- Home
- Astrology
- இன்று சொந்த நட்சத்திரத்தில் குரு சஞ்சாரம்.! குரு பெயர்ச்சியால் 5 ராசிகளுக்கு குபேர யோகம்.! அரசு வேலை, பணம், புகழ், பதவி தேடி வரப்போகுது.!
இன்று சொந்த நட்சத்திரத்தில் குரு சஞ்சாரம்.! குரு பெயர்ச்சியால் 5 ராசிகளுக்கு குபேர யோகம்.! அரசு வேலை, பணம், புகழ், பதவி தேடி வரப்போகுது.!
Guru Peyarchi 2026 Vakya Panchangam in Tamil : குரு பகவான் இன்றைய தினம் புனர்பூச நட்சத்திரத்தின் இரண்டாம் பாதத்திற்கு பெயர்ச்சி ஆகியிருக்கிறார். இதன் காரணமாக அதிர்ஷ்டம் பெறும் ஐந்து ராசிகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

Guru Peyarchi 2026 Vakya Panchangam in Tamil
ஜோதிடத்தில் குரு பகவான் சுப கிரகமாக அறியப்படுகிறார். இவரின் பெயர்ச்சி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாக கருதப்படுகிறது. அந்த வகையில் ஏப்ரல் 20 திங்கட்கிழமை அதிகாலை 4:43 மணியளவில் அவர் புனர்பூச நட்சத்திரத்தின் இரண்டாம் பாதத்திற்கு பெயர்ச்சியாக இருக்கிறார். இந்த நட்சத்திரத்தில் அவர் மே 14-ஆம் தேதி வரை பயணிக்க இருக்கிறார்.
குரு பகவான் தனது ராசி அல்லது நட்சத்திரத்தை மாற்றுவது 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் சாதகமான பலன்களை அளிக்கும். குறிப்பாக அவரின் புனர்பூச நட்சத்திர பெயர்ச்சி ஐந்து ராசிகளில் பிறந்தவர்களுக்கு மங்களகரமான பலன்களை அளிக்க உள்ளது. அந்த ராசிகள் குறித்து இங்கு காணலாம்.
மிதுனம்
குரு பகவான் புனர்பூச நட்சத்திரத்திற்கு பெயர்ச்சியாகி இருப்பது மிதுன ராசிக்காரர்களுக்கு மிகவும் சாதகமான சூழலை ஏற்படுத்தும். வாழ்வில் நேர்மறையான மாற்றங்கள் நிகழும். உங்கள் தொழில் அல்லது வேலையில் புதிய திசைகள் கிடைக்கும். மாத சம்பளம் அல்லது தினக்கூலி அடிப்படையில் வேலை புரிபவர்களுக்கு புதிய முன்னேற்றத்திற்கான வழிகள் உருவாகும்.
தொழில் அல்லது வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு தொழிலில் இருந்த மந்த நிலை விலகி வியாபாரம் சூடு பிடிக்கும். நிதி ரீதியாக நன்மைகள் கிடைக்கும். பழைய கடன்களை திருப்பிச் செலுத்துவீர்கள். மனம் அமைதி பெறும். உங்கள் இலக்குகள் மீது அதிக கவனம் செலுத்தி முன்னேறுவீர்கள்.
கடகம்
குரு பகவானின் நட்சத்திர மாற்றமானது கடக ராசிக்காரர்களுக்கு சுப பலன்களை அளிக்கவுள்ளது. தொழில் முன்னேற்றத்திற்கான புதிய வாய்ப்புகள் கிடைக்கும். கடினமாக உழைத்தும் அதற்கான பலன் கிடைக்கவில்லையே என்று ஏங்கி வந்தவர்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கத் தொடங்கும். உங்கள் உழைப்புக்கேற்ற ஊதியங்களைப் பெறுவீர்கள்.
புதிய வருமானத்திற்கான வழிகள் பிறக்கும். உபரி வருமானத்திற்கான வழிகள் கிடைக்கும். திடீர் பணவரவால் வங்கி இருப்பு உயரும். குடும்பத்தின் பொருளாதார நிலைமை மேம்படும். சமூகத்தில் உங்களுக்கு இருந்த கண்ணோட்டம் மாறி, அந்தஸ்து உயரும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழல் நிலவும். நீங்கள் செய்த முதலீடுகள் மூலம் நல்ல லாபம் கிடைக்கும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு குரு பகவானின் நட்சத்திரப் பெயர்ச்சியால் குடும்ப வாழ்க்கை, தொழில் வாழ்க்கை என இரண்டிலும் சாதகமான காலகட்டம் கிடைக்க இருக்கிறது. நீண்ட காலமாக நீங்கள் சந்தித்து வந்த இடர்பாடுகள், குடும்ப தகராறுகள், ஆரோக்கியப் பிரச்சினைகள் படிப்படியாக விலகி வாழ்வில் புதிய ஸ்திரத்தன்மை ஏற்படும். தொழில் இருந்த தடைகள் அகலும். புதிய தொழில் தொடங்க நினைப்பவர்களுக்கு தேவையான பண உதவி, கடன் உதவி கிடைக்கும்.
கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்த தம்பதிகள் மீண்டும் இணைவீர்கள். திருமணம் ஆகாமல் தடை இருந்தவர்களுக்கு நல்ல இடத்தில் திருமண வரன் தேடி வரும். பொருளாதார நிலை மேம்படும். பணியிடத்தில் உங்களுக்கு எதிராக நடந்த சதிகளை முறியடிப்பீர்கள். வேலையில் இருந்த சிக்கல்கள் தீர்க்கப்படும்.
துலாம்
குருவின் இந்த நட்சத்திரப் பெயர்ச்சி துலாம் ராசியில் பிறந்தவர்களுக்கு சுப பலன்களை அளிக்க உள்ளது. மனச்சோர்வு மற்றும் ஏதாவது ஒரு பிரச்சனையில் சிக்கிக் கொண்டவர்கள் அதிலிருந்து மீண்டு வருவீர்கள். உங்கள் தைரியம், தன்னம்பிக்கை அதிகரிக்கும். துணிச்சலான முடிவுகளை எடுப்பீர்கள். சமூகத்தில் உங்கள் பெயருக்கு ஏற்பட்டிருந்த களங்கமும், உங்களை துரத்திய துன்பமும் மாறத் தொடங்கும்.
தொழிலில் எதிர்பாராத முன்னேற்றங்கள் கிடைக்கும். பொருளாதார ரீதியாக வலுவாக உணர்வீர்கள். செல்வம் ஈட்டுவதற்கான புதிய வழிகள் திறக்கும். வாழ்வில் புதிய திசைகள் உருவாகும். சுக போகங்கள் பெருகும். மங்களகரமான விஷயங்கள் நடக்கும். சுப நிகழ்ச்சிகளை முன்னின்று நடத்துவீர்கள்.
தனுசு
குரு பகவானின் சொந்த ராசியான தனுசு ராசிக்காரர்களுக்கு குரு பகவானின் நட்சத்திரப் பெயர்ச்சி மங்களகரமானதாகவும், சுப பலன்களை அளிக்க கூடியதாகவும் அமையும். மந்தமாக நடந்து வந்த தொழில்கள் சூடுபிடிக்கத் தொடங்கி விரைவான முன்னேற்றத்தைக் காண்பீர்கள். கடன் பிரச்சனையால் அவதிப்பட்டு வந்தவர்கள் அதிலிருந்து விடுதலை பெறுவீர்கள். தொழிலை விரிவுபடுத்த திட்டமிட்டு இருப்பவர்களுக்கு தேவையான உதவிகளும் சாதகமான சூழலும் அமையும்.
தன்னம்பிக்கை அதிகரிக்கும். புதிய வாகனம் வாங்குவீர்கள். தங்கத்தில் முதலீடு செய்வீர்கள். சொத்து சேர்க்கை நடைபெறும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் கிடைக்கும். சமூகத்தில் மரியாதையையும், அந்தஸ்தையும் பெறுவீர்கள். வேலையில் உங்கள் கடின உழைப்புக்கான அங்கீகாரத்தைப் பெறுவீர்கள். உங்கள் நற்பெயர் உயரும்.
பொறுப்பு துறப்பு
இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது.

