MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • ரயில் பயணிகள் கவனத்திற்கு.. டிக்கெட் எடுக்க போறீங்களா? இனி இது இல்லாமல் முடியாது

ரயில் பயணிகள் கவனத்திற்கு.. டிக்கெட் எடுக்க போறீங்களா? இனி இது இல்லாமல் முடியாது

Indian Railways : ரயில்வே டிக்கெட் முன்பதிவில் மோசடியை தடுக்க புதிய விதிமுறை அமலுக்கு வருகிறது. இந்த மாற்றம் உண்மையான பயணிகளுக்கு டிக்கெட் கிடைப்பதை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

1 Min read
Author : Raghupati R
Published : Sep 16 2025, 10:22 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
இந்திய ரயில்வே அறிவிப்பு
Image Credit : our own

இந்திய ரயில்வே அறிவிப்பு

தற்போது, ​​ரயில்களில் இருக்கை உறுதி செய்வது பெரும் சிரமமாக உள்ளது. டிக்கெட் மோசடி காரணமாக, உண்மையில் பயணம் செய்ய விரும்புவோர் டிக்கெட் பெற முடியாமல் தவிக்கிறார்கள். இதை தடுக்கும் வகையில், ரயில்வே தற்போது பெரிய மாற்றத்தை கொண்டு வருகிறது. இனி சாதாரண ரிசர்வேஷன் டிக்கெட்டுகளுக்கும், தட்கல் போன்று ஆதார் அங்கீகாரம் கட்டாயம் செய்யப்பட்டுள்ளது.

25
ரயில் டிக்கெட் முன்பதிவு
Image Credit : Google

ரயில் டிக்கெட் முன்பதிவு

ரயில்வே துறை, டிக்கெட் முன்பதிவு முறையில் மாற்றங்களை கூறியுள்ளது. அக்டோபர் 1 முதல், தட்கல் டிக்கெட்டுக்கு இருந்த ஆதார் சரிபார்ப்பு விதி, சாதாரண முன்பதிவு டிக்கெட்டுகளுக்கும் பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது. டிக்கெட் புக்கிங் முறையில் ஏற்படும் மோசடிகளை தடுப்பதே இதன் நோக்கம் என ரயில்வே அதிகாரிகள் கூறியுள்ளனர்.

Related Articles

Related image1
5-ஸ்டார் ஹோட்டல் வசதியுடன் வரும் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்.. எப்போது தெரியுமா?
Related image2
சென்னைவாசிகள் கவனத்துக்கு..! புறநகர் ரயில் சேவையில் திடீர் மாற்றம்..! நோட் பண்ணிக்கோங்க!
35
தட்கல் முன்பதிவு நடைமுறை
Image Credit : Google

தட்கல் முன்பதிவு நடைமுறை

அக்டோபர் 1 முதல், முன்பதிவு திறக்கும் முதல் 15 நிமிடங்களில், ஆதார் சரிபார்ப்பு செய்யப்பட்ட பயணிகளுக்கு மட்டுமே டிக்கெட் புக்கிங் செய்ய அனுமதி வழங்கப்படும். இந்த விதி IRCTC இணையதளம் மற்றும் மொபைல் ஆப்பில் மட்டும் பொருந்தும். இதுவரை இது தட்கல் டிக்கெட்டுகளுக்கே இருந்தது. இப்போது அதை விரிவாக்கம் செய்கிறார்கள். இதன் மூலம் டிக்கெட் உண்மையான பயணிகளுக்கு கிடைப்பதோடு, அங்கீகரிக்கப்படாத ஏஜென்ட்கள் மூலம் நடக்கும் தவறுகள் குறைக்கப்படும்.

45
ரயில்வே தட்கல் விதி
Image Credit : our own

ரயில்வே தட்கல் விதி

மேலும், தற்போதைய விதிப்படி அங்கீகரிக்கப்பட்ட டிக்கெட் ஏஜென்ட்களுக்கு முதல் 10 நிமிடங்களில் டிக்கெட் புக்கிங் செய்ய தடைவிதிப்பு தொடரும். ஆனால், ரயில் நிலையங்களில் உள்ள PRS கவுண்டர்களில் டிக்கெட் முன்பதிவு நேரம் மற்றும் நடைமுறையில் எந்த மாற்றமும் இல்லை எனவும் ரயில்வே விளக்கம் அளித்துள்ளது.

55
தட்கல் டிக்கெட் முன்பதிவு
Image Credit : our own

தட்கல் டிக்கெட் முன்பதிவு

இந்த புதிய முறையை செயல்படுத்த, ரெயில்வே தகவல் மையத்துக்கும் (CRIS) ஐஆர்சிடிசிக்கும் தொழில்நுட்ப மாற்றங்கள் செய்ய உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. மேலும், மண்டல ரயில்வே அதிகாரிகளுக்கு வழிகாட்டுதல் பிறப்பித்து, விதிமுறைகள் முறையாக பின்பற்றப்படுகிறதா என்பதை கண்காணிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த மாற்றம் ஆன்லைன் டிக்கெட் சூழலை வலுப்படுத்தி, மோசடிகளை குறைக்கும் என ரயில்வே நம்புகிறது.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
தொடர்வண்டிப் போக்குவரத்து
இந்திய இரயில்வே
ரயில்
தொடர்வண்டி பயணச்சீட்டு
இந்திய ரயில்வே உணவு வழங்கல் மற்றும் சுற்றுலா கழகம்

Latest Videos
Recommended Stories
Recommended image1
வெயிட்டிங் டிக்கெட் இனி ஈசியா கன்பார்ம் ஆகும்.. IRCTC-யில் 'சூப்பர்' ஆப்ஷன்.. நோட் பண்ணிக்கோங்க!
Recommended image2
ஒரு ரூபாய் நாணயம் தயாரிக்கும் செலவு எவ்வளவு தெரியுமா? ரொம்ப அதிகமா இருக்கே!
Recommended image3
Post Office RD: உங்க பணத்திற்கு கவர்மெண்ட் கேரண்டி..! ரூ.25 லட்சம் வரை ஈசியா சம்பாதிக்கலாம்..
Related Stories
Recommended image1
5-ஸ்டார் ஹோட்டல் வசதியுடன் வரும் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்.. எப்போது தெரியுமா?
Recommended image2
சென்னைவாசிகள் கவனத்துக்கு..! புறநகர் ரயில் சேவையில் திடீர் மாற்றம்..! நோட் பண்ணிக்கோங்க!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved