- Home
- Astrology
- 2026 தொடக்கத்தில் உருவாகும் கஜகேசரி யோகம்.! ஜனவரி முதல் விஸ்வரூப வளர்ச்சி பெறப்போகும் 5 ராசிகள்.!
2026 தொடக்கத்தில் உருவாகும் கஜகேசரி யோகம்.! ஜனவரி முதல் விஸ்வரூப வளர்ச்சி பெறப்போகும் 5 ராசிகள்.!
Gajakesari Yogam Rasi Palangal: புத்தாண்டின் தொடக்கத்தில் மிதுன ராசியில் சக்தி வாய்ந்த கஜகேசரி ராஜயோகம் உருவாகிறது. மங்களகரமான இந்த யோகத்தால் பலன் பெறும் ராசிகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

கஜகேசரி யோகம் 2026
கஜகேசரி யோகம் என்பது ஜோதிடத்தில் மிகவும் சக்தி வாய்ந்ததும், மங்களகரமான யோகங்களில் ஒன்றாகவும் கருதப்படுகிறது. ‘கஜம்’ என்றால் யானை, ‘கேசரி’ என்றால் சிங்கம் என்பது பொருளாகும். இந்த யோகமானது யானையைப் போன்ற பலத்தையும், சிங்கத்தைப் போன்ற தைரியத்தையும் வழங்க கூடியதாக கருதப்படுகிறது. ஜனவரி 2, 2026 சந்திரனும், குரு பகவானும் மிதுன ராசியில் இணைந்து இந்த யோகத்தை உருவாக்குகின்றனர். கஜகேசரி யோகத்தால் அதிக பலன்களைப் பெற உள்ள ராசிகள் குறித்து இங்கு பார்க்கலாம்.
ரிஷபம்
புத்தாண்டின் தொடக்கத்தில் கஜகேசரி ராஜயோகம் உருவாவது ரிஷப ராசிக்காரர்களுக்கு நன்மைகளை வழங்க உள்ளது. சந்திரன் மகாலட்சுமியின் அம்சம் என்பதால் அவர், குருவுடன் இணைவது ரிஷப ராசிக்காரர்களுக்கு சுப பலன்களை அளிக்கும். சந்திர பகவானின் நிலையால் மனதில் தெளிவு பிறக்கும். தடைபட்டிருந்த பண வரவு கிடைக்கும். புதிய முதலீடுகள் செய்ய உகந்த நேரம் ஆகும். சமூகத்தில் உங்கள் கௌரவம் மற்றும் அந்தஸ்து உயரும். நிதி ரீதியாக வலுவான நிலையை அடைவீர்கள். வேலையில் இருப்பவர்களுக்கு புதிய பொறுப்புகள் கிடைக்கலாம். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். ஆரோக்கியம் மேம்படும்.
மிதுனம்
கஜகேசரி ராஜயோகம் மிதுன ராசியிலேயே உருவாவதால் இந்த ராசிக்காரர்கள் அதிக நன்மைகளைப் பெறுவீர்கள். குரு பகவான் உங்கள் ராசியில் அமர்ந்து சந்திரனுடன் இணைவதன் காரணமாக இந்த யோகம் உங்களுக்கு வலுவாக வேலை செய்யும். உங்கள் நீண்ட நாட்கள் ஆசைகள் நிறைவேறும். நீங்கள் எடுக்கும் காரியங்களில் வெற்றி கிடைக்கும். மங்கள நிகழ்வுகளின் காரகரான குரு பகவான் உங்களுக்கு சுப நிகழ்ச்சிகள் நடத்தும் வாய்ப்புகளை கொடுப்பார். வீட்டில் அடுத்தடுத்த சுப நிகழ்ச்சிகள் நடக்கும். பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும். உங்கள் திறமை பாராட்டப்படும். இந்த காலகட்டம் மகிழ்ச்சி, செழிப்பு மற்றும் முன்னேற்றத்திற்கான வழிகளைத் திறக்கும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு குருவின் பார்வை கிடைப்பதாலும் பத்தாம் இடமான தொழில் ஸ்தானத்தில் சந்திரன் பலம் பெற்று சஞ்சரிப்பதாலும் யோகமான பலன்கள் கிடைக்கும். தொழில் ஸ்தானம் வலுவடைவதால் தொழிலில் எதிர்பாராத நன்மைகள் கிடைக்கும். வாடிக்கையாளர்கள் அதிகரிப்பால் திடீர் பணவரவு கிடைக்கும். நேர்காணல் முடித்து காத்திருப்பவர்களுக்கு நல்ல செய்திகள் கிடைக்கும். வேலையில்லாமல் தவித்து வருபவர்கள் பன்னாட்டு நிறுவனங்களில் வேலை கிடைக்கும். தலைமைப் பண்பு வெளிப்படும். அரசு உதவிகள் கிடைக்கும். புதிய தொழில் தொடங்க நினைப்பவர்களுக்கு பண உதவி அல்லது கடன் உதவிகள் கிடைக்கும். வருமானத்தில் தொடர்ச்சியான முன்னேற்றம் காணப்படும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு ஒன்பதாவது இடமான பாக்கிய ஸ்தானத்தில் இந்த யோகம் உருவாவது அதிர்ஷ்டத்தைத் தரும். தந்தை வழி சொத்துக்களில் இருந்த சிக்கல்கள் தீரும். சொத்துக்கள் கைக்கு வந்து சேரும். ஆன்மீகப் பயணங்கள் செல்லும் வாய்ப்புகள் உண்டாகும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். பெரியவர்களின் ஆசி முழுமையாகக் கிடைக்கும். வெளிநாடு தொடர்பான சுப செய்திகள் கிடைக்கும். வெளிநாட்டிற்கு கல்வி அல்லது வேலைக்காக மேற்கொண்ட முயற்சிகள் கைகூடும்.
தனுசு
தனுசு ராசிக்கு ராசி நாதன் குரு பகவான் வலுவாக இருப்பதால் சவால்களை எளிதில் முறியடிப்பீர்கள். தொழிலில் உங்கள் போட்டியாளர்களை வென்று காட்டுவீர்கள். நீண்ட காலமாக வாட்டி வதைத்து வந்த உடல் உபாதைகள் நீங்கும். எதிரிகளை வீழ்த்தும் தைரியம் பிறக்கும். கடன் சுமைகள் குறையத் தொடங்கும். சமூகத்தில் மரியாதை மற்றும் புகழ் கிடைக்கும். திடீர் பண வரவு மற்றும் செல்வம் சேரும். உங்கள் பேச்சாற்றல் மேம்படும். மற்றவர்களை கவரும் திறன் உண்டாகும். அரசு மற்றும் அரசு சார்ந்த உதவிகள் கிடைக்கும்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

