- Home
- Business
- அப்பாடி ஒருவழியா விடிவுகாலம் வந்துடுச்சு! அக்கவுண்டல் செக் போட்டதும் உடனடி பணம் - RBI அதிரடி
அப்பாடி ஒருவழியா விடிவுகாலம் வந்துடுச்சு! அக்கவுண்டல் செக் போட்டதும் உடனடி பணம் - RBI அதிரடி
இந்திய ரிசர்வ் வங்கியின் புதிய அறிவிப்பின்படி, அக்டோபர் 4, 2025 முதல் செக் கிளியரன்ஸ் சில மணி நேரங்களில் முடிவடையும். CTS முறையில் மாற்றம் கொண்டு வரப்பட்டு, continuous clearing முறையில் இயங்கும்.

காத்திருந்தது கடந்த காலம்.!
வங்கிகளில் செக் செலுத்தினால் இரண்டு வேலை நாட்கள் வரை காத்திருக்க வேண்டிய அவசர நிலை இனி கடந்த காலமாகிறது. இந்திய ரிசர்வ் வங்கி (RBI) வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பின் படி, அக்டோபர் 4, 2025 முதல் செக் கிளியரன்ஸ் சில மணி நேரங்களில் முடிவடையப் போகிறது. இதற்காக தற்போது பயன்படுத்தப்படும் Cheque Truncation System (CTS) முறையில் பெரிய மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது.
Processing டைம் குறைகிறது.!
இப்போது வரை CTS ‘batch processing’ முறையில் இயங்கியது. அதனால் தான் T+1 அல்லது அதிகபட்சம் இரண்டு நாட்கள் ஆகி வந்தது. ஆனால் இனி அது continuous clearing முறையில், அதுவும் on-realisation-settlement அடிப்படையில் இயங்கும். இதன் மூலம் வங்கிகள் செக்கை ஸ்கேன் செய்து உடனடியாக பரிமாற்றம் செய்யும். சில மணி நேரங்களுக்குள் வாடிக்கையாளர் கணக்கில் பணம் சேர்க்கப்படும்.
கட்டம் கட்டமாக அமல்.!
இந்த மாற்றம் இரண்டு கட்டங்களாக அமல்படுத்தப்படுகிறது. முதல் கட்டம் அக்டோபர் 4 முதல் ஜனவரி 2, 2026 வரை. இதில் காலை 10 மணி முதல் 4 மணி வரை செக்குகள் அனுப்பப்படும். மாலை 7 மணிக்குள் வாங்கிய வங்கி (drawee bank) பதில் தர வேண்டும். பதில் தராதால் அது ‘deemed approved’ என கருதப்பட்டு செக் கிளியர் ஆகிவிடும். இரண்டாம் கட்டம் ஜனவரி 3, 2026 முதல். இதில் மூன்று மணி நேரத்துக்குள் செக் உறுதி செய்யப்பட வேண்டும். கிளியரிங் முடிந்ததும் ஒரு மணி நேரத்துக்குள் வாடிக்கையாளர் கணக்கில் தொகை சேர்க்கப்படும்.
பணம் உடனடியாக கணக்கில் வரும்
இதனால் வாடிக்கையாளர்களுக்கு ஏற்படும் நன்மைகள் பல. முக்கியமாக, பணம் உடனடியாக கணக்கில் வரும். பிசினஸ் பரிவர்த்தனைகளில் தாமதம் குறையும். வங்கிகளுக்குள் ஏற்படும் settlement risk குறையும். வாடிக்கையாளர்களின் banking அனுபவமும் மேம்படும். செக் கிளியரன்ஸ் என்பது இனி இரண்டு நாட்கள் காத்திருக்கும் செயலாக இல்லாமல், சில மணி நேரங்களில் முடிந்துவிடும் ஒரு வேகமான முறையாக மாறுகிறது.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

