MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • இந்தியாவின் ஒரே தனியார் ரயில் நிலையம்; எங்கு உள்ளது?

இந்தியாவின் ஒரே தனியார் ரயில் நிலையம்; எங்கு உள்ளது?

இந்தியாவில் 7,308க்கும் மேற்பட்ட ரயில் நிலையங்கள் உள்ளன. ஆனால் ஒரே ஒரு தனியார் ரயில் நிலையம் மட்டுமே உள்ளது. அது எது, அதன் சிறப்பம்சங்கள் என்ன என்பதை இங்கே காணலாம்.

2 Min read
Author : Raghupati R
Published : May 03 2025, 01:25 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

நம் இந்திய ரயில்வே உலகின் ஐந்து பெரிய ரயில்வே வலைப்பின்னல்களில் ஒன்றாகும். இந்தியாவில் 7,308க்கும் மேற்பட்ட ரயில் நிலையங்கள் செயல்படுகின்றன. தினமும் 13,000க்கும் மேற்பட்ட ரயில்களில் 2 கோடிக்கும் மேற்பட்ட பயணிகள் பயணிக்கின்றனர். அதிகப்படியான பயணிகள் பயணிப்பதால் இந்திய அரசின் அதிக வருவாய் ஈட்டும் துறையாக ரயில்வே உள்ளது. இந்திய ரயில்வே இந்தியப் பொருளாதாரத்தின் முதுகெலும்பாகவும், நாட்டின் மிகவும் பிரபலமான மற்றும் மலிவான போக்குவரத்து முறையாகவும் உள்ளது.

25
indian railways

indian railways

தனியார் ரயில் நிலையம்

இந்திய ரயில்வேயின் நிர்வாகத்தை இந்திய அரசே கவனித்து வருகிறது. நாட்டின் அனைத்து ரயில்களும் இந்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் வருகின்றன. ஆனால் இந்தியாவில் ஒரு தனியார் ரயில் நிலையம் உள்ளது. அது எதுவென்று தெரியுமா? இந்த ரயில் நிலையம் சர்வதேச தரம் வாய்ந்த வசதிகளைக் கொண்டுள்ளது. இந்த ரயில் நிலையத்தின் பெயர் ராணி கமலாபதி. முன்பு இது ஹபிப்கஞ்ச் ரயில் நிலையம் என்று அழைக்கப்பட்டது. 2021 நவம்பரில் ராணி கமலாபதி ரயில் நிலையம் என மறுபெயரிடப்பட்டது.

Related Articles

Related image1
சென்னை டூ ராமேஸ்வரம் 8 மணி நேரத்தில் போகலாம்! 'வந்தே பாரத்' ரயில் குறித்து குட் நியூஸ்!
Related image2
சென்னை டூ திருச்சி இனி ஜெட் வேகத்தில் பறக்கலாம்! ரயில்வே சொன்ன குட் நியூஸ்!
35
Private railway station

Private railway station

இந்த ரயில் நிலையத்தில் என்னென்ன வசதிகள் உள்ளன?

பெரிய பார்க்கிங், 24*7 மின்சாரம், சுத்தமான குடிநீர், குளிர்சாதன வசதி கொண்ட அறைகள், அலுவலகம், கடைகள், அதிவேக எஸ்கலேட்டர், லிஃப்ட், ஆங்கர் ஸ்டோர், ஆட்டோமொபைல் ஷோரூம்கள், மாநாட்டு மையம், ஹோட்டல் மற்றும் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைகள் போன்றவை உள்ளது.

45
India's first private railway station

India's first private railway station

இந்த ரயில் நிலையம் எங்கே உள்ளது?

ராணி கமலாபதி ரயில் நிலையம் மத்தியப் பிரதேசத்தின் ஹபிப்கஞ்சில் உள்ளது. இது புறநகர் போபாலில் உள்ளது. இந்த நிலையம் புது தில்லிக்கும் சென்னைக்கும் இடையே நேரடி இணைப்பை வழங்குகிறது. ஜூன் 2007 இல் இந்த நிலையம் தனியார்மயமாக்கப்பட்டது. பொது-தனியார் கூட்டாண்மையில் இந்த ரயில் நிலையம் மேம்படுத்தப்பட்டுள்ளது. அரசு மற்றும் தனியார் இணைந்து இந்த ரயில் நிலையத்தை உயர் தரத்திற்கு கொண்டு சென்றுள்ளனர். பன்சல் குழுமம் என்ற தனியார் உள்கட்டமைப்பு நிறுவனம் மற்றும் இந்திய ரயில் நிலைய மேம்பாட்டுக் கழகம் (IRSDC) இணைந்து பணியாற்றுகின்றன. நவம்பர் 15, 2021 அன்று பிரதமர் நரேந்திர மோடி இந்த ரயில் நிலையத்தை திறந்து வைத்தார்.

55
First private railway station in India

First private railway station in India

ராணி கமலாபதி ரயில் நிலையம்

இந்த நிலையத்தின் நிர்வாகத்தை தனியார் நிறுவனம் செய்து வருகிறது, ஆனால் அது இந்திய அரசுக்குச் சொந்தமானது. ராணி கமலாபதி ரயில் நிலையத்தை மறுசீரமைக்க ரூ.450 கோடி செலவிடப்பட்டுள்ளது. இதன் மூலம் அனைத்து உள்கட்டமைப்பு மற்றும் சர்வதேச தரம் வாய்ந்த வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. மக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த தனி நுழைவு வாயில் மற்றும் வெளியேறும் வாயில்கள் அமைக்கப்பட்டுள்ளன. 18 ஆம் நூற்றாண்டின் கோண்ட் ராணி, துணிச்சலான மற்றும் போராளி ராணி கமலாபதியின் பெயர் புதுப்பிக்கப்பட்ட ரயில் நிலையத்திற்கு சூட்டப்பட்டுள்ளது.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ரயில்
தொடர்வண்டிப் போக்குவரத்து
இந்திய இரயில்வே
தொடருந்து நிலையம்

Latest Videos
Recommended Stories
Recommended image1
தங்கத்தின் மீது இவ்வளவு வரிகளா? நகை வாங்குவதற்கு முன் இதை அவசியம் தெரிஞ்சிக்கோங்க!
Recommended image2
வெயிட்டிங் டிக்கெட் இனி ஈசியா கன்பார்ம் ஆகும்.. IRCTC-யில் 'சூப்பர்' ஆப்ஷன்.. நோட் பண்ணிக்கோங்க!
Recommended image3
ஒரு ரூபாய் நாணயம் தயாரிக்கும் செலவு எவ்வளவு தெரியுமா? ரொம்ப அதிகமா இருக்கே!
Related Stories
Recommended image1
சென்னை டூ ராமேஸ்வரம் 8 மணி நேரத்தில் போகலாம்! 'வந்தே பாரத்' ரயில் குறித்து குட் நியூஸ்!
Recommended image2
சென்னை டூ திருச்சி இனி ஜெட் வேகத்தில் பறக்கலாம்! ரயில்வே சொன்ன குட் நியூஸ்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved