Tamil

முடி அடர்த்தியா வளர ஆளி விதை

முடி அடர்த்தியாகவும் நீளமாகவும் வளர ஆளி விதையை எப்படி பயன்படுத்துவது எனப் பார்க்கலாம். ஆளி விதையை இப்படி யூஸ் பண்ணிப் பாருங்க.

Tamil

ஆளி விதையின் நன்மைகள்

முடி வளர்ச்சிக்கு உதவும் சிறந்த பொருட்களில் ஒன்று ஆளி விதை. இதில் உள்ள ஒமேகா-3 கொழுப்பு அமிலங்களும், ஆன்டிஆக்ஸிடன்ட்களும் முடிக்கு நல்ல வலிமையைக் கொடுக்கும்.
Image credits: Social media
Tamil

ஆளி விதை ஹேர் மாஸ்க்: செய்முறை

2 டேபிள்ஸ்பூன் ஆளி விதையை 2 கப் தண்ணீரில் சேர்க்கவும். அதனுடன் 2 டேபிள்ஸ்பூன் தேங்காய் எண்ணெய் சேர்த்து நன்றாகக் கலக்க வேண்டும்.
Image credits: social media
Tamil

ஷாம்பு கொண்டு முடியை அலசவும்

இந்த மாஸ்க்கை முடியில் தடவி 2 மணி நேரம் அப்படியே விடவும். பிறகு, மைல்டான ஷாம்பு பயன்படுத்தி அலசவும். இது உங்கள் முடிக்கு மென்மையையும் பளபளப்பையும் கொடுக்கும்.

Image credits: social media
Tamil

இன்னொரு வகை ஹேர் பேக்

ஒரு பாத்திரத்தில் இரண்டு கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்கவும். தண்ணீர் கொதித்ததும், அதில் ஆளி விதைகளைச் சேர்க்கவும். சுமார் 10-15 நிமிடங்கள் வரை அதை வேகவிட வேண்டும்.
Image credits: Getty
Tamil

கெட்டியான பதம் வரும் வரை காய்ச்சவும்

கலவையை அடிபிடிக்காமல் இருக்க, அவ்வப்போது கிளறி விடவும். அது கெட்டியான ஜெல் பதம் வந்தவுடன், அடுப்பை அணைத்துவிடவும்.
Image credits: Getty
Tamil

வடிகட்டி ஜெல்லை பிரிக்கவும்

விதைகளில் இருந்து ஜெல்லைப் பிரிக்க, ஒரு வடிகட்டி அல்லது மெல்லிய துணியைப் பயன்படுத்தவும். இந்த கலவையை வடிகட்டி, ஜெல்லை ஒரு பாத்திரத்தில் சேகரிக்கவும்.
Image credits: Getty
Tamil

இந்த ஜெல்லை தலையில் தடவவும்

ஜெல் ஆறிய பிறகு, அதனுடன் கற்றாழை ஜெல், வைட்டமின் ஈ கேப்ஸ்யூல் மற்றும் பாதாம் எண்ணெய் சேர்த்து நன்கு கலக்கவும். பிறகு இந்த ஜெல்லை தலையில் தடவி மசாஜ் செய்யவும்.
Image credits: social media

Summer Tips: கோடை ஆரோக்கியம்: தவிர்க்க வேண்டிய 5 முக்கிய விஷயங்கள்!

ஆப்ரிகாட் பழங்களைச் சாப்பிடுவதால் கிடைக்கும் அற்புதமான நன்மைகள்!

Egg : தினமும் ஒரு முட்டை சாப்பிடுவதால் கிடைக்கும் 7 ஆரோக்கிய நன்மைகள்

Heat wave : கடும் வெயிலில் உடலில் நீர்ச்சத்தை அதிகரிக்க 6 எளிய வழிகள்!