MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • வெயிட்டிங் டிக்கெட் இனி ஈசியா கன்பார்ம் ஆகும்.. IRCTC-யில் 'சூப்பர்' ஆப்ஷன்.. நோட் பண்ணிக்கோங்க!

வெயிட்டிங் டிக்கெட் இனி ஈசியா கன்பார்ம் ஆகும்.. IRCTC-யில் 'சூப்பர்' ஆப்ஷன்.. நோட் பண்ணிக்கோங்க!

ரயிலில் வெயிட்டிங் லிஸ்ட் டிக்கெட் கன்பார்ம் ஆகவில்லை என கவலைப்படுகிறீர்களா? இனி டிக்கெட் கன்பார்ம் ஆகும் வகையில் சூப்பர் ஆப்ஷனை இந்த செய்தியில் பார்க்கலாம்.

2 Min read
Author : Rayar r
Published : Feb 16 2026, 05:45 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13
ரயிலில் இடம் கிடைப்பது குதிரை கொம்பு
Image Credit : social media

ரயிலில் இடம் கிடைப்பது குதிரை கொம்பு

இந்தியாவில் தினமும் பல லட்சக்கணக்கான பயணிகள் ரயில்களில் பயணம் செய்து வருவதால் கன்பார்ம் டிக்கெட் கிடைப்பது குதிரை கொம்பாகி விட்டது. சில நேரங்களில் குறைந்த எண்ணிக்கையிலான வெயிட்டிங் லிஸ்ட் இருந்தும் கன்பார்ம் டிக்கெட் கிடைக்காமல் பயணிகள் ஏமாற்றமடைகின்றனர். இந்த நிலையில், வெயிட்டிங் லிஸ்ட் டிக்கெட் இனி ஈசியா கன்பார்ம் ஆகும் வகையிலான IRCTC-யின் சூப்பர் ஆப்ஷன் குறித்து இந்த செய்தியில் பார்க்கலாம்.

23
இனி டிக்கெட் ஈஸியாக கன்பார்ம் ஆகும்
Image Credit : Google

இனி டிக்கெட் ஈஸியாக கன்பார்ம் ஆகும்

அதாவது இந்தியன் ரயில்வே விகல்ப் (Vikalp) என்ற திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இது பயணிகளுக்கு கன்பார்ம் சீட் அல்லது கன்பார்ம் பெர்த் கிடைப்பதற்கு வழிவகை செய்கிறது. நீங்கள் ரயிலில் டிக்கெட் புக் செய்யும்போதே "I opt for Vikalp Scheme" என்ற பாக்ஸ் உங்களுக்கு காண்பிக்கும்.

இந்த ஆப்ஷனை கிளிக் செய்தால் நீங்கள் புக் செய்த ரயிலில் டிக்கெட் இல்லை என்றால் அதே நாளில் நீங்கள் பயணிக்க வேண்டிய இடத்துக்கு செல்லும் ரயில்களில் டிக்கெட் இருந்தால் கன்பார்ம் ஆகும்.

இந்தியன் ரயில்வே 'விகல்ப்' திட்டம்

எளிமையாக சொல்ல வேண்டும் என்றால் நெல்லையில் இருந்து சென்னை செல்லும் ரயிலில் உங்களுக்கு வெயிட்டிங் லிஸ்ட் டிக்கெட் இருந்து அது கடைசி வரை கன்பார்ம் ஆகவில்லை என்றால் உங்களால் அந்த ரயிலில் பயணிக்க முடியாது. 

ஆனால் நீங்கள் "I opt for Vikalp Scheme" என்ற ஆப்ஷனை முன்கூட்டியே கிளிக் செய்து இருந்தால் நெல்லையில் இருந்து சென்னைக்கு செல்லும் அடுத்த ரயிலில் உங்களுக்கு இருக்கை அல்லது பெர்த் வழங்கப்பட்டு பயணம் செய்ய முடியும்.

Related Articles

Related image1
கடைசி நேர டென்ஷன் இனி இல்லை.. ரயில் டிக்கெட் போர்டிங் ஸ்டேஷனை மாற்றுவது எப்படி? இதோ எளிய வழி!
Related image2
பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்.. ரயில் டிக்கெட்டுகளுக்கு 3% தள்ளுபடி.. எப்படி பெறுவது? முழு விவரம்!
33
7 ரயில்கள் மாற்று ரயில்களாக கிடைக்கும்
Image Credit : Google

7 ரயில்கள் மாற்று ரயில்களாக கிடைக்கும்

ஒருவேளை நீங்கள் இந்த ஆப்ஷனை புக் செய்யும்போது தேர்வு செய்யாவிட்டால், 'My Transactions' பகுதிக்குச் சென்று 'Opt Vikalp' என்ற வசதியைப் பயன்படுத்தி மாற்றிக் கொள்ளலாம். ஏற்கெனவே முன்பதிவு செய்த ரயில் புறப்படும் நேரத்திலிருந்து அடுத்த 12 மணி நேரத்திற்குள் இயக்கப்படும் ரயில்களில் நீங்கள் பயணிக்கலாம். அதிகப்பட்சம் 7 ரயில்களை நீங்கள் மாற்று ரயில்களாக தேர்வு செய்ய முடியும்.

கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுமா?

இந்த விகல்ப் ஆப்ஷனில் மாற்று ரயில்களில் காலியாக இருக்கும் இடத்தை பொறுத்தே உங்களுக்கு இருக்கை அல்லது பெர்த் வழங்கப்படும். மற்றொரு ரயிலில் பெர்த் கன்பார்ம் ஆகும்போது கூடுதலாக கட்டணம் வசூலிக்கப்படாது. 

அதே வேளையில் நீங்கள் ஏற்கெனவே சூப்பர் பாஸ்ட் ரயிலில் புக் செய்து விட்டு, விகல்ப் திட்டத்தின் மூலம் சாதாரண எக்ஸ்பிரஸ் ரயில்களுக்கு மாற்றம் செய்யப்பட்டால் இதில் மாறுபடும் மிச்சமான கட்டணத்தை திரும்ப பெற முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

RR
Rayar r
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
இந்திய இரயில்வே
தொடர்வண்டி விதிகள்
தொடர்வண்டி பயணச்சீட்டு

Latest Videos
Recommended Stories
Recommended image1
ஒரு ரூபாய் நாணயம் தயாரிக்கும் செலவு எவ்வளவு தெரியுமா? ரொம்ப அதிகமா இருக்கே!
Recommended image2
Post Office RD: உங்க பணத்திற்கு கவர்மெண்ட் கேரண்டி..! ரூ.25 லட்சம் வரை ஈசியா சம்பாதிக்கலாம்..
Recommended image3
இந்த வாரம் 4 நாட்களுக்கு வங்கி விடுமுறை.. பேங்க் செல்வதற்கு முன்.. தேதிகளை நோட் பண்ணுங்க
Related Stories
Recommended image1
கடைசி நேர டென்ஷன் இனி இல்லை.. ரயில் டிக்கெட் போர்டிங் ஸ்டேஷனை மாற்றுவது எப்படி? இதோ எளிய வழி!
Recommended image2
பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்.. ரயில் டிக்கெட்டுகளுக்கு 3% தள்ளுபடி.. எப்படி பெறுவது? முழு விவரம்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved