Tamil

பணியிடத்தில் கோபத்தை கட்டுப்படுத்த 6 எளிய மற்றும் சிறந்த வழிகள்!

Tamil

ஆழ்ந்த சுவாசம் மேற்கொள்ளுங்கள் :

கோபம் வரும்போது இதயத்துடிப்பு அதிகரிக்கும். உடனே ரியாக்ட் செய்யாமல், கண்களை மூடி ஆழமாக மூச்சு விடுங்கள். இது நரம்புகளை அமைதிப்படுத்தி பதற்றத்தைக் குறைக்கும்.

Image credits: Getty
Tamil

சிறிய இடைவேளை எடுங்கள் :

கோபம் வரும்போது அந்த இடத்தை விட்டு தள்ளி இருப்பது நல்லது. சிறிது தண்ணீர் குடிப்பது அல்லது நடைப்பயணம் செல்வது மனதை மாற்ற உதவும். அமைதி காக்க இது ஒரு எளிய வழி.

Image credits: Getty
Tamil

நேர்மறையான சுய உரையாடல் :

கோபத்தில் "முடியாது" என நினைக்காமல், "என்னால் சமாளிக்க முடியும், அமைதியாக இரு" என உங்களுக்குள் நேர்மறையாகப் பேசுங்கள். இது மனநிலையை மென்மையாக மாற்றும்.

Image credits: Getty
Tamil

தகவல் தொடர்பு மிக அவசியம் :

கோபத்தில் கத்தாமல், கருத்தை நிதானமாகச் சொல்லுங்கள். மற்றவரைத் திட்டுவதை விட, அந்தச் செயல் உங்களை எப்படிப் பாதித்தது என்பதை மரியாதையுடன் விளக்குவதே சிறந்தது.

Image credits: Getty
Tamil

ஆதரவை நாடுங்கள் :

கோபத்தை மனதிற்குள் பூட்டாதீர்கள். நம்பிக்கையான நண்பர் அல்லது மேலதிகாரியிடம் பகிருங்கள். அவர்கள் உங்கள் குறைகளைத் தீர்க்கவும், நல்வழி காட்டவும் கண்டிப்பாக உதவுவார்கள்.

Image credits: Getty
Tamil

விழிப்புணர்வுடன் இருத்தல் :

கடந்த கால கசப்பு, எதிர்காலக் கவலைகளை விடுத்து, தற்போதைய வேலையில் மட்டும் கவனம் செலுத்துங்கள். இது கோபத்தைக் குறைக்கும். தியானம், யோகா இதற்குச் சிறந்த பலன் தரும்.

Image credits: Getty

Fashion: பெண்களுக்கான ஸ்டைலான, சவுகரியமான கோடைகால குர்தாக்கள்!

Hemoglobin Levels: ஹீமோகுளோபின் அதிகரிக்க 7 நாட்கள் போதும்.. ஆண்களுக்கு? பெண்களுக்கு? எவ்வளவு இருக்கணும்?

Fridge Safety: கோடையில் இந்த தப்பை செஞ்சா உங்க ஃபிரிட்ஜ் வெடிகுண்டு மாதிரி வெடிக்கலாம்! ஜாக்கிரதை

ஹோட்டல் மாதிரி பூ போன்ற இட்லி வேண்டுமா? உளுந்துடன் இந்த ஒரு பொருளை சேர்த்தால் போதும்!