MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • இந்த லிமிட்டுக்கு மேல் பணத்தை பேங்கில் போட.. பான் கட்டாயம்.. 17 ரூல்ஸ் மாறிடுச்சு

இந்த லிமிட்டுக்கு மேல் பணத்தை பேங்கில் போட.. பான் கட்டாயம்.. 17 ரூல்ஸ் மாறிடுச்சு

வருமான வரித்துறையின் புதிய விதிகளின்படி, வீடு வாங்குதல், வங்கியில் பணம் செலுத்துதல் போன்ற 17 முக்கிய நிதிப் பரிவர்த்தனைகளுக்கு பான் கார்டு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும் 2026 முதல் பான் பெறுவதற்கான விதிகளும் கடுமையாக்கப்பட்டுள்ளன.

2 Min read
Author : Raghupati R
Published : Apr 18 2026, 09:54 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
பான் கார்டு புதிய விதிகள்
Image Credit : Google

பான் கார்டு புதிய விதிகள்

இன்றைய காலத்தில் பான் கார்டு என்பது ஒரு சாதாரண வரி ஆவணம் அல்ல. அது உங்கள் நிதி வாழ்க்கையின் ‘மாஸ்டர் கீ’ போல மாறிவிட்டது. வருமான வரித்துறை வெளியிட்டுள்ள புதிய விதிகளின்படி, பல முக்கிய பணப் பரிவர்த்தனைகளுக்கு பான் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. வீடு வாங்குதல், கார் வாங்குதல், வங்கியில் பெரிய தொகை செலுத்துதல் போன்ற செயல்களில் பான் இல்லாத வேலைகள் நின்றுவிடும். அதனால், பான் கார்டின் முக்கியத்துவம் இப்போது பல மடங்கு அதிகரித்துள்ளது.

25
17 முக்கிய பரிவர்த்தனைகள்
Image Credit : Asianet News

17 முக்கிய பரிவர்த்தனைகள்

அரசு குறிப்பிட்டுள்ள 17 முக்கிய பரிவர்த்தனைகளில் பான் அவசியம். வாகனம் வாங்குதல் மற்றும் விற்பனை (இருசக்கர வாகனங்களை தவிர), புதிய வங்கி கணக்கு திறப்பு, டீமேட் கணக்கு தொடக்கம் ஆகியவை இதில் அடங்கும். மேலும், ஹோட்டல் அல்லது உணவகங்களில் ரூ.50,000-ஐ மீறும் பணம் செலுத்தும்போது அல்லது வெளிநாட்டு பயணத்திற்காக ரூ.50,000-ஐ மீறினால் கரன்சி வாங்கும்போது பான் தேவை. இதனால் பெரிய பண பரிவர்த்தனைகள் அனைத்தும் கண்காணிக்கப்படுகின்றன.

Related Articles

Related image1
ஆதார் கார்டு தொலைந்ததா? இப்படி செய்தால் உடனே கிடைக்கும்!
Related image2
ஜூன் 14க்குள் ஆதார் அப்டேட் செய்யுங்கள்.. இல்லையெனில் கட்டணம் கட்ட வேண்டி வரும்!
35
ரூ.50,000-ஐ மீறினால்
Image Credit : Google

ரூ.50,000-ஐ மீறினால்

முதலீடு மற்றும் சேமிப்பு தொடர்பான பல செயல்களிலும் பான் முக்கியமானதாகும். ரூ.50,000-ஐ மீறும் மியூச்சுவல் ஃபண்ட், பாண்ட், டெபஞ்சர் முதலீடுகள் செய்யும்போது பான் கட்டாயம். மேலும், ஒரே நாளில் வங்கியில் ரூ.50,000-ஐ மீறினால் பணம் செலுத்தினாலும் அல்லது டிமாண்ட் டிராஃப்ட்/பே ஆர்டர் எடுத்தாலும் பான் அவசியம். வாழ்க்கை காப்பீடு பிரீமியம் மற்றும் டிஜிட்டல் வாலட் செலவுகளுக்கும் இந்த விதி பொருந்தும்.

45
பான் கட்டாயம்
Image Credit : Asianet News

பான் கட்டாயம்

சொத்து மற்றும் பங்கு பரிவர்த்தனைகளிலும் பான் இன்றி முடியாது. ரூ.10 லட்சத்தை மீறும் நிலம் அல்லது வீடு வாங்குதல், ரூ.1 லட்சத்தை மீறும் அன்லிஸ்டெட் ஷேர்க்கள் வாங்குதல் போன்ற செயல்களில் பான் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அரசு நிதி பரிவர்த்தனைகளில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்ய முயல்கிறது. தவறான தகவல்கள் அளித்தால் சட்டரீதியான பிரச்சனைகளும் உருவாகலாம்.

55
கடுமையான விதிகள்
Image Credit : our own

கடுமையான விதிகள்

மேலும், 2026 ஏப்ரல் 1 முதல் பான் பெறும் விதிகளும் கடுமையாக்கப்பட்டுள்ளன. இனி UIDAI வழங்கும் ஆதார் அட்டை மட்டும் போதாது. பிறந்த தேதியை நிரூபிக்கும் ஆவணம் அவசியம். பிறப்புச் சான்றிதழ், 10ஆம் வகுப்பு மார்க் ஷீட், பாஸ்போர்ட் அல்லது வாக்காளர் அட்டை போன்றவற்றை சமர்ப்பிக்க வேண்டும். எனவே, எந்த பெரிய நிதி நடவடிக்கையையும் தொடங்குவதற்கு முன் உங்கள் பான் சரியாக உள்ளதா, ஆதாரத்துடன் இணைக்கப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும். இல்லையெனில் ஒரு சிறிய தவறு பெரிய செலவாக மாறலாம்.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
பான் அட்டை
வங்கி
வங்கிக் கணக்கு
வருமான வரி
வரி

Latest Videos
Recommended Stories
Recommended image1
ரூ.10,000 அபராதம்.. வாகன ஓட்டிகளே அலெர்ட்.. இந்த ஒரு தவறை செய்யாதீங்க!
Recommended image2
பாஸ்டேக் அப்டேட் செய்யாதவர்கள் கவனத்திற்கு.. பிளாக்லிஸ்ட் அபாயம்.. உஷார்.!
Recommended image3
Health Insurance: ₹15 லட்சத்துக்கும் குறைவா ஹெல்த் இன்சூரன்ஸ் வச்சி இருக்கீங்களா? பெரிய ஆபத்து காத்திருக்கு.! இத படிங்க முதல்ல.!
Related Stories
Recommended image1
ஆதார் கார்டு தொலைந்ததா? இப்படி செய்தால் உடனே கிடைக்கும்!
Recommended image2
ஜூன் 14க்குள் ஆதார் அப்டேட் செய்யுங்கள்.. இல்லையெனில் கட்டணம் கட்ட வேண்டி வரும்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved