
பாகிஸ்தான் பயங்கரவாத முகாம்களின் ரேடார் படங்களை வெளியிட்டார் கர்னல் சோபியா குரேஷி !
பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் தாக்குதல் ஒன்றை நடத்தி இருக்கிறது. புதன்கிழமை மே 7ஆம் தேதி அதிகாலை 1 மணியளவில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டு இருக்கிறது. பயங்கரவாதிகளின் முகாம் மீது இந்த தாக்குதல் நடத்தப்பட்டதில் 90 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. இந்நிலையில் இந்திய விமானப் படையால் அழிக்கப்பட்ட பாகிஸ்தான் பயங்கரவாத முகாம்களின் ரேடார் படங்களை வெளியிட்டார் கர்னல் சோபியா குரேஷி .