MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • புதிய வருமான வரி மசோதா வாபஸ்! திருத்தங்களுடன் மீண்டும் தாக்கல் செய்ய முடிவு

புதிய வருமான வரி மசோதா வாபஸ்! திருத்தங்களுடன் மீண்டும் தாக்கல் செய்ய முடிவு

கடந்த பிப்ரவரியில் தாக்கல் செய்யப்பட்ட வருமான வரி மசோதா திரும்பப் பெறப்பட்டு, திருத்தங்களுடன் புதிய மசோதா ஆகஸ்ட் 11-ல் தாக்கல் செய்யப்படும். தேர்வுக்குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில், இந்த மசோதா வரி செலுத்தும் முறையை எளிமையாக்கும்.

1 Min read
Author : SG Balan
Published : Aug 08 2025, 06:43 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13
புதிய வருமான வரி மசோதா
Image Credit : Getty

புதிய வருமான வரி மசோதா

கடந்த பிப்ரவரி மாதம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட புதிய வருமான வரி மசோதாவை திரும்பப் பெற மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்த மசோதாவிற்குப் பதிலாக, திருத்தப்பட்ட புதிய மசோதா வரும் ஆகஸ்ட் 11-ஆம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

23
தேர்வுக்குழுவின் பரிசீலனை
Image Credit : Asianet News

தேர்வுக்குழுவின் பரிசீலனை

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் டெல்லியில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த மசோதாவை திரும்பப் பெறுவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

கடந்த பிப்ரவரி மாதம் தாக்கல் செய்யப்பட்ட வருமான வரி மசோதா, தேர்வுக்குழுவின் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டது. பைஜெயந்த் பாண்டா தலைமையிலான இந்தக் குழு பல்வேறு திருத்தங்களைப் பரிந்துரைத்தது. அக்குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில், புதிய திருத்தப்பட்ட வருமான வரி மசோதாவை மத்திய அரசு தற்போது தயாரித்துள்ளது.

Related Articles

Related image1
வருமான வரி தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி நீட்டிப்பு.. இல்லைனா அபராதம் விதிக்கப்படும்
Related image2
வங்கியில் பணத்தை டெபாசிட் செய்ய போறீங்களா? வருமான வரித்துறை நோட்டீஸ் கொடுக்கலாம் கவனமா இருங்க
33
வரி செலுத்தும் முறை
Image Credit : iSTOCK

வரி செலுத்தும் முறை

இந்த புதிய மசோதா, 1961-ஆம் ஆண்டின் வருமான வரிச் சட்டத்திற்கு மாற்றாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. வரி செலுத்தும் முறையை மேலும் எளிமையாக்கும் நோக்கத்துடன் இந்தச் சட்டம் கொண்டுவரப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

SB
SG Balan
முதுகலை பட்டதாரி. டிஜிட்டலுக்கு செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். கடந்த 2 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் உதவி ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். வணிகம், தொழில்நுட்பம், கல்வி, அரசியல் செய்திகளில் ஆர்வமுள்ளவர். இதற்கு முன்பு டைம்ஸ் இன்டர்நெட்டில் பணிபுரிந்தார்.
வருமானம்
இந்தியா

Latest Videos
Recommended Stories
Recommended image1
எக்ஸ்பிரஸ்வே டோல் குறைப்பு.. இனி முழு கட்டணம் இல்லை.. மத்திய அரசு அறிவிப்பு
Recommended image2
SBI வாடிக்கையாளர்களாக நீங்கள்! அப்படினா! இந்த செய்தி உங்களுக்கு தான்! இன்று முதல் அமலாகிறது!
Recommended image3
ரூ.2 லட்சம் முதலீடு போதும்.! மாதம் ரூ.30,000 வரை சம்பாதிக்கலாம்.! Small Business Ideas in Tamil
Related Stories
Recommended image1
வருமான வரி தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி நீட்டிப்பு.. இல்லைனா அபராதம் விதிக்கப்படும்
Recommended image2
வங்கியில் பணத்தை டெபாசிட் செய்ய போறீங்களா? வருமான வரித்துறை நோட்டீஸ் கொடுக்கலாம் கவனமா இருங்க
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved