MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • Gold: தங்க நகை வாங்க போறீங்களா? இந்த 2 விஷயத்தை கவனிங்க, இல்லைனா நஷ்டம்தான்!

Gold: தங்க நகை வாங்க போறீங்களா? இந்த 2 விஷயத்தை கவனிங்க, இல்லைனா நஷ்டம்தான்!

Gold Buying Tips: தங்கம் விலை ராக்கெட் வேகத்தில் சென்று கொண்டிருக்கிறது. தங்க நகை வாங்குவதற்கு முன்பு கவனிக்க வேண்டிய 2 விஷயங்கள் குறித்து இந்த செய்தியில் பார்ப்போம். 

2 Min read
Author : Rayar r
Published : Apr 20 2026, 06:28 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
தங்கம் விலை
Image Credit : Getty

தங்கம் விலை

தங்கம் விலை ஒவ்வொரு நாளும் உச்சம் அடைந்து கொண்டே இருக்கிறது. தமிழகத்தின் தற்போதைய நிலவரப்படி சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.14,300 ஆகவும், ஒரு சவரன் ரூ.1,14,400 ஆகவும் உள்ளது. அதேபோல், 24 காரட் சுத்த தங்கம் 10 கிராமுக்கு ரூ.1,55,400 என்ற உச்சத்தைத் தாண்டியுள்ளது. வெள்ளியும் விலை உயர்ந்து வருகிறது. தமிழ்நாட்டில் ஒரு கிலோ வெள்ளி ₹2,80,000 என்ற புதிய இலக்கை எட்டியுள்ளது.

தங்கம் விலை தொடர் உச்சம்

2026-ம் ஆண்டில் தங்கம் விலை ஜெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது. டிசம்பர் 31, 2025 அன்று, தங்கம் ₹1.33 லட்சமாக இருந்தது. இந்த ஆண்டு ஜனவரி 29 அன்று, தங்கம் இதுவரை இல்லாத அளவுக்கு ₹1.76 லட்சம் என்ற உச்சத்தை எட்டியது. அதேபோல் டிசம்பர் 31, 2025 அன்று, ஒரு கிலோ வெள்ளி ₹2.30 லட்சமாக இருந்தது. இந்த நான்கு மாதங்களில் வெள்ளி விலை பல்வேறு ஏற்ற இறக்கங்களைக் கண்டு தற்போது ₹2.80 லட்சம் என்ற உயர் நிலையில் நீடித்து வருகிறது.

24
தங்கம் வாங்கும் முன் கவனிக்க வேண்டிய விஷயம்
Image Credit : Gemini

தங்கம் வாங்கும் முன் கவனிக்க வேண்டிய விஷயம்

இப்படி தங்கம் விலை ராக்கெட் வேகத்தில் சென்று கொண்டிருக்கும்போது அதை வாங்குவது சாதாரண காரியமல்ல. கடும் உழைப்பை கொட்டி சிறுக சிறுக பணம் சேர்த்து தான் தங்கம் வாங்குகிறோம். தங்கம் வாங்கும்போது ஒரு சின்னத் தவறு கூட உங்களுக்கு ஆயிரக்கணக்கில் நஷ்டத்தை ஏற்படுத்தலாம். ஆகையால் தங்க‌ நகை வாங்கும்போது கவனிக்க வேண்டிய முக்கியமான 2 விஷயங்கள் இருக்கின்றன.

Related Articles

Related image1
Gold Rate Today: தொடர் ஏற்றத்திற்கு பின் சறுக்கிய தங்கம்.! நகை கடைகளுக்கு ஓடிய இல்லத்தரசிகள்.!
Related image2
700 கோடி சொத்து, 20 கோடி மதிப்புள்ள தங்கம், வெளிநாட்டில் சொகுசு வீடுகள்.! இந்தியாவை அலறவிடும் கதாநாயகி யார் தெரியுமா? | Priyanka Chopra Net Worth
34
BIS ஹால்மார்க் & HUID குறியீடு
Image Credit : Gemini

BIS ஹால்மார்க் & HUID குறியீடு

'BIS ஹால்மார்க்' இல்லாத தங்க நகைகளை ஒருபோதும் வாங்காதீர்கள். நகையில் உள்ள 6 இலக்க ஆல்ஃபாநியூமரிக் (HUID) குறியீட்டைச் சரிபார்க்கவும். இதன் மூலம், கடைக்காரர்கள் சொல்லும் காரட் தரத்தில் தங்கம் உள்ளதா என்பதை 'BIS Care' செயலி மூலம் உறுதி செய்யலாம்.

 நகைக்கடையில் சொல்லப்படும் விலையை, தமிழ்நாட்டின் அதிகாரப்பூர்வ அமைப்பான MJDMA (The Jewellers & Diamond Traders' Association Madras) இணையதளம் அல்லது நம்பகமான செய்தி செயலிகள் மூலம் சரிபார்க்கவும். 24 காரட் (சுத்த தங்கம்), 22 காரட் (நகை செய்ய), மற்றும் 18 காரட் தங்கத்தின் விலைகள் வெவ்வேறாக இருக்கும் என்பதை நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும்.

44
சேதாரத்தை தெரிந்து கொள்வதும் முக்கியம்
Image Credit : Getty

சேதாரத்தை தெரிந்து கொள்வதும் முக்கியம்

மேலும், விலையுடன் சேர்க்கப்படும் சேதாரம் (Wastage) குறித்தும் கேட்டுத் தெரிந்துகொள்வது உங்கள் லாபத்தை உறுதி செய்யும். இவையெல்லாம் நீங்கள் தெரிந்து கொண்டால் சில கடைக்காரர்களால் உங்களை ஏமாற்ற முடியாது. பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தங்கம்-வெள்ளி விலைகள் சந்தை நிலவரங்களின் அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளன. இந்த விலைகளில் ஜிஎஸ்டி (GST) மற்றும் இதர வரிகள் சேர்க்கப்படவில்லை. எனவே, உங்கள் நகரம் மற்றும் ஷோரூமில் இறுதி விலையில் மாற்றம் இருக்கலாம். முதலீடு செய்வதற்கு முன் உங்கள் நிதி ஆலோசகரிடம் ஆலோசனை பெறவும்.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

RR
Rayar r
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
தங்கம்
தங்க நகை

Latest Videos
Recommended Stories
Recommended image1
Business Ideas: கைநிறைய சம்பாதிக்க ஆசையா? ரூ.1 லட்சம் முதலீடு போதும்.. டாப் 5 பிசினஸ் ஐடியாக்கள் இதோ!
Recommended image2
வெள்ளி விலை 200% உயர்வு.. விலை உயர்ந்தாலும் வாங்கும் மக்கள்.. என்ன காரணம்.?
Recommended image3
Kitchen Garden: மளிகை செலவு இனி பாதிதான்! கோடையில் இந்த 10 காய்களை ஈஸியா வளர்க்கலாம்!
Related Stories
Recommended image1
Gold Rate Today: தொடர் ஏற்றத்திற்கு பின் சறுக்கிய தங்கம்.! நகை கடைகளுக்கு ஓடிய இல்லத்தரசிகள்.!
Recommended image2
700 கோடி சொத்து, 20 கோடி மதிப்புள்ள தங்கம், வெளிநாட்டில் சொகுசு வீடுகள்.! இந்தியாவை அலறவிடும் கதாநாயகி யார் தெரியுமா? | Priyanka Chopra Net Worth
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved