MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Auto
  • ராயல் என்ஃபீல்டு விற்பனை விவரம்: எந்த பைக் அதிகம் விற்றது தெரியுமா?

ராயல் என்ஃபீல்டு விற்பனை விவரம்: எந்த பைக் அதிகம் விற்றது தெரியுமா?

மார்ச் 2026 விற்பனை கணக்குகள் வெளியாகியதும், ராயல் என்ஃபீல்டு ரசிகர்கள் மத்தியில் ஒரு பெரிய கேள்வி எழுந்துள்ளது. இந்த முறை எந்த மாடல் டாப்? அதற்குப் பின்னால் நடந்த போட்டிதான் உண்மையான சஸ்பென்ஸ். இதைப் பற்றி விரிவாக பார்க்கலாம்.

1 Min read
Author : Raghupati R
Published : Apr 21 2026, 11:36 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
ராயல் என்ஃபீல்டு விற்பனை
Image Credit : stockPhoto

ராயல் என்ஃபீல்டு விற்பனை

இந்திய டூவீலர் சந்தையில் எப்போதும் தனித்துவமான இடத்தைப் பிடிக்கும் ராயல் என்ஃபீல்டு, மார்ச் 2026 விற்பனை கணக்குகளிலும் தனது ஆட்சியைத் தொடர்ந்தது. இந்த மாதத்தில் மட்டும் கிளாசிக் 350 மாடல் 37,144 யூனிட்கள் விற்பனையாகி முதலிடத்தை பிடித்துள்ளது. கடந்த ஆண்டை ஒப்பிடும்போது 12%க்கும் மேல் வளர்ச்சி கண்டிருப்பது, இந்த மாடலின் நிலையான ரசிகர் பட்டாளத்தை வெளிப்படுத்துகிறது.

25
புல்லட் 350 விற்பனை
Image Credit : stockPhoto

புல்லட் 350 விற்பனை

இரண்டாவது இடத்தில் புல்லட் 350 மாடல் 23,767 யூனிட்கள் விற்பனையுடன் உள்ளது. இது சுமார் 8% வளர்ச்சியைப் பதிவு செய்தது. மூன்றாவது இடத்தில் ஹண்டர் 350 மாடல் 20,881 யூனிட்கள் விற்பனையாகி 23% வளர்ச்சியுடன் இளம் பயனர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. மேலும் மீட்டியோர் 350 மாடலும் 10,701 யூனிட்கள் விற்பனையுடன் 20% வளர்ச்சி எட்டியுள்ளது.

Related Articles

Related image1
வெயில் காலத்தில் பைக், கார் டேங்கை ஃபுல் செய்யலாமா? செய்யக்கூடாதா?
Related image2
Royal Enfield EV: வெறும் 2 மணிநேரத்தில் ஃபுல் சார்ஜ்! மிரட்ட வரும் ராயல் என்ஃபீல்டின் முதல் எலக்ட்ரிக் பைக்!
35
ஹிமாலயன் பைக்
Image Credit : stockPhoto

ஹிமாலயன் பைக்

மத்திய தரவரிசையில் 650 ட்வின் மாடல்கள் 2,744 யூனிட்கள் விற்பனையாகி 17% சரிவை சந்தித்துள்ளன. ஆனால் ஹிமாலயன் மாடல் 2,284 யூனிட்கள் விற்பனையுடன் 40% வளர்ச்சியுடன் சிறப்பாக செயல்பட்டது. மேலும் கெரில்லா மாடல் 1,906 யூனிட்கள் விற்பனையாகி 129% என்ற அதிரடி வளர்ச்சியை பதிவு செய்து கவனம் ஈர்த்துள்ளது.

45
டாப் பைக்குகள்
Image Credit : our own

டாப் பைக்குகள்

பட்டியலின் கீழ்பகுதியில் சூப்பர் மீட்டியோர் மாடல் 806 யூனிட்கள் விற்பனையாகி 24% சரிவை சந்தித்துள்ளது. மேலும் ஷாட்கன் மாடல் 173 யூனிட்கள் மட்டுமே விற்பனையாகி 22% குறைவை பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் சில மாடல்கள் எதிர்பார்த்த அளவுக்கு விற்பனையை அடையவில்லை என்பது தெரிகிறது.

55
மார்ச் 2026 விற்பனை
Image Credit : Google

மார்ச் 2026 விற்பனை

மொத்தமாகப் பார்த்தால், மார்ச் 2026-ல் ராயல் என்ஃபீல்டு நிறுவனம் 1,00,406 பைக்குகளை விற்பனை செய்து, ஆண்டு அடிப்படையில் 14% வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. பல மாதல்கள் நல்ல முன்னேற்றம் கண்டதால், இந்த பிராண்ட் இந்திய சந்தையில் தனது வலுவான நிலையை தொடர்ந்து தக்க வைத்துள்ளது.

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ராயல் என்ஃபீல்டு மோட்டார் சைக்கிள்
ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 650
வாகனம்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Top 10 Fastest Bikes: மணிக்கு 400 கிமீ வேகம்.. உலகின் டாப் 10 வேகமான பைக்குகள் என்னென்ன?
Recommended image2
மைலேஜும் அதிகம்.. மாஸும் அதிகம்.. இந்தியாவை கலக்கும் டாப் 5 டீசல் SUV-க்கள்.. முழு லிஸ்ட் இதோ!
Recommended image3
லாரியே மோதினாலும் கவலையில்லை.. 6 ஏர்பேக்குகள் உடன் வரும் பாதுகாப்பான கார் இதுதான்.!
Related Stories
Recommended image1
வெயில் காலத்தில் பைக், கார் டேங்கை ஃபுல் செய்யலாமா? செய்யக்கூடாதா?
Recommended image2
Royal Enfield EV: வெறும் 2 மணிநேரத்தில் ஃபுல் சார்ஜ்! மிரட்ட வரும் ராயல் என்ஃபீல்டின் முதல் எலக்ட்ரிக் பைக்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved