MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • Union Budget 2026: வரி வருவாய் பகிர்வு ஏமாற்றமளிக்கிறது.. மத்திய அரசுக்கு ஷாக் கொடுத்த அன்புமணி..

Union Budget 2026: வரி வருவாய் பகிர்வு ஏமாற்றமளிக்கிறது.. மத்திய அரசுக்கு ஷாக் கொடுத்த அன்புமணி..

நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்ட 2026 - 27ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு வழிவகுக்கும் வகையில் பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டிருப்பதாக பாமக தலைவர் அன்புமணி கருத்து தெரிவித்துள்ளார்.

3 Min read
Author : Velmurugan s
Published : Feb 01 2026, 03:35 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
தமிழகத்திற்கு ஏராளமான திட்டங்கள்
Image Credit : Google

தமிழகத்திற்கு ஏராளமான திட்டங்கள்

பாமக தலைவர் அன்புமணி வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில், “2026 - 27ஆம் ஆண்டுக்கான மத்திய பொது நிதிநிலை அறிக்கையை நாடாளுமன்ற மக்களவையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் தாக்கல் செய்தார். அதில் தமிழ்நாட்டுக்காக ஏராளமான திட்டங்கள் அறிவிக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களில் உள்ள அரிய கனிமவளங்களை பயன்படுத்திக் கொள்ளும் வகையில் அரிய கனிம வழித்தடங்கள் அமைக்கப்படும், சென்னையிலிருந்து பெங்களூருவுக்கும், ஹைதராபத்திலிருந்து சென்னைக்கும் அதிவேக தொடர்வண்டிப் பாதைத் திட்டம் செயல்படுத்தப்படும், ஒதிஷா மாநிலம் தால்ச்சர் முதல் தமிழ்நாட்டின் ஆம்பூர் வரை புதிய நீர்வழிப்பாதை அமைக்கப்படும், பழவேற்காடு ஏரியில் சுற்றுலாவை மேம்படுத்தும் வகையில் 3 இடங்களில் பறவைகளை பார்வையிடும் மையங்கள் அமைக்கப்படும், 

முந்திரி உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில் பல திட்டங்கள் செயல்படுத்தப்படும், தமிழ்நாட்டில் ஜவுளித்துறையை ஊக்குவிக்கும் வகையில் ஒருங்கிணைந்த திட்டம் செயல்படுத்தப்படும், ஒவ்வொரு மாவட்டத்திலும் குறைந்தது ஒரு மகளிர் விடுதி அமைக்கப்படும், பொதிகை மலையில் மலையேற்றச் சுற்றுலாத் திட்டம் செயல்படுத்தப்படும், ஆதிச்சநல்லூரில் கலாச்சார மையம் அமைக்கப்படும் என்பன உள்ளிட்ட ஏராளமான திட்டங்கள் நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்தத் திட்டங்கள் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு வழி வகுக்கக்கூடியவை ஆகும். அதேநேரத்தில் அரிய கனிமவழித்தடங்கள் அமைக்கப்படுவதால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படாமலும், மக்களில் வாழ்வாதாரமும், வழித்தடங்களும் பாதிக்கப்படாமல் இருப்பதையும் அரசு உறுதி செய்ய வேண்டும்.

24
மூலதனச் செலவுக்கு நிதி அதிகரிப்பு
Image Credit : Asianet News

மூலதனச் செலவுக்கு நிதி அதிகரிப்பு

மத்திய பொது நிதிநிலை அறிக்கையில் மிகவும் குறிப்பிடத்தக்கது மூலதனச் செலவுகளுக்காக ரூ.12.20 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பது தான். கடந்த ஆண்டில் மூலதனச் செலவுகளுக்காக ரூ.11.21 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு, அது முழுமையாக செலவழிக்கப்பட்ட நிலையில், நடப்பாண்டில் அது 10% உயர்த்தப்பட்டுள்ளது. இதன்மூலம் நாடு முழுவதும் உள்ள கட்டமைப்புகள் மேம்படுத்தப்படும். இதனால் வேலைவாய்ப்புகளும், பணப்புழக்கமும் அதிகரிக்கும் என்பதால் இவையும் வரவேற்கத்தக்கவை.

சேவைத்துறையின் வளர்ச்சிக்கு உதவி செய்யும் வகையில், செமிகண்டக்டர் இயக்கம் 2.0 செயல்படுத்தப் படும் என்று அறிவித்துள்ள மத்திய அரசு, அத்திட்டத்திற்காக ரூ.40,000 கோடியை ஒதுக்கீடு செய்து இருப்பதும், தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் 500 அணைகளை கட்டும் திட்டம் செயல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருப்பதும் வரவேற்கத்தக்கவை ஆகும். தமிழ்நாட்டுக்கு பயனளிக்கும் வகையில் கைத்தறித்துறையை மேம்படுத்துவதற்கான மகாத்மா காந்தி கைத்தறித் திட்டமும் வரவேற்கத்தக்கதாகும்.

Related Articles

Related image1
Budget 2026: எதிர்பார்ப்புகளை தவிடு பொடியாக்கியதா 2026 பட்ஜெட்?! நீங்க எவ்ளோ வரி கட்டனும் தெரியுமா?
Related image2
பட்ஜெட்: காலி பெருங்காய டப்பா..! தமிழகத்துக்கு மட்டுமல்ல, எல்லோருக்கும் ஏமாற்றம்தான்..! புட்டு புட்டு வைக்கும் நிபுணர்கள்..!
34
மருந்துகளுக்கான சுங்க வரி ரத்து
Image Credit : Asianet News

மருந்துகளுக்கான சுங்க வரி ரத்து

வரிகளைப் பொறுத்தவரை புதிய வருமானவரிச் சட்டம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கொண்டு வரப் பட்டதால் வருமானவரி குறித்து புதிதாக அறிவிக்க எதுவும் இல்லை. ரூ.12 லட்சம் வரையிலான வருவாய்க்கு விலக்களிக்கக் கூடிய புதிய வருமானவரி சட்டம் வரும் ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் செயல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. புற்றுநோய்க்கான 17 வகை மருந்துகளுக்கும், பிற அரிய நோய்களுக்கான 7 வகையான மருத்துகளுக்கும் அடிப்படை சுங்க வரி ரத்து செய்யப்பட்டிருப்பதும் பயனளிக்கக் கூடியது.

மருத்துவத் துறை கட்டமைப்புகளைப் பொறுத்தவரை மருத்துவச் சுற்றுலாவை மேம்படுத்தும் வகையில் 5 மண்டல மருத்துவ மையங்கள் அமைக்கப்படும்; இந்த மையங்களில் அதி நவீன வசதிகளுடன் கூடிய மருத்துவமனைகள், நோய் பரிசோதனை மையங்கள், மருத்துவச் சிகிச்சைக்கு பிந்தைய சேவை அளிக்கும் நிலையங்கள் ஆகிய வசதிகள் இருக்கும். இவை தவிர 3 இடங்களில் ஆயுர்வேத மருத்துவத்திற்கான எய்ம்ஸ் மருத்துவ மையங்கள் அமைக்கப்படும், பெங்களூரில் இருப்பதைப் போன்ற தேசிய மனநல மருத்துவ அறிவியல் மையம் (நிம்ஹன்ஸ்) வட இந்தியாவில் அமைக்கப்படும் என்பன உள்ளிட்ட மேலும் பல அறிவிப்புகளும் இந்தியாவில் மருத்துவத்துறை வளர்ச்சிக்கு வகை செய்யும் என்பதில் ஐயமில்லை.

44
மாநிலங்களுக்கான வரி வருவாய் பகிர்வு ஏமாற்றமளிக்கிறது
Image Credit : Google

மாநிலங்களுக்கான வரி வருவாய் பகிர்வு ஏமாற்றமளிக்கிறது

நாட்டின் வளர்ச்சிக்கு வகை செய்யக்கூடிய இன்னொரு முதன்மைத் துறையான தொடர்வண்டித் துறைக்கான நிதி ஒதுக்கீடும் இன்று தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கையில் அதிகரிக்கப்பட்டுள்ளது. 2026 - 27ஆம் ஆண்டில் தொடர்வண்டித்துறைக்கான நிதி ஒதுக்கீடு ரூ.2.81 லட்சம் கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இது 2025 - 26ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டை விட ரூ.25 ஆயிரம் கோடி, அதாவது 10% அதிகம் ஆகும். கூடுதல் நிதி ஒதுக்கீட்டைப் பயன்படுத்தி தமிழ்நாட்டில் நிலுவையில் உள்ள தொடர்வண்டித் திட்டங்களுக்கு தேவையான நிதியை ஒதுக்கீடு செய்ய வேண்டும்.

வேளாண்துறைக்கான நிதி ஒதுக்கீடு கடந்த ஆண்டின் அளவான ரூ.1.51 லட்சம் கோடியை விட 7% அதிகமாக ரூ.1.62 லட்சம் கோடியாக அதிகரிக்கப்பட்டிருப்பதும் வரவேற்கத்தக்கது. அதே நேரத்தில் 16ஆம் நிதி ஆணையத்தின் பரிந்துரைப்படி, மத்திய அரசின் நேரடி வரிவருவாயில் 41% மட்டும் தான் மாநிலங்களுக்கு பகிர்ந்து வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருப்பது ஏமாற்றமளிக்கிறது. பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருவதைப் போல இதை 50% ஆக உயர்த்த அரசு முன்வர வேண்டும்.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

VS
Velmurugan s
இவர் இதழியல் துறையில் முதுகலை பட்டம் பெற்றவர். செய்தி எழுதுவதில் 8 ஆண்டுகளுக்கும் மேலாக அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 2 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். தமிழ்நாடு, அரசியல், ஆட்டோமொபைல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
அன்புமணி ராமதாஸ், பாட்டாளி மக்கள் கட்சி
பட்ஜெட் 2026
யூனியன் பட்ஜெட்
2026 யூனியன் பட்ஜெட்

Latest Videos
Recommended Stories
Recommended image1
வெயிட்டிங் டிக்கெட் இனி ஈசியா கன்பார்ம் ஆகும்.. IRCTC-யில் 'சூப்பர்' ஆப்ஷன்.. நோட் பண்ணிக்கோங்க!
Recommended image2
ஒரு ரூபாய் நாணயம் தயாரிக்கும் செலவு எவ்வளவு தெரியுமா? ரொம்ப அதிகமா இருக்கே!
Recommended image3
Post Office RD: உங்க பணத்திற்கு கவர்மெண்ட் கேரண்டி..! ரூ.25 லட்சம் வரை ஈசியா சம்பாதிக்கலாம்..
Related Stories
Recommended image1
Budget 2026: எதிர்பார்ப்புகளை தவிடு பொடியாக்கியதா 2026 பட்ஜெட்?! நீங்க எவ்ளோ வரி கட்டனும் தெரியுமா?
Recommended image2
பட்ஜெட்: காலி பெருங்காய டப்பா..! தமிழகத்துக்கு மட்டுமல்ல, எல்லோருக்கும் ஏமாற்றம்தான்..! புட்டு புட்டு வைக்கும் நிபுணர்கள்..!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved