Dec 19 Meena Rasi Palan: டிசம்பர் 19, 2025 தேதி மீன ராசிக்கான பொதுவான பலன்கள், நிதி நிலைமை, தனிப்பட்ட வாழ்க்கை, பரிகாரம் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.
டிசம்பர் 19, 2025 மீன ராசிக்கான பலன்கள்:
மீன ராசி நேயர்களே, இன்றைய நாள் உங்களுக்கு கலவையான பலன்கள் கிடைக்கும் நாளாக இருக்கும். சனி பகவானின் தாக்கம் இருப்பதால் பணிகளில் மந்த நிலை ஏற்படலாம். தொழில் ஸ்தானத்தில் சுப கிரகங்கள் இருப்பதால் தொழில் மற்றும் உத்தியோகத்தில் புதிய பொறுப்புகள் ஏற்படலாம். திட்டமிட்ட காரியங்களில் தடைகள் ஏற்பட்டாலும், இறுதியில் வெற்றி உங்கள் பக்கம்தான். நிதானமாக இருக்க வேண்டியது அவசியம்.
நிதி நிலைமை:
இன்று பணப்புழக்கம் சீராக இருக்கும். எதிர்பாராத செலவுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. அதிக ஆபத்து உள்ள திட்டங்களில் முதலீடு செய்வதை தவிர்ப்பது நல்லது. குறிப்பாக பங்குச் சந்தைகளில் முதலீடுகள் வேண்டாம். கடனுக்கு ஜாமீன் கையெழுத்து போடுவதில் கவனம் தேவை. பழைய கடன்களை அடைப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும்.
தனிப்பட்ட வாழ்க்கை:
குடும்பத்தில் சிறு கருத்து வேறுபாடுகள் தோன்றலாம். விட்டுக் கொடுத்த செல்ல வேண்டியது அமைதியைத் தரும். வாழ்க்கைத் துணையின் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவீர்கள். நண்பர்கள் அல்லது உறவினர்களுடன் பேசும்பொழுது வார்த்தைகளில் நிதானம் தேவை. சண்டை, சச்சரவு ஏற்பட வாய்ப்பு இருப்பதால் தேவையற்ற விவாதங்களை தவிர்க்கவும்.
பரிகாரங்கள்:
இன்றைய தினம் சிவபெருமானை மனதார வழிபடுவது வலிமையைத் தரும். குருவின் அருளைப் பெற மஞ்சள் நிற மலர்களால் அர்ச்சனை செய்யவும். சனி பகவானின் தாக்கத்தைக் குறைக்க காலை அல்லது மாலை வேலைகளில் தயிர் சாதம் தானமாக வழங்கலாம். “ஓம் நமச்சிவாய:” மந்திரத்தை 108 முறை உச்சரிக்கலாம்.
முக்கிய குறிப்பு:
இந்த பலன்கள் பொதுவானவை. உங்கள் தனிப்பட்ட ஜாதகத்தைப் பொறுத்து பலன்களில் மாற்றங்கள் ஏற்படலாம்.


