MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Astrology
  • Astrology: ராகுவின் சொந்த நட்சத்திரத்திற்கு செல்லும் சுக்கிரன்.! 3 ராசிக்காரர்கள் ஜெயிக்கிற குதிரையா மாறப் போறீங்க.!

Astrology: ராகுவின் சொந்த நட்சத்திரத்திற்கு செல்லும் சுக்கிரன்.! 3 ராசிக்காரர்கள் ஜெயிக்கிற குதிரையா மாறப் போறீங்க.!

Venus Transit in Swati Nakshatra lucky zodiac signs: நவம்பர் 2, 2025 சுக்கிர பகவான் ஸ்வாதி நட்சத்திரத்திற்கு பெயர்ச்சியாக இருக்குறார். இதன் காரணமாக சில ராசிக்காரர்கள் சுப பலன்களை அனுபவிக்க உள்ளனர். அது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

2 Min read
Author : Ramprasath S
| Updated : Nov 07 2025, 10:58 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி
Image Credit : Asianet News

சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி

ஜோதிடத்தின்படி கிரகங்கள் குறிப்பிட்ட இடைவெளியில் தங்கள் நிலையை மாற்றிக் கொண்டே இருக்கின்றன. அப்போது அவை பிற கிரகங்களுடன் இணைந்து யோகங்களை உருவாக்குகின்றன. சுக்கிர பகவான் செல்வம், ஆடம்பரம், காதல், அழகு, ஆடம்பரம், கலை, இன்பம், திருமணம் ஆகியவற்றை குறிக்கும் கிரகமாக இருந்து வருகிறார். இவர் நவம்பர் 7, 2025 முதல் ஸ்வாதி நட்சத்திரத்தில் சஞ்சரிக்க இருக்கிறார். சுக்கிரனின் ராசி மாற்றங்களின் பொழுது அது அமரும் இடம், பார்க்கும் கிரகங்கள், நட்சத்திரம் ஆகியவற்றைப் பொறுத்து பலன்கள் மாறுபடும்.

25
ஸ்வாதி நட்சத்திரத்திற்கு பெயர்ச்சியாகும் சுக்கிரன்
Image Credit : Asianet News

ஸ்வாதி நட்சத்திரத்திற்கு பெயர்ச்சியாகும் சுக்கிரன்

நவம்பர் 2, 2025 சுக்கிரன் துலாம் ராசியில் நுழைந்து மாளவ்ய ராஜயோகத்தை உருவாக்கியிருக்கிறார். இந்த நிலையில் அவர் நவம்பர் 7 ஆம் தேதி ராகுவின் சொந்த நட்சத்திரமான ஸ்வாதி நட்சத்திரத்திற்கு பெயர்ச்சி ஆவதன் காரணமாக சில ராசிகள் சாதகமான பலன்களை அனுபவிக்க உள்ளனர். அந்த ராசிகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

Related Articles

Related image1
Astrology: துலாம் ராசியில் இணையும் இரு சுப கிரகங்கள்.! நவ.23-க்கு பிறகு 4 ராசிக்காரர்கள் வாழ்க்கையே அடியோடு மாறப்போகுது.!
Related image2
Astrology: வக்ர நிலையை அடைந்த புதன்.! அம்பானி ஆகப் போகும் 3 ராசிகள்.! தொழிலில் கொடிகட்டிப் பறக்கப் போறீங்க.!
35
மேஷம்
Image Credit : Asianet News

மேஷம்

  • சுக்கிரனின் இந்த ராசி மாற்றத்தால் மேஷ ராசிக்காரர்கள் சிறப்பான பலன்களைப் பெறுவீர்கள். இந்த நட்சத்திர மாற்றம் மேஷ ராசியினரின் தொழில் வாழ்க்கையில் மகத்தான மாற்றங்களை கொண்டு வரவுள்ளது. 
  • பணியிடத்தில் இருந்து வந்த மன அழுத்தங்கள் நீங்கி, மன மகிழ்ச்சியுடன் வேலையை தொடங்குவீர்கள். 
  • பணி மாறுதலுக்காக காத்திருப்பவர்களுக்கு நல்ல செய்திகள் கிடைக்கும். நேர்காணல் முடித்திருப்பவர்கள் விரைவில் சுப செய்திகளை கேட்பீர்கள். 
  • நீண்ட காலமாக நிலுவையில் இருந்த பணிகளை முடிக்க சிறந்த காலமாக இருக்கும். தலைமைத்துவம் மற்றும் நிர்வாக திறன்கள் வலுப்பெறும். 
  • தொழில் செய்து வருபவர்கள் அரசு ஒப்பந்தங்கள் அல்லது பிற ஆர்டர்கள் மூலம் லாபத்தைப் பெறுவீர்கள்.
45
மிதுனம்
Image Credit : Asianet News

மிதுனம்

  • ஸ்வாதி நட்சத்திரத்தில் சுக்கிரன் பிரவேசிப்பது மிதுன ராசிக்காரர்களுக்கு நேர்மறையான மாற்றங்களை அளிக்கும். 
  • வாழ்க்கையில் இருந்த பிரச்சனைகள் அனைத்தும் நீங்கும். வேலையில் இருந்து வந்த தடைகள் நீங்கி, முன்னேற்றம் ஏற்படும். குடும்ப வாழ்க்கையில் அமைதி நிலவும். 
  • ஏழ்மை நீங்கி பொன், பொருள், வசதிகள், ஆடம்பரத்தை அனுபவிக்க இருக்கிறீர்கள். புதிய சொத்துக்கள் வாங்குவதற்கான காலமும் நெருங்கியுள்ளது. 
  • நிறைவேறாமல் இருந்து வந்த ஆசைகள் ஒவ்வொன்றாக நிறைவேறத் தொடங்கும். தொழில் செய்து வருபவர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கலாம். 
  • உடல்நலப் பிரச்சனைகள் முடிவுக்கு வரும். கடின உழைப்புக்கான பலன்கள் கிடைக்கும்.
55
சிம்மம்
Image Credit : Asianet News

சிம்மம்

  • சுக்கிரனின் ஸ்வாதி நட்சத்திர பெயர்ச்சியானது சிம்ம ராசிக்காரர்களுக்கு எதிர்பாராத பலன்களை வழங்க உள்ளது. இந்த காலகட்டத்தில் வருமானம் கணிசமாக அதிகரிக்கும். 
  • பல்வேறு வழிகள் மூலம் வருமானத்தை ஈட்ட முடியும். குடும்ப வாழ்க்கையில் அமைதி நிலவும். குடும்ப உறுப்பினர்களிடையே இருந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும். சமூகத்தில் அந்தஸ்து உயரும். 
  • குழுவாக பணிபுரிபவர்களுக்கு பெரிய அளவில் நன்மைகள் கிடைக்கும். புதிய சொத்துக்கள், நிலம், மனை, வாகனம் ஆகியவற்றை வாங்கும் யோகம் கிடைக்கும். 
  • வேலை செய்து வருபவர்களுக்கு ஒரு குழுவை தாங்கும் அளவிற்கு தலைமைப் பொறுப்புகள் கிடைக்கும். இந்த காலகட்டத்தில் ஆரோக்கியமும் சிறப்பாக இருக்கும்.

(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

About the Author

RS
Ramprasath S
பொறியியல் பட்டதாரியான இவர், செய்திகள் மீது கொண்ட ஆர்வம் காரணமாக 4 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் பத்திரிக்கைத் துறையில் பணியாற்றி வருகிறார். மே 2025 முதல் ஏசியாநெட் தமிழ் இணையதளத்தில் தமிழ் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, பொழுதுபோக்கு, லைஃப்ஸ்டைல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ஜோதிடம்
இராசி அறிகுறிகள்
ஜோதிடம்
ராசி பலன்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Astrology: உங்களை கோடீஸ்வரன் ஆக்கும் ராகு-கேது பரிகார பூஜை.! இனி பதவியும் அதிகாரமும் உங்கள் வசம்.!
Recommended image2
புனர்பூச நட்சத்திரத்திற்குப் பெயர்ச்சியாகும் குரு பகவான்.! இந்த ராசிகளுக்கு இனிமே பிளாஸ்ட்டு பிளாஸ்ட்டு தான்.!
Recommended image3
கனவு சாஸ்திரம்: இந்த விலங்குகள் கனவில் வந்தால் அதிர்ஷ்டமும் செல்வமும் நிச்சயம்.!
Related Stories
Recommended image1
Astrology: துலாம் ராசியில் இணையும் இரு சுப கிரகங்கள்.! நவ.23-க்கு பிறகு 4 ராசிக்காரர்கள் வாழ்க்கையே அடியோடு மாறப்போகுது.!
Recommended image2
Astrology: வக்ர நிலையை அடைந்த புதன்.! அம்பானி ஆகப் போகும் 3 ராசிகள்.! தொழிலில் கொடிகட்டிப் பறக்கப் போறீங்க.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved