MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Astrology
  • இன்று மதியம் 1:40 முதல் கேதுவின் பார்வை.! சனியுடன் சேர்ந்து ருத்ர தாண்டவம் ஆடப்போகும் கேது.! 4 ராசிகளுக்கு 8 மாதங்களுக்கு கண்டம் ஆரம்பம்.!

இன்று மதியம் 1:40 முதல் கேதுவின் பார்வை.! சனியுடன் சேர்ந்து ருத்ர தாண்டவம் ஆடப்போகும் கேது.! 4 ராசிகளுக்கு 8 மாதங்களுக்கு கண்டம் ஆரம்பம்.!

Ketu Magha Natchathira Peyarchi 2026 : ஜோதிடத்தில் நிழல் கிரகமான கேதுவின் நட்சத்திரப் பெயர்ச்சி, நான்கு ராசிக்காரர்களின் வாழ்க்கையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்த உள்ளது. அது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். 

2 Min read
Author : Ramprasath S
Published : Apr 20 2026, 01:27 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
Ketu Magha Natchathira Peyarchi 2026
Image Credit : Asianet News

Ketu Magha Natchathira Peyarchi 2026

பாவ கிரகமான கேது, ஏப்ரல் 20-ம் தேதி மதியம் 1:40 மணிக்கு, தனது சொந்த நட்சத்திரமான மகம் நட்சத்திரத்திற்குள் நுழைகிறார். டிசம்பர் 5, 2026 வரை இதே நட்சத்திரத்தில் இருப்பார். அதன்பிறகு ஆயில்யம் நட்சத்திரத்திற்கு பெயர்ச்சி ஆவார். கேது பகவானின் இந்த பெயர்ச்சியால் சுமார் எட்டு மாத காலம், குறிப்பிட்ட நான்கு ராசிக்காரர்களுக்கு அசுபமானதாக கருதப்படுகிறது. இந்த ராசிக்காரர்கள் மீது கேதுவின் பார்வை சாதகமாக இருக்காது. அந்த ராசிகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

26
மேஷம்
Image Credit : Asianet News

மேஷம்

மேஷ ராசிக்காரர்கள் இந்த காலக்கட்டத்தில் நிதி சிக்கல்களை சந்திக்க நேரிடலாம். பண விஷயங்களில் ரிஸ்க் எடுப்பதை தவிர்ப்பது நல்லது. முதலீடுகளை புத்திசாலித்தனமாக செய்யுங்கள், இல்லையென்றால் பெரிய நஷ்டம் ஏற்பட வாய்ப்புள்ளது. தொழில் வாழ்க்கையில் அவசர முடிவுகள் பாதிப்பை ஏற்படுத்தும். காதல் உறவுகளில் தவறான புரிதல்கள் வரலாம். மாணவர்கள் வெற்றி பெற கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும்.

Related Articles

Related image1
இன்று சொந்த நட்சத்திரத்தில் குரு சஞ்சாரம்.! குரு பெயர்ச்சியால் 5 ராசிகளுக்கு குபேர யோகம்.! அரசு வேலை, பணம், புகழ், பதவி தேடி வரப்போகுது.!
Related image2
கணவரை இழந்த பெண்கள் பொட்டு வைக்கலாமா? சுப நிகழ்ச்சிகளில் விளக்கேற்கலாமா? தேச மங்கையர்கரசியின் மனதை உருக்கும் அறிவுரை.!
36
விருச்சிகம்
Image Credit : Asianet News

விருச்சிகம்

உங்கள் வேலை, தொழில் அல்லது வியாபாரத்தில் திடீர் சரிவு ஏற்பட வாய்ப்புள்ளது. அதிலிருந்து மீண்டு வருவது கடினமாக இருக்கும். வாழ்க்கைமுறை பெரிதும் பாதிக்கப்படலாம். அதனால், கவனமாக செயல்படுங்கள். பொறுப்புகள் அதிகரிக்கலாம், இதனால் மன அழுத்தத்தையும் நீங்கள் உணரலாம். மேலதிகாரிகளுடன் ஏற்படும் கருத்து வேறுபாடுகள் உங்களுக்கு நஷ்டத்தை உண்டாக்கும். இந்த நேரத்தில் உங்கள் போட்டியாளர்களிடம் இருந்தும் எச்சரிக்கையாக இருப்பது அவசியம்.

46
கும்பம்
Image Credit : Asianet News

கும்பம்

கும்ப ராசிக்கு ஏழரை சனி நடக்கிறது. இந்த நேரத்தில் கேதுவின் பெயர்ச்சி இவர்களுக்கு மேலும் துயரத்தை கொடுக்கும். வேலை மற்றும் தொழிலில் புதிய சவால்களை சந்திக்க நேரிடும். முக்கிய முடிவுகளை எடுப்பதில் அவசரப்பட வேண்டாம். உறவுகளில் தவறான புரிதல்கள் ஏற்படலாம். இது திருமண வாழ்க்கை மற்றும் பார்ட்னர்ஷிப்பை பாதிக்கக்கூடும். மற்றவர்களுடன் பேசும்போது கவனமாக இருங்கள், வாக்குவாதங்களைத் தவிர்த்து, உங்கள் கருத்துக்களை நிதானமாக வெளிப்படுத்துங்கள்.

56
மீனம்
Image Credit : Asianet News

மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு ஏழரை சனியின் இரண்டாம் கட்டம் நடந்து கொண்டிருக்கிறது, இது ஒரு வலி நிறைந்த காலம். இந்த நேரத்தில் கேது உங்களுக்கு அதிக துக்கத்தையும், கவலையையும் ஏற்படுத்துவார். உடல்நலப் பிரச்சினைகள் உங்களைத் தொந்தரவு செய்யலாம். மன அழுத்தமும் அதிகரிக்கக்கூடும். காயங்கள் மற்றும் விபத்துக்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, எச்சரிக்கையாக இருங்கள். மற்றவர்களின் வாகனத்தை கடன் வாங்கி ஓட்ட வேண்டாம். ஆபத்தான செயல்களைத் தவிர்த்து, யோகா மற்றும் உடற்பயிற்சியில் கவனம் செலுத்துங்கள். உங்கள் வாழ்க்கை முறையை மேம்படுத்த முயற்சி செய்யுங்கள்.

66
பொறுப்பு துறப்பு
Image Credit : Asianet News

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது.

About the Author

RS
Ramprasath S
பொறியியல் பட்டதாரியான இவர், செய்திகள் மீது கொண்ட ஆர்வம் காரணமாக 4 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் பத்திரிக்கைத் துறையில் பணியாற்றி வருகிறார். மே 2025 முதல் ஏசியாநெட் தமிழ் இணையதளத்தில் தமிழ் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, பொழுதுபோக்கு, லைஃப்ஸ்டைல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ஜோதிடம்
இராசி அறிகுறிகள்
ஜோதிடம்
ராசி பலன்
இன்றைய இராசி பலன்

Latest Videos
Recommended Stories
Recommended image1
இன்று சொந்த நட்சத்திரத்தில் குரு சஞ்சாரம்.! குரு பெயர்ச்சியால் 5 ராசிகளுக்கு குபேர யோகம்.! அரசு வேலை, பணம், புகழ், பதவி தேடி வரப்போகுது.!
Recommended image2
சுக்கிரன் ஆசி கிடைக்கலையா? சிக்கலில் மாட்டப்போகும் 4 ராசிகள்! தப்பிக்க இதோ எளிய வழிகள்!
Recommended image3
Today Rasi Palan : ஏப்ரல் 20 - மேஷம் முதல் மீனம் வரை, 12 ராசிகளுக்குமான துல்லியமான பலன்கள்.! இன்று ஜாக்பாட் அடிக்கப்போகும் அதிர்ஷ்டக்காரர்கள் யார்.?
Related Stories
Recommended image1
இன்று சொந்த நட்சத்திரத்தில் குரு சஞ்சாரம்.! குரு பெயர்ச்சியால் 5 ராசிகளுக்கு குபேர யோகம்.! அரசு வேலை, பணம், புகழ், பதவி தேடி வரப்போகுது.!
Recommended image2
கணவரை இழந்த பெண்கள் பொட்டு வைக்கலாமா? சுப நிகழ்ச்சிகளில் விளக்கேற்கலாமா? தேச மங்கையர்கரசியின் மனதை உருக்கும் அறிவுரை.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved