MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Astrology
  • மிதுன ராசி குரு பெயர்ச்சி 2026: ஜென்ம குரு விலகியாச்சு! இனி அதிர்ஷ்டம் உங்கள் பக்கம்.. ஜாக்பாட் அடிக்கப்போகும் Gemini Zodiac Signs!

மிதுன ராசி குரு பெயர்ச்சி 2026: ஜென்ம குரு விலகியாச்சு! இனி அதிர்ஷ்டம் உங்கள் பக்கம்.. ஜாக்பாட் அடிக்கப்போகும் Gemini Zodiac Signs!

Mithuna Rasi Guru Peyarchi 2026 Palan and Pariharam: 2026 குரு பெயர்ச்சியால் மிதுன ராசிக்கு 2-ம் இடத்தில் உச்சம் பெறும் குரு பகவான் என்னென்ன அதிர்ஷ்டங்களைத் தரப்போகிறார்? பொருளாதாரம், குடும்பம் மற்றும் தொழில் குறித்த முழு விவரம் இதோ.

3 Min read
Author : Rsiva kumar
Published : Apr 22 2026, 07:06 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
19
மிதுன ராசி குரு பெயர்ச்சி 2026
Image Credit : Getty

மிதுன ராசி குரு பெயர்ச்சி 2026

திருக்கணித பஞ்சாங்கப்படி 2026ஆம் ஆண்டுக்கான குரு பெயர்ச்சி வரும் ஜூன் 2ஆம் தேதி நிகழ்கிறது. இதில் குரு பகவான் மிதுன ராசியிலிருந்து உச்ச வீடான கடக ராசிக்கு பெயர்ச்சியாகிறார். இது மிதுன ராசிக்கு 2ஆம் வீடு. பொதுவாக 2ஆம் வீடு தன ஸ்தானத்தை குறிக்கிறது. அதனடிப்படையில் மிதுன ராசிக்கு இது ஒரு ஜாக்பாட் அடிக்கும் காலமாக அமையப் போகிறது. காசு, பணம் நிறைய வரப் போகிறது. பொருளாதாரத்தில் ஏற்றம் நிறைந்த ஒரு காலகட்டம். மிதுன ராசிக்கான 2026 குரு பெயர்ச்சி பலன்கள், பரிகாரங்கள் மற்றும் நட்சத்திர வாரியாக பலன்கள் பற்றி இந்த தொகுப்பில் முழுவதுமாக பார்க்கலாம்.

உச்ச குரு தரும் அதிர்ஷ்டம்; பண மழையில் நனையப்போகும் மேஷ ராசி! 2026 குரு பெயர்ச்சியால் காத்திருக்கும் ராஜயோகம்!

29
ஜென்ம குரு விலகியாச்சு! இனி அதிர்ஷ்டம் உங்கள் பக்கம்
Image Credit : Getty

ஜென்ம குரு விலகியாச்சு! இனி அதிர்ஷ்டம் உங்கள் பக்கம்

மிதுன ராசி அன்பர்களுக்கு நிகழவிருக்கும் குரு பெயர்ச்சி ஒரு மிகப்பெரிய ஜாக்பாட் காலமாக அமையும் என்று ஜோதிடர் கூறுகிறார். கடந்த ஒரு வருடமாக ஜென்ம குருவாக இருந்து வந்த குரு பகவான், இப்போது உங்கள் ராசிக்கு இரண்டாம் இடமான குடும்பம் மற்றும் தன ஸ்தானத்திற்கு பெயர்ச்சியாகிறார்.

கடகத்தில் குரு உச்சம் பெறுவதால், இது மிதுன ராசிக்காரர்களுக்கு குபேர யோகத்தை வழங்கும் காலமாகும். கடந்த காலங்களில் எல்லா பாரமும் என் தலைமேல் தான் விழுகிறது" என்று வருந்தியவர்களுக்கு இனி விமோசனம் கிடைக்கும். பொருளாதார ரீதியாக இக்காலம் பொற்காலமாக இருக்கும். நீண்ட நாட்களாக வராமல் இருந்த பணம் கைக்கு வந்து சேரும், புதிய முதலீடுகள் மற்றும் சொத்து சேர்க்கை உண்டாகும்.

39
ஜாக்பாட் அடிக்கப்போகும் Gemini Zodiac Signs
Image Credit : Generated by google gemini AI

ஜாக்பாட் அடிக்கப்போகும் Gemini Zodiac Signs

முக்கியமாக, மிதுன ராசியினரின் வாக்குக்குச் சமூகத்தில் பெரும் மதிப்பு கிடைக்கும். முன்பு இவர்களின் பேச்சை உதாசீனப்படுத்தியவர்கள் கூட இனி தேனாக மதிக்கத் தொடங்குவார்கள். குடும்பத்தில் இருந்த சண்டை சச்சரவுகள் நீங்கி அமைதி நிலவும். திருமணமாகாதவர்களுக்குத் திருமண பாக்கியமும், புத்திர பாக்கியமும் கைகூடி வரும். குருவின் பார்வை பலன்கள் மிதுனத்திற்கு அபரிமிதமான நன்மைகளைத் தருகின்றன. குருவின் 5-ஆம் பார்வை உங்கள் ராசிக்கு ஆறாம் இடத்தைப் பார்ப்பதால், நீண்ட காலமாகக் கழுத்தை நெரித்த கடன்கள் தீரும், மறைமுக எதிரிகள் ஒழிவார்கள், மற்றும் உடல்நலக் கோளாறுகள் நீங்கிப் புத்துணர்ச்சி பெறுவீர்கள்.

49
2-ல் உச்ச குரு தரும் பலன்கள்
Image Credit : Getty

2-ல் உச்ச குரு தரும் பலன்கள்

7-ஆம் பார்வை எட்டாம் இடத்தின் மீது விழுவதால், அவமானங்கள் நீங்கி கௌரவம் நிலைநாட்டப்படும் மற்றும் ஆயுள் பலம் கூடும். 9-ஆம் பார்வை பத்தாம் இடத்தைப் பார்ப்பதால், முடங்கிக் கிடந்த தொழில் மற்றும் வியாபாரம் புதிய உத்வேகத்துடன் வளர்ச்சியடையும்; புதிய வாடிக்கையாளர்கள் மற்றும் வங்கி லோன் உதவிகள் எளிதாகக் கிடைக்கும்.

Guru Peyarchi 2026: ரிஷப ராசிக்கு ஜாக்பாட்! 3-ல் அமரும் உச்ச குருவால் குவியப்போகும் செல்வம்.. அதிர்ஷ்ட பலன்கள் இதோ!

59
மிருகசீரிஷம் (3, 4-ம் பாதம்) – நட்சத்திர பலன்
Image Credit : Generated by google gemini AI

மிருகசீரிஷம் (3, 4-ம் பாதம்) – நட்சத்திர பலன்

செவ்வாய் பகவானை அதிபதியாகக் கொண்ட மிருகசீரிஷ நட்சத்திர அன்பர்களுக்கு இந்த குரு பெயர்ச்சியானது உங்களுக்கு அசையாச் சொத்துச் சேர்க்கையை கொடுக்க போகிறது. 2ல் குரு அமர்வதால் வருமானம் இரட்டிப்பாகும். பொருளாதாரத்தில் ஏற்றம் உண்டாகும். நீண்ட நாட்களாக வராமலிருந்த பணம் திரும்ப கிடைக்கும். சொத்து விற்பனை மூலம் அதிர்ஷ்டம் உண்டாகும். சகோதர வழியில் இருந்த மனக்கசப்பு நீங்கி ஒற்றுமை மேலோங்கும். வீடு கட்டும் யோகம் தேடி வரும். கட்டிய வீட்டை கூட வாங்கலாம். கட்டுமானத் துறை, பொறியியல் துறையில் இருப்பவர்களுக்குப் புதிய பொறுப்புகள் தேடி வரும். ஊதிய உயர்வு கிடைக்கப்பெறும். செவ்வாய்க்கிழமை தோறும் முருகப் பெருமானுக்கு செவ்வரளி மலர் சாற்றி வழிபாடு செய்து வர எல்லா நன்மையும் உண்டாகும்.

69
திருவாதிரை நட்சத்திர பலன்
Image Credit : Getty

திருவாதிரை நட்சத்திர பலன்

ராகு பகவானை அதிபதியாகக் கொண்ட திருவாதிரை நட்சத்திர அன்பர்களுக்கு இந்த குரு பெயர்ச்சி அதிரடியான உயர்வையும், வெளிநாட்டு யோகத்தையும் கொண்டு வந்து சேர்க்கும். பொருளாதாரத்தில் எதிர்பாராத யோகம் உண்டாகும். பங்குச் சந்தை மற்றும் ஆன்லைன் வர்த்தகம் மூலமாக இரட்டிப்பு லாபம் கிடைக்கும். வெளியூர், வெளிநாடு சென்று வருவீர்கள். கல்விக்காக வெளிநாடு செல்லும் வாய்ப்பு வந்து சேரும். ஐடி, மீடியா துறையில் இருப்பவர்களுக்கு கண்டிப்பாக பதவி உயர்வு கிடைக்கும். திறமைக்கு ஏற்ப அங்கீகாரம் கிடைக்கப் பெறுவீர்கள். சனிக்கிழமை தோறும் ராகு காலத்தில் துர்க்கை அம்மனுக்கு நெய் தீபம் ஏற்றி வழிபட எல்லா தடைகளும் நீங்கும்.

79
புனர்பூசம் (1, 2, 3-ம் பாதம்) நட்சத்திர பலன்
Image Credit : Pixabay

புனர்பூசம் (1, 2, 3-ம் பாதம்) நட்சத்திர பலன்

குரு பகவானைத் தனது அதிபதியாகக் கொண்ட புனர்பூச நட்சத்திர அன்பர்களுக்கு உங்களது நட்சத்திர அதிபதி குரு பகவானே உச்சம் பெறுவதால் உங்களுக்கு இது ராஜயோகக் காலம். கையில் பணப்புழக்கம் அதிகமாகவே இருக்கும். புதிய தொழில்களைத் தொடங்குவீர்கள். செல்வாக்கு மிக்கவர்களின் நட்பு கிடைக்கும். தடைபட்ட சுபகாரியங்கள் அடுத்தடுத்து நடக்கும். ஒரு சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். பேச்சாற்றல் மூலமாக எல்லா காரியங்களையும் சாதித்துக் கொள்வீர்கள். வியாழக்கிழமை தோறும் தட்சிணாமூர்த்திக்கு மஞ்சள் நிற மலர்களால் அர்ச்சனை செய்து வர யோகம் பெருகும் என்பது குறிப்பிடத்தக்கது.

89
2026 குரு பெயர்ச்சியானது மிதுன ராசி
Image Credit : Asianet News

2026 குரு பெயர்ச்சியானது மிதுன ராசி

மொத்தத்தில், 2026 குரு பெயர்ச்சியானது மிதுன ராசியினரின் கண்ணீரைத் துடைத்து, அவர்களை ராஜ நிலைக்கு உயர்த்தும் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும். இருப்பினும், இந்த நற்பலன்கள் 100% முழுமையாகக் கிடைப்பதற்கு அவரவர் தனிப்பட்ட ஜாதகத்தில் நடக்கும் தசாபுத்தி மற்றும் அஷ்டகவர்க்கப் பரல்கள் சாதகமாக இருக்க வேண்டும் என்றும் ஜோதிடர்கள் அறிவுறுத்துகிறார்.

99
பொறுப்பு
Image Credit : Asianet News

பொறுப்பு

இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள பலன்கள் மற்றும் ஜோதிடத் தகவல்கள் அனைத்தும் பொதுவான கணிப்புகளே ஆகும். இவை தனிநபரின் பிறந்த ஜாதகம், தசாபுத்தி மற்றும் கிரக நிலைகளுக்கு ஏற்ப மாறுபடக்கூடும். வாசகர்கள் இந்தத் தகவல்களைத் தங்களின் மேலான அறிவைப் பயன்படுத்திப் பரிசீலிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இதில் கூறப்பட்டுள்ள பலன்கள் மற்றும் பரிகாரங்களால் ஏற்படும் விளைவுகளுக்கு இந்தத் தளத்தின் நிர்வாகமோ அல்லது ஆசிரியரோ பொறுப்பேற்க மாட்டார்கள். ஒரு முக்கிய முடிவை எடுக்கும் முன் தகுந்த ஜோதிட நிபுணரை ஆலோசிப்பது சிறந்தது.

About the Author

RK
Rsiva kumar
நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.
ஜோதிடம்
இராசி அறிகுறிகள்
ஜோதிடம்
குரு பெயர்ச்சி (தமிழ்)
குரு பெயர்ச்சி

Latest Videos
Recommended Stories
Recommended image1
Astrology: விலகும் ராகு கேது தோஷம்.! 3 ராசிகளுக்கு இனி செல்வம் குவியுமாம்.! சொத்து, வீடு, வாசல் சேருமாம்.!
Recommended image2
Today Rasi Palan : ஏப்ரல் 22 - கஜகேசரி யோகத்துடன் இன்று உருவாகும் 6 யோகங்கள்.! மேஷம் முதல் மீனம் வரை - 12 ராசிகளுக்குமான ராசி பலன்கள்.!
Recommended image3
Saturn Transit Results: மீன ராசியில் உதயமாகும் சனி பகவான்.! இந்த 3 ராசிகளுக்கும் பணவரவு குவிய போகுது
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved