Tamil

கோடை ஆரோக்கியம்: தவிர்க்க வேண்டிய 5 முக்கிய விஷயங்கள்!

Tamil

காஃபின் கலந்த பானங்கள்:

காபி, டீ, சோடா போன்றவை உடலை விரைவில் நீரிழப்புக்கு உள்ளாக்கும். எனவே, தாகத்திற்கு இவற்றைத் தவிர்த்து, ஆரோக்கியமான இளநீர் அல்லது மோர் குடிப்பது உடலுக்கு மிகவும் நல்லது.

Image credits: Getty
Tamil

நேரடி வெயில்:

முற்பகல் 11 முதல் மாலை 4 மணி வரை வெயில் அதிகமாக இருக்கும். அந்த நேரத்தில் வெளியே செல்வதைத் தவிர்க்கவும். வெளியே சென்றால் மறக்காமல் குடை அல்லது தொப்பி அணிந்து செல்லுங்கள்.

Image credits: Getty
Tamil

அதிக காரமான உணவுகள்:

கோடையில் செரிமானம் மெதுவாக இருக்கும். அதனால் அதிக காரம், மசாலா உணவுகளைத் தவிர்க்கவும்; இவை உடல் வெப்பத்தை அதிகரித்து அஜீரணத்தை உண்டாக்கும். மிதமான உணவே உடலுக்கு நல்லது.

Image credits: Getty
Tamil

குளிர்ந்த நீர் (Ice Water):

வெயிலில் இருந்து வந்ததும் ஐஸ் வாட்டர் குடிப்பது ரத்த நாளங்களைச் சுருக்கி செரிமானத்தைக் கெடுக்கும். தற்காலிக குளிர்ச்சியை விட, ஆரோக்கியமான மண்பானை தண்ணீரே உடலுக்கு மிகவும் நல்லது.

Image credits: Getty
Tamil

தவறான உடைகள்:

இறுக்கமான சிந்தெடிக் ஆடைகள் வியர்க்குரு மற்றும் தோல் அலர்ஜியை உண்டாக்கும். காற்றோட்டமான பருத்தி ஆடைகளையே எப்போதும் அணியுங்கள்; அதுவே சருமத்திற்குப் பாதுகாப்பானது.

Image credits: Getty

ஆப்ரிகாட் பழங்களைச் சாப்பிடுவதால் கிடைக்கும் அற்புதமான நன்மைகள்!

Egg : தினமும் ஒரு முட்டை சாப்பிடுவதால் கிடைக்கும் 7 ஆரோக்கிய நன்மைகள்

Heat wave : கடும் வெயிலில் உடலில் நீர்ச்சத்தை அதிகரிக்க 6 எளிய வழிகள்!

Health : யூரிக் அமிலம் பிரச்சனை உள்ளவர்கள் தவிர்க்க வேண்டிய 7 பழங்கள்