மாநகராட்சியில் சூப்பர் வேலை: 36 காலியிடங்கள், தேர்வு இல்லை!
சேலம் மாநகராட்சியில் 36 Auxiliary Nurse Midwife காலியிடங்கள். மாதம் ரூ.14,000 சம்பளம், தேர்வு இல்லை. ஜூன் 25, 2025க்குள் விண்ணப்பிக்கவும்.

சேலம் மாநகராட்சியில் சூப்பர் வேலை: 36 காலியிடங்கள், தேர்வு இல்லை!
சேலம் மாநகராட்சியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப தகுதியான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள ஆர்வம் உள்ளவர்கள், கீழே கொடுக்கப்பட்டுள்ள கல்வித்தகுதி, சம்பளம், காலிப்பணியிடங்கள் மற்றும் தேர்வு முறை குறித்த முழுமையான விவரங்களை தெரிந்துகொள்ளலாம்.
வேலை விவரங்கள் ஒரு பார்வை
நிறுவனம்: சேலம் மாநகராட்சி
பணி வகை: தமிழ்நாடு அரசு வேலை
மொத்த காலியிடங்கள்: 36
பணியிடம்: சேலம், தமிழ்நாடு
விண்ணப்பம் தொடங்கும் தேதி: 12.06.2025
விண்ணப்பம் சமர்ப்பிக்க கடைசி தேதி: 25.06.2025
பணியின் பெயர் மற்றும் சம்பளம்
இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பில் Auxiliary Nurse Midwives / Urban Health Nurse பதவிகளுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். தேர்ந்தெடுக்கப்படும் நபர்களுக்கு மாதந்தோறும் ரூ.14,000/- சம்பளமாக வழங்கப்படும். மொத்தம் 36 காலியிடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி மற்றும் வயது வரம்பு
இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க, விண்ணப்பதாரர்கள் Auxiliary Nurse Midwife (ANM) / Multi-purpose Health Worker படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பைப் பொறுத்தவரை, 35 வயதுக்கு மேற்படாதவராக இருக்க வேண்டும். அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்பக் கட்டணம் கிடையாது.
தேர்வு முறை மற்றும் முக்கிய நாட்கள்
இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் தகுதியான நபர்கள் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். எழுத்துத் தேர்வு எதுவும் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.
விண்ணப்பிக்க ஆரம்பித்த தேதி: 12.06.2025
விண்ணப்பிக்க கடைசி தேதி: 25.06.2025
விண்ணப்பிக்கும் வழிமுறைகள்
விண்ணப்பப் படிவத்தை சேலம் மாநகராட்சியின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.salemcorporation.gov.in இல் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பதிவிறக்கம் செய்த விண்ணப்பப் படிவத்தைப் பிரிண்ட் அவுட் எடுத்து, தேவையான விவரங்களை பூர்த்தி செய்து, கல்விச் சான்றிதழ்களின் நகல்களுடன் இணைத்து, கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபால் மூலமாகவோ அல்லது நேரிலோ சமர்ப்பிக்க வேண்டும்.
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:
நிர்வாக செயலாளர்,
மாநகர நல அலுவலர்,
மாநகர நல சங்கம்,
நாவலர் நெடுஞ்செழியன் சாலை,
கோட்டை, சேலம் – 636001.
முக்கிய குறிப்பு: விண்ணப்பிக்கும் முன், அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து தகுதி நிபந்தனைகளையும் முழுமையாகப் படித்து உறுதிப்படுத்திக் கொள்ளவும். இந்த அரிய வாய்ப்பை நழுவவிடாதீர்கள்!

