் இறந்த பொழுது அவரது ரசிகர்கள் மட்டுமல்லாமல் இந்த தமிழ்நாடே கதறி அழுதது.
சிவாஜி கணேசன் மரணம்
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் ஜூலை 21, 2001 ஆம் ஆண்டு காலமானார். அவர் மறைந்த பொழுது வெளிநாட்டில் இருந்த அவரது மகனின் பிரபு உடனடியாக சென்னைக்கு வர இயலவில்லை. அந்த இக்கட்டான நேரத்தில் ஒரு குடும்ப உறுப்பினரை போல முன் நின்று அனைத்து காரியங்களையும் கவனித்துக் கொண்டவர் கேப்டன் விஜயகாந்த். அந்த நெகிழ்ச்சியான தருணங்களை பிரபு பலமுறை உருக்கத்துடன் பகிர்ந்திருக்கிறார்.
சிவாஜிக்கு மகனாக மாறிய விஜயகாந்த்
வெளிநாட்டில் இருந்த பிரபுவுக்கு போன் செய்த கேப்டன், “நீ எதைப் பற்றியும் கவலைப்படாதே நான் இங்கே இருக்கிறேன். அப்பாவை நல்லபடியாக பார்த்துக் கொள்கிறேன்” என்று உறுதியளித்தார். வார்த்தைகளோடு நின்று விடாமல் ஒரு மகனாகவே மாறி விஜயகாந்தின் இறுதிச்சடங்குகளை கவனித்து வந்த பிரபு சென்னை திரும்பும் வரை சிவாஜியின் அன்னை இல்லத்தில் ஒரு மகனாகவே மாறினார் விஜயகாந்த். தமிழ்நாட்டின் மூலை முடுக்கில் இருந்த லட்சக்கணக்கான தொண்டர்கள் திரண்டபோது எந்தவித அசம்பாவிதமும் இன்றி மக்கள் அஞ்சலி செலுத்த வழிவகை செய்தார்.
பிரபு உருக்கம்
நடிகர் சங்க தலைவராக மட்டுமின்றி ஒரு தனிப்பட்ட ரசிகனாகவும் சிவாஜிக்கு இன்னொரு மகன் போலவும் இருந்து இரவு பகல் பாராமல் உடல் அருகிலேயே நின்றார். பிரபு சென்னை வந்து சேரும் வரை ஒரு நிமிடம் கூட அந்த இடத்தை விட்டு அவர் நகரவில்லை. பிரபுவிடம் உடலை ஒப்படைக்கும் பொழுது, “உன் சொத்தை பத்திரமாக பார்த்துக் கொண்டேன்” என்று கூறியது பற்றி பிரபு இன்றும் மேடைகளில் பேசி வருகிறார். “அப்பா இறந்த செய்தி கேட்டு நொறுங்கிப் போயிருந்தேன். ஊரில் இல்லாத அந்த தவிப்பை விஜயகாந்த் அண்ணன் தான் போக்கினார். அவரது உதவிக்கு வாழ்நாள் முழுவதும் கடமைப்பட்டுள்ளேன்” என்று பிரபு பல மேடைகளில் கண்ணீருடன் பேசி உள்ளார்.
மீசை ராஜேந்திரன் கூறிய சம்பவம்
இந்த நிகழ்வு குறித்து விஜயகாந்துக்கு மிகவும் நெருக்கமாக இருந்த நடிகர் மீசை ராஜேந்திரன் சமீபத்தில் ஊடகம் ஒன்றில் பகிர்ந்து கொண்னார். “சிவாஜி சார் இறந்தபோது ஒரு கூட்டத்தை ஒற்றை ஆளாக துண்டை வைத்து விரட்டினார். சிவாஜி கணேசன் இறந்தது முதல் அவர் உடலை அடக்கம் செய்யும் வரை கூடவே இருந்து குளிக்காமல், தூங்காமல், சாப்பிடாமல் அனைத்து நிகழ்வுகளையும் விஜயகாந்த் கவனித்துக் கொண்டார். வந்த அனைவரும் சென்று விட்டார்கள். ஆனால் விஜயகாந்த் மற்றும் அடுத்த நாள் பிரபு வீட்டிற்கு சென்று அவரது மனைவியின் கையைப் பிடித்து அழுது, இனி உங்கள் பையனுக்கு நாங்கள் இருக்கிறோம். கவலைப்படாதீர்கள் என்று ஆறுதல் சொல்லிவிட்டு இரண்டு மணி நேரம் இருந்துவிட்டு சென்றார்” என மீசை ராஜேந்திரன் கூறினார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

