MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • Gautam Adani Net Worth: அம்பானியை முந்தி நம்பர் 1 பணக்காரரானார் கௌதம் அதானி.. சொத்து மதிப்பு எவ்வளவு?

Gautam Adani Net Worth: அம்பானியை முந்தி நம்பர் 1 பணக்காரரானார் கௌதம் அதானி.. சொத்து மதிப்பு எவ்வளவு?

Gautam Adani Net Worth: அதானி குழுமத்தின் தலைவர் கௌதம் அதானி, முகேஷ் அம்பானியைப் பின்னுக்குத் தள்ளி மீண்டும் ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரர் என்ற இடத்தைப் பிடித்துள்ளார். இது தொடர்பான முழு விவரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

2 Min read
Author : Rayar r
Published : Apr 17 2026, 05:51 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
 ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரர் கௌதம் அதானி
Image Credit : freepik

ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரர் கௌதம் அதானி

அதானி குழுமத்தின் தலைவர் கௌதம் அதானி, மீண்டும் ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரர் என்ற மைல்கல்லை எட்டியுள்ளார். ஏப்ரல் 17, 2026 தேதியிட்ட ப்ளூம்பெர்க் பில்லியனர்ஸ் இன்டெக்ஸ் (Bloomberg Billionaires Index) அறிக்கையின்படி, அவரின் சொத்து மதிப்பு 92.6 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. இதன் மூலம், உலகப் பணக்காரர்கள் பட்டியலில் அவர் 19வது இடத்தைப் பிடித்துள்ளார். ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி, 90.8 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் இந்தப் பட்டியலில் 20வது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளார்.
25
அதானி குழும நிறுவனங்களின் பங்குகள் வளர்ச்சி
Image Credit : Getty

அதானி குழும நிறுவனங்களின் பங்குகள் வளர்ச்சி

2026ஆம் ஆண்டு முழுவதும் அதானி குழும நிறுவனங்களின் பங்குகள் தொடர்ச்சியாக நல்ல வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளன. இதன் காரணமாக, இந்த ஆண்டில் மட்டும் கௌதம் அதானியின் சொத்து மதிப்பு 8.1 பில்லியன் டாலர் அதிகரித்துள்ளது. இந்த அபார வளர்ச்சிதான் அவரை ஆசியாவின் நம்பர் 1 பணக்காரராக்கி உள்ளது.

Related Articles

Related image1
ரூ.2,708 கோடி நன்கொடையை வாரி வழங்கி ஷிவ் நாடார் நம்பர் 1.. அம்பானி, அதானி எந்த இடம்?
Related image2
அம்பானி vs அதானி: டிகிரி முக்கியமா? அனுபவம் முக்கியமா? இந்தியாவின் டாப் 2 பணக்காரர்கள் படித்தது என்ன?
35
ஒரே நாளில் சொத்து மதிப்பு அதிகரிப்பு
Image Credit : ANI

ஒரே நாளில் சொத்து மதிப்பு அதிகரிப்பு

வியாழக்கிழமை வர்த்தகத்தில் அதானி குழுமப் பங்குகளின் மதிப்பு உயர்ந்தது, கௌதம் அதானியின் சொத்து மதிப்பில் நேரடியாகப் பிரதிபலித்தது. இந்த திடீர் ஏற்றத்தால், ஒரே நாளில் அவருடைய சொத்து மதிப்பு சுமார் 3.56 பில்லியன் டாலர் அதிகரித்தது. ஒருபக்கம் கௌதம் அதானியின் சொத்து மதிப்பு உயர்ந்த நிலையில், முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு இந்த ஆண்டில் சுமார் 16.9 பில்லியன் டாலர் குறைந்துள்ளது. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகளின் ஏற்ற இறக்கமான செயல்பாடுகளே இதற்குக் காரணமாகக் கூறப்படுகிறது.

45
ஏழு பேரின் சொத்து மதிப்பு குறைந்தது
Image Credit : social media

ஏழு பேரின் சொத்து மதிப்பு குறைந்தது

2026ஆம் ஆண்டில் உலகின் பல முன்னணி கோடீஸ்வரர்களின் சொத்து மதிப்பில் ஏற்ற இறக்கங்கள் காணப்பட்டன. டாப் 20 பணக்காரர்களில் ஏழு பேரின் சொத்து மதிப்பு இந்த ஆண்டு குறைந்துள்ளது. இதில் பெர்னார்ட் அர்னால்ட் 44 பில்லியன் டாலர் இழப்புடன் மிகப்பெரிய சரிவைச் சந்தித்தார். இவரைத் தவிர, ஸ்டீவ் பால்மர், லாரி எலிசன், பில் கேட்ஸ், வாரன் பஃபெட், அமான்சியோ ஒர்டேகா மற்றும் முகேஷ் அம்பானி ஆகியோரின் சொத்து மதிப்பும் குறைந்துள்ளது.
55
எலான் மஸ்க் உலகளவில் முதலிடம்
Image Credit : stockPhoto

எலான் மஸ்க் உலகளவில் முதலிடம்

எலான் மஸ்க் 656 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் உலகப் பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறார். லாரி பேஜ் 286 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் இரண்டாம் இடத்தில் உள்ளார். முதல் 10 இடங்களில் ஜெஃப் பெசோஸ், செர்ஜி பிரின், மார்க் ஜுக்கர்பெர்க், லாரி எலிசன், மைக்கேல் டெல், ஜென்சன் ஹுவாங், பெர்னார்ட் அர்னால்ட் மற்றும் ஜிம் வால்டன் ஆகியோரும் உள்ளனர்.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

RR
Rayar r
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
வணிகம்

Latest Videos
Recommended Stories
Recommended image1
9 ஆண்டுகளில் தங்கம் 5 மடங்கு உயர்வு.. இன்னும் ஏறுமா? மக்களே அலெர்ட்!
Recommended image2
Akshaya Tritiya 2026: அட்சய திருதியை ஷாக்! தங்கம் விலை இவ்வளவு உயருமா? வாங்கும் முன் இதை தெரிஞ்சுக்கோங்க!
Recommended image3
ஜூன் 14க்குள் ஆதார் அப்டேட் செய்யுங்கள்.. இல்லையெனில் கட்டணம் கட்ட வேண்டி வரும்!
Related Stories
Recommended image1
ரூ.2,708 கோடி நன்கொடையை வாரி வழங்கி ஷிவ் நாடார் நம்பர் 1.. அம்பானி, அதானி எந்த இடம்?
Recommended image2
அம்பானி vs அதானி: டிகிரி முக்கியமா? அனுபவம் முக்கியமா? இந்தியாவின் டாப் 2 பணக்காரர்கள் படித்தது என்ன?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved