Tamil

சிவக்குமார்:

பழம்பெரும் நடிகர் சிவக்குமார் கடந்த சில வருடங்களாக சினிமா துறையில் இருந்து விலகி, ஓவியம், மேடை பேச்சு, ஆன்மிகம், யோகா போன்றவற்றில் கவனம் செலுத்தி வருகிறார்.

Tamil

சூர்யா - கார்த்தி

இவரை தொடர்ந்து இவரது மகன்களான சூர்யா - கார்த்தி இருவருமே தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக உள்ளனர்.

Image credits: Google
Tamil

ரெட்ரோ:

இந்நிலையில் சூர்யா தற்போது இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடித்துள்ள, 'ரெட்ரோ' திரைப்படம் மே 1-ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது.

Image credits: Google
Tamil

புரமோஷன் பணிகள்

இந்த படத்தின் புரமோஷன் பணிகள் தற்போது பரபரப்பாக நடந்து வரும் நிலையில், அண்மையில் இந்த படத்தின் ஆடியோ லான்ச் நிகழ்ச்சியும் நடந்தது.
 

Image credits: Twitter
Tamil

பெருமை பேச்சு:

இதில் கலந்து கொண்ட சூர்யாவின் தந்தை சிவகுமார் தன்னுடைய மகனை பற்றி மிகவும் பெருமையாக பேசினார்.
 

Image credits: Twitter
Tamil

சிக்ஸ் பேக்:

சூர்யாவுக்கு முன்பு தமிழ்நாட்டில் சிக்ஸ் பேக் வைத்த நடிகர் யாரும் இல்லை. அவர் தான் முதலில் சிக்ஸ் பேக் வைத்ததாக கூறி இருந்தார். இவருடைய இந்த கருத்து தற்போது சர்ச்சையாக மாறி உள்ளது.
 

Image credits: Google
Tamil

தனுஷ் - பொல்லாதவன்

இதுகுறித்து பேசியுள்ள விஷால், சினிமாவில் முதன் முதலில் சிக்ஸ் பேக் வச்சது நடிகர் தனுஷ் தான். பொல்லாதவன் படத்திற்காக வைத்தார்.

Image credits: google
Tamil

2 முறை சிக்ஸ் பேக் வைத்து நடித்தேன்:

அவரை தொடர்ந்து 2005-ல் ஒருமுறையும், மதகஜ ராஜா படத்திற்காக இன்னொரு முறையும் வைத்தேன். அது தெரியாமல் சிவகுமார் பேசி உள்ளார் என தெரிவித்துள்ளார்.

Image credits: google
Tamil

பதிலடி:

தன்னுடைய மகன் தான் முதல் சிக்ஸ் பேக் வைத்தவர் என பெருமையாக பேசிய சிவகுமாருக்கு விஷால் கொடுத்த பதிலடியாகவே இது பார்க்கப்படுகிறது.

Image credits: google

தமிழ்நாடு பாக்ஸ் ஆபிஸில் அதிக வசூல் அள்ளிய டாப் 10 படங்கள்

சூப்பர் சிங்கரில் தொகுப்பாளினியாக மாறிய சீரியல் நடிகை!

வைகை புயல் வடிவேலுவின் எவர் கிரீன் காமெடி டயலாக்!

ரீ-ரிலீஸில் பிளாப் ஆனதா தளபதி விஜய்யின் சச்சின்?