விசாகப்பட்டினம் நேவல் டாக்யார்டு, 2025ஆம் ஆண்டுக்கான 320 பயிற்சியாளர் பணியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு அறிவித்துள்ளது. 10ஆம் வகுப்பு அல்லது ITI முடித்த தகுதியான இளைஞர்கள் எழுத்துத் தேர்வு மற்றும் ஆவண சரிபார்ப்பு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
320 பயிற்சியாளர் (Apprentice) பணியிடங்கள் அறிவிப்பு
நேவல் டாக்யார்டு, விசாகப்பட்டினம் சார்பில் 2025ஆம் ஆண்டிற்கான Apprentice பயிற்சி ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. DAS(V)/01/25 எனும் அறிவிப்பின் படி மொத்தம் 320 பயிற்சியாளர் (Apprentice) பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் 02.01.2026 வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிப்பதற்கு முன் அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுமையாக வாசித்து தகுதி, வயது, ஆவணங்கள் உள்ளிட்ட விவரங்களை சரிபார்த்து விண்ணப்பிக்க வேண்டும் என்பது அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளார்கள்.
இளைஞர்களுக்கு இது மிகச் சிறந்த வாய்ப்பு
இந்த ஆட்சேர்ப்பில் Mechanic Diesel, Machinist, Pipe Fitter, Electrician, Welder, Sheet Metal Worker, Shipwright, Painter, COPA உள்ளிட்ட பல்வேறு பணிகள் உள்ளது. தனித்தனி பிரிவுகளுக்கு இடஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதுடன் Fitter (60), Electrician (35), Pipe Fitter (30), Sheet Metal Worker (30), Shipwright (30) போன்ற பிரிவுகளில் அதிக வாய்ப்புகள் உள்ளன. தொழில்துறை பயிற்சி பெற விரும்பும் இளைஞர்களுக்கு இது மிகச் சிறந்த வாய்ப்பு என கூறப்படுகிறது.
கல்வித் தகுதி
கல்வித் தகுதியாக SSLC/10th-50% மதிப்பெண் அல்லது ITI (NCVT/SCVT)-65% மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். மதிப்பெண் குறிப்பிடாத சான்றிதழ்கள் ஏற்கப்படமாட்டாது. வயது வரம்பில் குறைந்தபட்சம் 14 வயது நிரம்பியவர்களுக்கு விண்ணப்பிக்க அனுமதி உள்ளது. ஆபத்தான தொழில்களுக்கு வயது 18 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஊதியமாக மாதம் ₹9,600 முதல் ₹10,560 வரை வழங்கப்படும். தேர்வு செயல்முறையில் Shortlist, எழுத்துத் தேர்வு, Merit List மற்றும் ஆவண சரிபார்ப்பு இடம்பெறும்.
அஞ்சல் மூலம் அனுப்ப வேண்டும்
விண்ணப்பிக்க, முதலில் apprenticeshipindia.gov.in தளத்தில் பதிவு செய்து, Hall Ticket வடிவம் பதிவிறக்கம் செய்து, நிரப்பி தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அஞ்சல் மூலம் அனுப்ப வேண்டும். Rs.55/- முத்திரை பெற்ற Self Addressed Envelope இணைக்க வேண்டும்.
The Officer-in-Charge (for Apprenticeship), Naval Dockyard Apprentices School, VM Naval Base S.O., Visakhapatnam – 530014, Andhra Pradesh. வேலை தேடும் இளைஞர்களுக்கு இது ஒரு பொன்னான வாய்ப்பு. நேரத்தை வீணாக்காமல் விண்ணப்பியுங்கள்!


