
இந்தியா ஒரு நாள் பாகிஸ்தானிடம் கையேந்தும்! பாகிஸ்தானுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்த டிரம்ப் !
இந்திய இறக்குமதிகள் மீது 25 சதவீத வரி மற்றும் கூடுதல் அபராதம் விதிப்பதாக அறிவித்த சில மணி நேரங்களில், பாகிஸ்தானுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்துள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் புதன்கிழமை (உள்ளூர் நேரம்) அறிவித்தார். பயங்கரவாதத்தை ஆதரிக்கும் பாகிஸ்தானின் எண்ணெய் வளங்களை கூட்டாக மேம்படுத்தும் முயற்சியை டிரம்ப் பாராட்டினார். "ஒரு நாள்" பாகிஸ்தான் புது தில்லிக்கு எண்ணெய் விற்பனை செய்யலாம் என்ற கருத்தையும் முன்வைத்தார்.