MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Auto
  • ராயல் என்பீல்ட் பைக்குகளின் விலை குறைஞ்சுடுச்சு.. ஒருபக்கம் விலை ஏறிடுச்சு.. முழு லிஸ்ட் இதோ

ராயல் என்பீல்ட் பைக்குகளின் விலை குறைஞ்சுடுச்சு.. ஒருபக்கம் விலை ஏறிடுச்சு.. முழு லிஸ்ட் இதோ

புதிய ஜிஎஸ்டி 2.0 விதிமுறைகளால் ராயல் என்பீல்ட் பைக்குகளின் விலைகள் மாறியுள்ளன. இதனால், வாடிக்கையாளர்கள் தங்கள் பட்ஜெட்டிற்கு ஏற்ப பைக்குகளைத் தேர்வு செய்ய வேண்டியுள்ளது. இதுதொடர்பான முழு விபரங்களை காணலாம்.

2 Min read
Author : Raghupati R
Published : Feb 09 2026, 08:39 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
ராயல் என்பீல்ட் பைக்குகள் விலை மாற்றம்
Image Credit : stockPhoto

ராயல் என்பீல்ட் பைக்குகள் விலை மாற்றம்

இந்தியாவில் பைக் ரசிகர்களுக்கு மிகவும் பிரபலமான நிறுவனமாக இருக்கும் ராயல் என்பீல்டின் சில மாடல்களின் விலைகள் தற்போது மாறியுள்ளன. புதிய ஜிஎஸ்டி 2.0 விதிமுறைகள் காரணமாக, சில பைக்குகள் விலை குறைந்துள்ளன. அதே நேரத்தில் சில உயர்தர பைக்குகளின் விலை அதிகரித்துள்ளது. இதனால், பைக் வாங்க திட்டமிடுபவர்கள் முன்பைவிட சற்று அதிக கவனத்துடன் முடிவு எடுக்க வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது.

25
ராயல் என்ஃபீல்டு ஜிஎஸ்டி மாற்றம்
Image Credit : stockPhoto

ராயல் என்ஃபீல்டு ஜிஎஸ்டி மாற்றம்

350cc-க்கு கீழ் உள்ள ராயல் என்ஃபீல்டு பைக்குகளுக்கு இது ஒரு நல்ல செய்தி ஆகும். Hunter 350, Classic 350, Meteor 350, Bullet 350, Goan Classic 350 போன்ற மாடல்களுக்கு விதிக்கப்பட்ட ஜிஎஸ்டி விகிதம் 28% இலிருந்து 18% ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. இதன் விளைவாக, இந்த பைக்குகளின் ஆரம்ப விலையில் ரூ.15,000 முதல் ரூ.23,500 வரை குறைவு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தினசரி பயணம் மற்றும் நீண்ட சவாரி விரும்பும் பொது பயனர்கள் இது பெரிய நிம்மதியாக பார்க்கப்படுகிறது.

Related Articles

Related image1
நன்றி தெய்வமே.. 27 கிமீ மைலேஜ் கொடுக்கும் டாடா.. பட்ஜெட் விலையில் குடும்ப காரை இப்போ வாங்கலாம்!
Related image2
பிப்ரவரி ஆஃபர்.. மாருதி கார் வாங்கப்போறீங்களா.? இதுவரை இல்லாத தள்ளுபடி!
35
வரி குறைப்பினால் ஏற்பட்ட விலை மாற்றம்
Image Credit : Google

வரி குறைப்பினால் ஏற்பட்ட விலை மாற்றம்

ராயல் என்பீல்ட் நிறுவனத்தின் மொத்த விற்பனையில் சுமார் 87% பங்கு 350cc பைக்குகளுக்கே சேர்ந்தவை. அதனால் இந்த வரி குறைப்பு, முதல் முறையாக பைக் வாங்க நினைப்பவர்கள் மற்றும் மிடில்-கிளாஸ் குடும்பங்களை சேர்ந்தவர்களை அதிகமாக ஈர்க்கும். குறைந்த விலை, நம்பகமான இன்ஜின், கிளாசிக் லுக் ஆகியவை இந்த பைக்குகளை மேலும் பிரபலமாக்கும் வாய்ப்பு உள்ளது.

45
பைக்குகளின் புதிய விலை
Image Credit : Google

பைக்குகளின் புதிய விலை

அதே நேரத்தில், 400cc-க்கு மேற்பட்ட பைக்குகளை விரும்பும் பயனர்களுக்கு இது அதிர்ச்சி அளிக்கும் செய்தியாகும். ஹிமாலயன் 450, கெரில்லா 450, ஸ்க்ராம் 440 மற்றும் 650சிசி வரிசை பைக்குகளுக்கு ஜிஎஸ்டி 28% இலிருந்து 40% ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் Scram 440க்கு சுமார் ரூ.18,700 வரை, சில 650cc பைக்குகளுக்கு ரூ.33,000க்கும் மேல் விலை உயர்வு காணப்படுகிறது.

55
ராயல் என்பீல்ட் வாடிக்கையாளர்கள் தெரிந்து கொள்ள வேண்டியது
Image Credit : GaadiWaadi

ராயல் என்பீல்ட் வாடிக்கையாளர்கள் தெரிந்து கொள்ள வேண்டியது

மொத்தத்தில், ஜிஎஸ்டி 2.0 மாற்றங்கள் ராயல் என்பீல்ட் வாடிக்கையாளர்களின் வாங்கும் முடிவுகள் மாறக்கூடும். குறைந்த செலவில் பைக் வாங்க நினைப்பவர்கள் 350cc மாடல்களை தேர்வு செய்யலாம். அதே நேரத்தில், அட்வென்சர் மற்றும் பிரீமியம் பைக்குகளை விரும்புபவர்கள் தங்கள் பட்ஜெட்டை மீண்டும் கணக்கிட்டு முடிவு எடுக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது. புக் செய்யும் முன் புதிய விலைகளை சரிபார்ப்பது இப்போது மிக அவசியமாகியுள்ளது.

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ராயல் என்ஃபீல்டு மோட்டார் சைக்கிள்
பைக்குகள்
விலைவாசி
ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 650
வாகனம்

Latest Videos
Recommended Stories
Recommended image1
டொயோட்டா கார் வாங்க இதுவே சரியான நேரம்: லட்சக்கணக்கில் சேமிக்க ஒரு அறிய வாய்ப்பு!
Recommended image2
ஆட்டோ ராஜா இஸ் பேக்! சிங்கிள் சார்ஜில் 296 கி.மீ ரேஞ்ச் - பஜாஜ் WEGO P9018 வெறும் ரூ.4.4 லட்சத்தில்
Recommended image3
புதிய டாடா சியரா வாங்க போறீங்களா.? உங்கள் கனவு SUV-யின் EMI எவ்வளவு?
Related Stories
Recommended image1
நன்றி தெய்வமே.. 27 கிமீ மைலேஜ் கொடுக்கும் டாடா.. பட்ஜெட் விலையில் குடும்ப காரை இப்போ வாங்கலாம்!
Recommended image2
பிப்ரவரி ஆஃபர்.. மாருதி கார் வாங்கப்போறீங்களா.? இதுவரை இல்லாத தள்ளுபடி!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved