MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Astrology
  • Astrology: ஐப்பசி மாதத்தில் கவனமாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.! பிரச்சினைகள் ரவுண்டு கட்டி அடிக்குமாம்.!

Astrology: ஐப்பசி மாதத்தில் கவனமாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.! பிரச்சினைகள் ரவுண்டு கட்டி அடிக்குமாம்.!

Aippasi Month rasi palangal: புரட்டாசி முடிந்து ஐப்பசி மாதம் துவங்க இருக்கிறது. அக்டோபர் நடுப்பகுதி முதல் நவம்பர் நடுப்பகுதி வரை கிரகங்களின் நிலைகள் குறித்தும், கவனமாக ராசி இருக்க வேண்டிய ராசிகள் குறித்தும் இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

2 Min read
Author : Ramprasath S
| Updated : Oct 16 2025, 02:04 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
ஐப்பசி மாதத்தில் நடக்கும் கிரக பெயர்ச்சிகள்
Image Credit : Asianet News

ஐப்பசி மாதத்தில் நடக்கும் கிரக பெயர்ச்சிகள்

சூரியன் (அக்டோபர் 17 - நவம்பர் 16): சூரியனின் பெயர்ச்சியை வைத்தே தமிழ் மாதங்கள் கணக்கிடப்படுகின்றன. அந்த வகையில் அக்டோபர் 17ஆம் தேதி சூரிய பகவான் துலாம் ராசியில் பெயர்ச்சி ஆக இருக்கிறார். இதன் காரணமாக ஐப்பசி மாதம் பிறக்க இருக்கிறது. இந்த மாதத்தில் பல கிரகங்களின் நிலைகளில் மாற்றங்கள் ஏற்பட இருக்கின்றன.

குரு (அக்டோபர் 18): ஐப்பசி மாதத்தின் தொடக்கத்தில் அக்டோபர் 18 ஆம் தேதி குரு பகவான் கடக ராசியில் உச்சம் பெற்று சஞ்சரிக்க இருக்கிறார். குருவின் வலிமையான இந்த நிலையானது பல ராசிகளுக்கு நன்மை தரக்கூடும். குறிப்பாக அவரது பார்வை பெறும் ராசிகள், நல்ல பலன்களை அனுபவிக்க உள்ளனர்.

சுக்கிரன் (நவம்பர் 2 - நவம்பர் 26): சுக்கிர பகவான் நவம்பர் 2 ஆம் தேதி அன்று தனது சொந்த வீடான துலாம் ராசிக்கு சென்று ஆட்சி பலம் பெறுகிறார். சுக்கிரன் ஆட்சி பலம் பெறுவது கலை, அழகு, காதல், ஆடம்பர விஷயங்களில் நல்ல முன்னேற்றத்தையும், மகிழ்ச்சியையும் கொடுக்கும். மேலும் சுக்கிரனுடன் சூரியன் சேர்ந்து சுக்ராதித்ய யோகம் உருவாவது பல ராசிகளுக்கு எதிர்பாராத நன்மைகளைத் தரும்.

செவ்வாய் (அக்டோபர் 27 - டிசம்பர் 7): செவ்வாய் பகவான் அக்டோபர் 27 ஆம் தேதி தனது சொந்த வீடான விருச்சிக ராசிக்கு சென்று ஆட்சி பலம் பெறுகிறார். செவ்வாய் பகவான் ஆட்சி பலம் பெறுவது தைரியம், துணிச்சல், நிலம், சகோதர உறவுகள் ஆகியவற்றில் வலு சேர்க்கும்.

புதன் (அக்டோபர் 24 - நவம்பர் 23): புதன் பகவான் அக்டோபர் 24 ஆம் தேதி விருச்சிக ராசிக்கு செல்கிறார்.

சனி மற்றும் ராகு: சனிபகவான் வக்கிர இயக்கத்தில் பயணிக்கிறார். லாப ஸ்தானத்தில் கும்ப ராசியில் ராகுவுடன் இணைந்து சஞ்சரிக்கிறார். சனியும் ராகவும் நீண்ட நாட்களாக இதே நிலையில் இருப்பதால் சில ராசிக்காரர்களுக்கு குழப்பம், தாமதம் ஆகியவை ஏற்படலாம்.

24
ஐப்பசி மாதம் கவனமாக இருக்க வேண்டிய ராசிகள்
Image Credit : Asianet News

ஐப்பசி மாதம் கவனமாக இருக்க வேண்டிய ராசிகள்

ஐப்பசி மாத கிரக நிலைகளின் அடிப்படையில் சில ராசிகள் சற்று கவனமாக இருக்க வேண்டியது அவசியம். அந்த ராசிகள் பின்வருமாறு:
 

துலாம்

துலாம் ராசியின் அதிபதியான சுக்கிரனும், துலாம் ராசியில் நீச்சம் பெறும் சூரியனும் துலாம் ராசியில் சந்திப்பதால், குழப்பமான மனநிலை, உடல்நலக் குறைவு, முக்கிய முடிவுகளை எடுப்பதில் தாமதம் ஆகியவை ஏற்படலாம். தொழில் மற்றும் வேலையில் முடிவெடுக்கும் பொழுது பொறுமை அவசியம். உடல்நலத்திலும் ஆரோக்கியம் தேவை.

Related Articles

Related image1
Astrology: இந்த 3 ராசிக்காரர்கள் தீபாவளியன்று மகாலட்சுமியின் ஆசிகளை பரிபூரணமாகப் பெறுவீர்கள்.! செல்வம் குவியும்.!
Related image2
Astrology: சனியின் நட்சத்திரத்துக்கு செல்லும் செவ்வாய்.! தீபாவளிக்குப் பின் 3 ராசிகள் சொத்துக்களை வாங்கி குவிக்கப் போறீங்க.!
34
தனுசு
Image Credit : Asianet News

தனுசு

தனுசு ராசியின் அதிபதியான குரு பகவான் அஷ்டமத்தில் உச்சம் பெற்றாலும், அஷ்டமத்தில் இருப்பதால் வரவை விட செலவுகள் அதிகரிக்கலாம். மேலும் வளர்ச்சிக்கு இடையூறான சில சம்பவங்கள் நடக்க வாய்ப்பு உள்ளது. எனவே நிதி விஷயங்களில் அதிக எச்சரிக்கை தேவை. அதிக அலைச்சல், திடீர் பயணங்களால் ஆரோக்கியம் பாதிக்கப்படலாம். பணியிடத்தில் உயர் அதிகாரிகளுடன் நல்லுறவைப் பேணுவது நல்லது.

44
மகரம்
Image Credit : Asianet News

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு சனி வக்கிர நிலையில் இருப்பதால் சில காரியங்கள் நடைபெறுவது போல இருக்கும். ஆனால் கடைசி நேரத்தில் தடைபடும் சூழல் ஏற்படலாம். திடீர் செலவுகள், கடன் சுமை குறித்த மனக்கவலைகள் இருக்கலாம். முதலீடுகள் மற்றும் கடன் கொடுப்பது வாங்குவது போன்றவற்றில் அதிக கவனம் தேவை. வீண் விவாதங்களை தவிர்ப்பது பலன்களைத் தரும்.

(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

About the Author

RS
Ramprasath S
பொறியியல் பட்டதாரியான இவர், செய்திகள் மீது கொண்ட ஆர்வம் காரணமாக 4 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் பத்திரிக்கைத் துறையில் பணியாற்றி வருகிறார். மே 2025 முதல் ஏசியாநெட் தமிழ் இணையதளத்தில் தமிழ் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, பொழுதுபோக்கு, லைஃப்ஸ்டைல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ஜோதிடம்
இராசி அறிகுறிகள்
ஜோதிடம்
ராகுல் காந்தி

Latest Videos
Recommended Stories
Recommended image1
இந்தாண்டின் முதல் சந்திர கிரகணம்.! மார்ச் மாதம் அதிக பாதிக்கப்புள்ளாகும் 3 ராசிகள் இவர்கள் தான்.!
Recommended image2
30 வருடங்களுக்குப் பின் மீன ராசியில் சந்திக்கும் சனி-புதன்.! இந்த 3 ராசிகளுக்கு அடிக்கும் யோகம்.!
Recommended image3
சூரிய கிரகணத்தின் தாக்கம் இன்னும் முடியவில்லை.! அடுத்த 15 நாட்கள் தூக்கத்தை தொலைக்கப் போகும் 4 ராசிகள்.!
Related Stories
Recommended image1
Astrology: இந்த 3 ராசிக்காரர்கள் தீபாவளியன்று மகாலட்சுமியின் ஆசிகளை பரிபூரணமாகப் பெறுவீர்கள்.! செல்வம் குவியும்.!
Recommended image2
Astrology: சனியின் நட்சத்திரத்துக்கு செல்லும் செவ்வாய்.! தீபாவளிக்குப் பின் 3 ராசிகள் சொத்துக்களை வாங்கி குவிக்கப் போறீங்க.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved