- Home
- Astrology
- Astrology : உருவான சக்தி வாய்ந்த ராஜயோகம்.! செப்டம்பர் 3வது வாரம் முதல் இந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கொட்டப் போகுது.!
Astrology : உருவான சக்தி வாய்ந்த ராஜயோகம்.! செப்டம்பர் 3வது வாரம் முதல் இந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கொட்டப் போகுது.!
Budhaditya Raja Yoga : செப்டம்பர் மூன்றாவது வாரத்தில் சக்தி வாய்ந்த புதாதித்ய ராஜயோகம் உருவாகி இருப்பதால், சில ராசிக்காரர்களின் வாழ்க்கை பிரகாசிக்க உள்ளது. அது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

புதாதித்ய ராஜயோகம் 2025
செப்டம்பர் மூன்றாவது வாரம் பல ராஜயோகங்கள் உருவாக உள்ளது. அந்த வகையில் செப்டம்பர் 17 ஆம் தேதி சூரியன் கன்னி ராசியில் சஞ்சரிக்க இருக்கிறார். செப்டம்பர் 15 ஆம் தேதி புதன் பகவானும் தனது சொந்த ராசியான கன்னி ராசிக்குள் பெயர்ச்சி ஆகிறார். சூரியன் மற்றும் புதன் இருவரும் இணைந்து கன்னி ராசியில் புதாதித்ய ராஜயோகத்தை உருவாக்குகின்றனர். ஜோதிடத்தின்படி இந்த யோகம் மிகவும் மங்களகரமானதாகவும், செல்வாக்கு மிக்கதாகவும் கருதப்படுகிறது.
இந்த சுப யோகம் ஒரு நபரின் தொழில், நிதிநிலை, சொத்து, சமூக கௌரவம் ஆகியவற்றில் எதிரொலிக்கிறது. இந்த யோகமானது கடகம், சிம்மம், துலாம், தனுசு, மீனம் ஆகிய ஐந்து ராசிகளுக்கு சிறப்பு விளைவை ஏற்படுத்த உள்ளது. அதிர்ஷ்டம் பிரகாசிக்க போகும் அந்த ஐந்து ராசிக்காரர்கள் பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
கடகம்
செப்டம்பர் மூன்றாவது வாரம் கடக ராசிக்காரர்களுக்கு மிகவும் சாதகமாக இருக்கப்போகிறது. இவர்களின் தொழில் வாழ்க்கையில் புதிய திசைகள் உருவாக உள்ளது. வணிகத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். நீண்ட காலமாக புதிய வாய்ப்புகளை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்க உள்ளது. அரசாங்க திட்டங்களில் இருந்து நன்மைகள் பெறுவதற்கான வாய்ப்புள்ளது. சந்தைப்படுத்துதல் மற்றும் ஊடகத்துறையுடன் தொடர்புடையவர்களுக்கு இந்த நேரம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். குடும்ப வாழ்க்கை இனிமை நிறைந்ததாக இருக்கும். அதே சமயம் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டியது அவசியம்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் கௌரவமும், சாதனைகளும் நிறைந்த வாரமாக இருக்கும். அரசியலில் இருப்பவர்களுக்கு முக்கியமான பதவிகள் அல்லது பொறுப்புகள் கிடைக்கலாம். உங்கள் தலைமைத்துவ குணங்கள் எல்லா இடங்களிலும் வெளிப்படும். அலுவலகத்தில் பணிபுரிபவர்களுக்கு ஒரு குழுவை தாங்கும் தலைமைப் பதவிகள் கிடைக்கலாம். உங்கள் பணம் எங்காவது சிக்கியிருந்தால் அதை மீண்டும் பெறுவதற்கான வாய்ப்புகள் உண்டு. நிறைவேறாமல் இருந்த ஆசைகள் நிறைவேறும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். மதம் மற்றும் ஆன்மீக நடவடிக்கைகளில் ஈடுபடுவீர்கள். காதல் உறவுகள் வலுவடையும். திருமண வரன்கள் கைகூடும்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சொத்து மற்றும் ரியல் எஸ்டேட் தொடர்பான நல்ல செய்திகள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. நீண்ட காலமாக முடியாமல் இருந்த பணிகள் முடிவடையும். பதவி உயர்வு அல்லது இடமாற்றத்திற்காக காத்திருந்தால் அந்த ஆசையும் நிறைவேறும். பழைய குடும்ப சண்டைகள் தீர்க்கப்படலாம். பரம்பரை சொத்துக்கள் மூலம் பலன்களை பெறுவதற்கான அறிகுறிகள் உள்ளன. போட்டித் தேர்வுகளுக்கு தயாராகி வருபவர்களுக்கு வெற்றி கிடைக்கும். இந்த வாரம் அனைத்து தரப்பில் இருந்தும் உங்களுக்கு நல்ல செய்திகள் வந்து சேரும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் கடின உழைப்பு நிறைந்ததாக இருக்கும். அதே சமயம் அதற்கான பலன்களையும் அனுபவிப்பீர்கள். பல பொறுப்புகளை நிறைவேற்ற வேண்டியிருக்கும். ஆனால் உங்கள் முயற்சி மூலம் அனைத்தையும் நிறைவேற்றுவீர்கள். வாரத்தின் இரண்டாம் பாதியில் நிம்மதி அதிகரிக்கும். முடிக்கப்படாத பணிகள் முடிவடையும். மத நடவடிக்கைகளில் ஆர்வம் காட்டுவீர்கள். சமூகத்தில் மரியாதை அதிகரிக்கும். உங்கள் துணைவரின் முழு ஆதரவு கிடைக்கும். குடும்ப உறுப்பினர்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பர். இந்த வாரம் தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் தொழில் வாழ்க்கை இரண்டிலும் சமநிலையும், திருப்தியும் கிடைக்கும்.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் அடுத்தடுத்து நல்ல செய்திகள் கிடைக்கும். குடும்பத்தில் நல்லிணக்கம் ஏற்படும். அனைத்து பிரச்சினைகளும் தீர்ந்து, மன நிம்மதி கிடைக்கும். வேலை செய்பவர்களுக்கு அலுவலகத்தில் இருந்த பிரச்சனைகள் தீர்ந்து சுமுகமான நிலைமை ஏற்படும். விரும்பிய இட மாற்றம் அல்லது பதவி உயர்வு கிடைக்கும். பணியிடத்தில் உங்கள் கடின உழைப்பு பாராட்டப்படும். புதிய நிதி வாய்ப்புகள் உருவாக்கப்படும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். வாரம் முழுவதும் உங்களை உற்சாகமாக வைத்திருக்கும் புதிய ஆற்றல் உங்களுக்குள் ஏற்படும்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள், ஜோதிடம், பஞ்சாங்கம், மத நூல்கள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. தகவல்களை வழங்குவதன் மட்டுமே எங்கள் நோக்கமாகும். இந்த தகவல்களை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களின் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் பொறுப்பேற்காது. ஒவ்வொருவரின் தனிப்பட்ட ஜாதகமும் மாறுபடும் என்பதால் துல்லியமான பலன்களை அறிந்து கொள்ள அனுபவமிக்க ஜோதிடரை அணுகுவது நல்லது)

