நடிகை ஸ்ருதிஹாசன், சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசும்போது, தன்னுடைய தந்தை இயக்கத்தில் வெளியான படத்தை ரிலீஸ் சமயத்தில் ரசிகர்கள் கொண்டாடாமல் தற்போது கிளாசிக் படம் என கொண்டாடுவதாக கூறி இருக்கிறார்.
Shruti Haasan About Kamal Haasan Movie : கமல்ஹாசன் திரைக்கதை எழுதி இயக்கிய படம் 'ஹே ராம்'. 2000-ல் வெளியான இப்படம் இன்று ஒரு கிளாசிக் படமாக கருதப்படுகிறது. தற்போது, இந்தப் படம் குறித்து ஸ்ருதி ஹாசன் கூறிய வார்த்தைகள் விவாதப் பொருளாகியுள்ளன. படம் வெளியான நேரத்தில் அதைப் பார்க்க யாரும் இல்லை என்றும், ஆனால் இன்று அந்தப் படத்தை ஒரு கிளாசிக் என்று கூறுகிறார்கள் என்றும் ஸ்ருதி ஹாசன் கூறுகிறார். அவரின் இந்த பேச்சு இணையத்தில் பேசுபொருளாகி உள்ளது.
அந்த பேட்டியில் ஸ்ருதிஹாசன் கூறியதாவது : "அப்பா இயக்கிய ஹே ராம் படத்தை சமீபத்தில் தியேட்டரில் பார்த்தேன். ஒவ்வொரு பிரேமையும் அவர் அமைத்த விதம் பாராட்டத்தக்கது. சமீபத்தில் இந்தப் படம் மீண்டும் ரிலீஸ் செய்யப்பட்டது. க்யூப்ஸ் தியேட்டரில் அந்தப் படத்தைப் பார்த்த அனுபவத்தை விவரிக்க வார்த்தைகள் இல்லை. அந்த அளவுக்கு எனக்கு ஆச்சரியமாக இருந்தது. இன்று அந்தப் படத்தை பலரும் வானளாவப் புகழ்கிறார்கள். கமல் சார் எப்படி இவ்வளவு பிரமாதமாக இந்தப் படத்தை எடுத்தார் என்று பலர் கேட்கிறார்கள். ஆனால், படம் ரிலீஸான நேரத்தில் யாரும் பாராட்டவில்லை" என்கிறார் ஸ்ருதி ஹாசன்.

ஸ்ருதிஹாசன் பேட்டி
ஹாலிவுட் ரிப்போர்ட்டர் இந்தியாவுக்கு அளித்த பேட்டியில் ஸ்ருதி ஹாசன் இவ்வாறு பதிலளித்தார். அதே சமயம், தென்னிந்திய சினிமாவின் அதிரடி நடன இயக்குநர்களான அன்பறிவு மாஸ்டர்ஸ் இயக்கும் படம்தான் கமல்ஹாசனின் புதிய படம். மலையாளத்தில் இருந்து ஷ்யாம் புஷ்கரன் திரைக்கதை எழுதும் இப்படத்திற்கு ஜேக்ஸ் பிஜாய் இசையமைக்கிறார். படப்பிடிப்பு நடைபெற்று வரும் இப்படம் அடுத்த ஆண்டு வெளியாகும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஸ்ருதிஹாசனும் மறுபுறம் பிசியாக நடித்து வருகிறார். கடைசியாக அவர் நடித்த கூலி படம் இந்த ஆண்டு ரிலீஸ் ஆனது. அப்படத்தில் ரஜினியின் மகளாக நடித்திருந்தார். அப்படத்தை தொடர்ந்து மிஷ்கின் இயக்கத்தில் உருவாகி வரும் டிரெய்ன் படத்தில் நடித்துள்ளார். இதில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்திருக்கிறார் ஸ்ருதி. இதுதவிர ஜனநாயகன் படத்திலும் ஸ்ருதிஹாசன் நடித்திருப்பதாக கூறப்படுகிறது.


